அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். அது மணி சார் ஸ்டோரி லைன் கேட்கிற ஒவ்வொரு ஹீரோவுக்கும் நடக்கும்!"
"ஒவ்வொரு படத்திலும் ரசிக்கவைக்கிறீங்க! ஆனா, ஏன் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் படங் கள் பண்றீங்க?"
"அட்வான்ஸ் வாங்கி, எக்கச்சக்கமாப் பணம் பண்ணலாம்தான். ஆனா, நல்லசினிமா வுக்குத்தான் மனசு ஏங்குது. 50 லட்ச ரூபாயைத் தாண்டிட்டா, அப்புறம் பணம்கிறது வெறும் கலர் பேப்பர்தான். வெறுமனே பணத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்றது? ஒரு வீடு அழகா கட்டலாம். லேட்டஸ்ட் ஃபேஷனில் ஒரு கார். அப்புறம்..? எல்லாம் முடிச்சு நிமிர்ந்து பார்த்தா, 'நல்ல சினிமா'ன்னு உள்ளுக்குள் மனசு அடிச்சுட்டே இருக்கும். 'விக்ரம்னு ஒருத்தன் இருந்தான். அவன் அளவுக்கு யாரும் பண்ண லை'ன்னு எனக்குப் பின்னாடி பேசணும்... அது மட்டும் தான் என் கனவு!"
"ஆனா, அதுக்கு இப்போ போட்டி பலமா இருக்கே... கவனிக்கிறீங்களா?"
"இங்கே எல்லோருக்குமே ஸ்பேஸ் இருக்கு! சூர்யா சூப்பர் முன்னேற்றம் காட்டுறார். தனுஷ் சத்தமே இல்லாமல் சிறப்பான படங்களில் நடிக்கிறார். படங்களைத் தேர்ந்தெடுப்பதி லேயே ஆர்யா இப்ப ரொம்ப செலெக்டிவ்வா இருக்கார். நடிப்பில் கமல்ஹாசன், விக்ரம் மட்டும் தான்னு நினைக்காதீங்க. இதே ஊர்ல ஏழெட்டுப் பேரை நான் பார்த்திருக்கேன். நல்லவேளை, அவங்கள்லாம் சினிமாவுக்குள்ளே வரலை. ஆனா, எங்களுக்குள் தனிப்பட்ட போட்டி எதுவும் கிடையாது. நல்ல சினிமா கொடுக்கிறதில் மட்டும் தான் போட்டி போடுவோம். அதுதான் சரி!"
|