Published:Updated:

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

Published:Updated:

"சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!"
சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!
சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரா.வினோத்
சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!
சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

கோல்டன் ஸ்டார்' கணேஷ்... கன்னட சினிமாவின் வெள்ளி விழா நாயகன்! தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று துணிந்து பந்தயம் கட்டும் வெற்றிக் குதிரை. மிகச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல வருடப் போராட்டங்களுக் குப் பிறகு சின்னத்திரையில் தலை காட்டி சில்வர்ஸ்க்ரீன் ஹீரோ அந்தஸ்தைப் பிடித்த திறமைசாலி. பெங்களூரு, பனசங்கரி பகுதியில்அடுக்கு மாடிக் குடியிருப்பில் கணேஷைச் சந்திக்கச் சென்றபோது, வாசலுக்கே வந்து "வாங்க வாங்க!" என்று வாஞ்சையோடு அழைத்துச் செல்கிறார்.

"நீங்கள் கோல்டன் ஸ்டார் கணேஷ் ஆன கதை சொல்லுங்க?"

"நெலமங்களான்னு ஒரு குக்கிராமத்து விவசாயக் குடும்பம் என்னுடையது. சமயங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அளவுக்கு வறுமைதான். ஆனாலும் மாசச் சம்பளத்துக்கு ஏதோ ஒரு கவர்ன்மென்ட்வேலைக்குஅல்லா டாம, பெருசா

சாதிக்கணும்னு அப்பா-அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பெங்களூருக்கு வந்தேன். ஒரு நண்பனின் நண்பனை நம்பி! அப்பவே சினிமாதான் என் கனவு. ஆனால், சினிமா தியேட்டரில் படம் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு அப்போ கஷ்டம். இருந்தாலும், மனம் தளராம சினிமா வாய்ப்புக்கு கால் தேய நடந்தே அலைஞ்சேன். சின்னச் சின்னதா டி.வி. சீரியல் வாய்ப்புகள் கிடைச்சது. 'வட்டாரா'ன்னு ஒரு சீரியலில் வில்லன் கேரக்டர் கிடைச்சது. சின்ன ரோல்தான். ஆனால், பளிச்சுனு அது ஹிட் ஆகவும் 1,000 எபிசோடுகள் நடிக்கவெச்சுட்டாங்க. தொடர்ந்து வில்லன், ஹீரோவின் நண்பன், அண்ணன், தம்பின்னு சீரியல் வாய்ப்புகளா கிடைச்சுது. ஆனாலும், சினிமா வாய்ப்பு கனவாகத்தான் இருந்தது.

ஆனா, நான் நடிச்ச எல்லா சீரியல்களும் 500, 1,000 எபிசோடுகள் கடந்து ஓடிட்டு இருந்தன. ஒரு கட்டத்தில் ரொம்ப சலிப்பாயிருச்சு. அப்போதான் தமிழ் சேனலின் ஹிட் ஆகியிருந்த காமெடி டைம் நிகழ்ச்சி கன்னடத்தில் பண்ணாங்க. அதை நடத்தும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரே வாரத்தில் பயங்கர ரீச். 'காமெடி டைம் கணேஷ்'னு எங்கே போனாலும் சுத்தி வளைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பளிச் அடையாளம்தான் 'செல்லாட்டா' பட வாய்ப்பைத் தந்தது. நான் அதுவரை ஏங்கித் தவித்த வாய்ப்பு. உயிரைக் கொடுத்து நடிச்சேன். படம் ரிலீஸ் ஆச்சு. முதல் ஷோ முடியிற வரை என்உயிர் என் கிட்ட இல்லை. 'சாதாரண ஹிட் இல்லைப்பா... சூப்பர் டூப்பர் ஹிட்'னு சொன்னாங்க. கடவுளுக்கு நன்றி!

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

'நல்ல கதையில்தான் அடுத்து நடிக்கணும்'னு ரெண்டு வருடங்கள் காத்திருந்து பல போராட் டங்களுக்கு இடையே நடிச்ச 'முங்காரு மழே' படம் முதல் படத்தைக் காட்டிலும் பெரிய ஹிட். 500 சென்டர்களில் 50 நாள், 125 சென்டர்களில் 175 நாள் ஓடுச்சு படம். அடுத்து தமிழ் 'காதல்' படத்தின் கன்னட ரீ-மேக்கில் நடிச்சேன். என்னாலேயே நம்ப முடியலை... அதுவும் ஹிட்... ஹாட்ரிக் வெற்றி! அடுத்தடுத்து நடிச்ச எட்டுப் படங்களும் வெள்ளி விழாப் படங்கள். 'கோல்டன் ஸ்டார்'னு பட்டம் கொடுத்துக் கொண்டாடுறாங்க. இப்போ தமிழ் 'குஷி'யின் கன்னட ரீ-மேக்கில் நடிச்சுட்டு இருக்கேன். ப்ரியாமணி ஜோடி!"

"கன்னடத்தில் புதுசா யாரையும் வளரவிடமால் சிலர் மிரட்டி ஆதிக்கம் செய்வாங்கன்னு ஒரு பேச்சு இருக்கே..."

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!

"பேச்சுலாம் இல்லை. நீங்க சொல்றது உண்மைதான்! ஆனா, கடவுள் புண்ணியத்தில் எனக்கு அப்படி எதுவும் நடக்கலை. ஏன்னா, 'முங்காரு மழே' படத்தைத் தொடர்ந்து என் அடுத்தடுத்த படங்கள் எல்லாமே ஹிட். அப்போ மத்த யார் படங்களும் ஓடலை. எல்லோருக்கும் என் வெற்றிகள் ரொம்பவே ஆச்சர்யம் கொடுத்தன. அதனால், அப்போ என்னை மிரட்டவோ, கட்டுப்படுத்தவோ யாருக்கும் துணிச்சல் வரலைன்னு நினைக்கிறேன். எது எப்படியோ ஆர்வமும், கடின உழைப்பும் இருந் தால் நல்லது நடக்கும்னு புரிஞ்சுக் கிட்டேன்!"

"டெக்னிக்கல் சங்கதிகள், பரபர மார்க்கெட்டிங்னு தமிழ், தெலுங்கு சினிமாக்கள் எவ்வளவோ உயரம் போயிருச்சு. இன்னும் கன்னட சினிமா அந்தளவுக்கு வளரலைன்னு உங்களுக்கு ஆதங்கம் இருக்கா?"

"இல்லாம இருக்குமா? ஆனா, அதுக்குக் காரணம் கன்னட சினிமாவின் வியாபார வட்டம் ரொம்பச் சின்னது. ஆனா, இப்போதான் புதுப்புது முயற்சிகள், திறமையான டெக்னீ ஷியன்கள், பளீர் இயக்குநர்கள்னு இளைஞர்கள் கையில சினிமா வந்திருக்கு. இனி இங்கேயும் நிறைய நல்லது நடக்கும்!"- நம்பிக்கை மின்னுகிறது கணேஷின் கண்களில்!

சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!
சினிமாவில் மிரட்டல்கள் சகஜம்!