Published:Updated:

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

Published:Updated:

"சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!"
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நா.கதிர்வேலன்
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

"மனுஷனோட சந்தோஷம், துயரம் இரண்டுமே உறவுகள்தான்! அது உணர்வுபூர்வமானது. அன்பு, காதல் எல்லாத்தையும் செஸ் விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சுடும். உறவுகளை உணர்வோம். அது எப்படின்னு சொல்ற படம்தான் 'நான் மகான் அல்ல'. லவ்வர்ஸ் நெருக்கமா இருப்பாங்க. காதல்ல உருகிட்டு இருக்காங்கன்னு நினைச்சு பக்கத்தில் போனா, சண்டை பிடிச்சுக்கிட்டு இருப்பாங்க. இப்படி எல்லாவற்றையும் பக்கத்தில் பார்த்து எடுத்த படம் இது. நல்ல படம்னு நீங்க சொல்றதுக்கு முன்னாடி நானே சர்ட்டிஃபிகேட் தர்றேன்" - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன். 'வெண்ணிலா கபடிக் குழு'வில் கவனம் ஈர்த்தவர்.

"என்ன சிட்டி பக்கம் வந்துட்டீங்க?"

" 'பொல்லாதவன்' படம் பார்த்ததும், 'இது மாதிரி ஒரு படம் பண்ணணும்'னு நினைச்சேன். கவாஸ்கர் ஆகணும் என்பதுதான் டெண்டுல்கரின் ஆசை. ஆனால், டெண்டுல்கர் இப்போ இருக்கிற இடம் வேறு இல்லையா? அது மாதிரி 'நான் மகான் அல்ல' வேற ஒரு இடத்துக்கு வந்திருச்சு. நகரம் என்பது அழகான ஒரு நரகம். அது எப்பவும் நல்லவங்களைச் சாப்பிட ரெடியா இருக்கும். அதில் எவ்வளவு கவனமா இருக்கணும்னு சொல்லி இருக்கேன். என்னுடைய கேரியரில் அடுத்த அடியை அழுத்தமா எடுத்துவெச்சிருக்கேன்!"

"கார்த்தி எப்படி?"

"முதலில் ஒரு டைரக்டர் தான் எடுக்க நினைக்கிற கதையைப் புரியவைக்கணும். அதற்கு அந்த நடிகர் ஒத்துழைக்கணும். அதற்கு முன் வந்தார் கார்த்தி. ஒரு வாரம் வொர்க்ஷாப். கூடிப் பேசினோம். எமோஷன், ஆக்ஷன் ரெண்டுமே கார்த்திக்குப் பிரமாதமா வருது. இப்போ எல்லோருக்கும் சூர்யாவைப் பிடிச்சிருக்கு. இந்த சினிமாவுக்குப் பிறகு கார்த்தியைப் பிடிக்கும். பெருமைக்காகச் சொல்லலை, உஷார்ப்படுத்தவும் சொல்றேன். சூர்யாவுக்குப் போட்டி வீட்டுக்குள்ளேதான். நிச்சயம் ஒரு கட்டத்தில் கார்த்தி, சூர்யாவை கிராஸ் பண்ணிட்டுப் போவார்னு தோணுது."

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

" எப்படி இவ்வளவு தன்னம்பிக்கையாப் பேசுறீங்க"

"படம் நல்லா வந்துட்டா, இந்த நம்பிக்கை வந்திரும். நம்மையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். ஒரு முதல் பட இயக்குநர் பல வருஷமா ஊறப்போட்டிருந்த கதையைப் படமா எடுப்பார். அடுத்த படத்தில் தடுமாறுவார். நான் அதில் கவனமா இருந்து, அந்தத் தப்பைத் தவிர்த்துட்டேன். படத்தில் எந்த நெகட்டிவ் விஷயங்களும் கிடையாது. நல்ல விஷயங்களைச் சொல்லி சொல்லியே கெட்ட விஷயங்களை அடையாளம் காட்டுறேன். படம் பார்த்துட்டு 'நல்ல விஷயம் பண்ணி இருக்கீங்க. நன்றி'ன்னு என்னிடம் சொல்ல விரும்பலாம்!"

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!

"காஜல் அகர்வாலை எப்படிப் பிடிச்சீங்க?"

"காஜல் முதலில் கொஞ்சம் தமிழ்ப் பக்கம் வந்துட்டுப் போனாங்க. ஏனோ அவங்களுக்குச் சரியான இடம் கிடைக்கலை. நான் 'மகதீரா' பார்த்தேன். இதுதான் அவங்க தமிழ் சினிமாவுக்கு வர வேண்டிய நேரம்னு தோணுச்சு. கதை சொன்னதும், ஷூட்டிங் என்னிக்குன்னு கேட்டு வந்து இறங்கிட்டாங்க. வந்தவர் இனிமேல் ஆந்திரா பக்கம் திரும்பிப் போக வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன். கனவுக் கன்னி ரேஸில் அவங்களும் ஓட ஆரம்பிச்சிருவாங்க!"

சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!
சூர்யாவை கிராஸ் பண்ணுவார் கார்த்தி!