Published:Updated:

செல்வராகவனுடன் வாழ முடியாது!

செல்வராகவனுடன் வாழ முடியாது!

செல்வராகவனுடன் வாழ முடியாது!

செல்வராகவனுடன் வாழ முடியாது!

Published:Updated:

"செல்வராகவனுடன் வாழ முடியாது!"
செல்வராகவனுடன் வாழ முடியாது!
செல்வராகவனுடன் வாழ முடியாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ம.கா.செந்தில்குமார்
செல்வராகவனுடன் வாழ முடியாது!
செல்வராகவனுடன் வாழ முடியாது!

ஸ்தூரி ராஜா. கலகலப்பான மனிதர். எப்போது பேசினாலும் ஒரு பரபரப்பைப் பற்றவைப்பார். தான் தயாரிக்கும் படமான 'அசுர குலம்', இன்றைய சூழலில் தமிழ் சினிமா, ரஜினி, செல்வராகவன், தனுஷ், சோனியா அகர்வால் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்.

"இன்னிக்கு பேப்பரைப் பிரிச்சாலே, தனியாக இருந்த பெண் கொலை, கூலிப் படை கைது, காதல் தகராறு, தற்கொலைன்னு பக்கத்துக்குப் பக்கம் நியூஸ். படிக்க வசதி இல்லை. படிச்சாலும் வேலை இல்லை. அவங்களை வழிநடத்த சரியான ஆட்கள் இல்லை. தப்பான ஆட்கள் கையில் சிக்கி கூலிப்

படைகளா உருமாறிட்டு இருக்காங்க. 'தம்பி'ன்னு பாசமாக் கூப்பிட்டா, 'என்னா?'னு மிரட்டலா எகிர்ற அளவுக்கு அவங்களை மாற்றியது யார் என்பதுதான் 'அசுர குலம்'. கூலிப்படையாக மாறின இளைஞர்களை ஒரு காதல் வந்து புரட்டிப்போடுது. நல்லா வாழணும்னு நினைக்கும்போது அவர்களைப் பழைய வாழ்க்கை திரும்ப இழுக்குது. நான் எழுதிய கதை. கார்த்திக் பாலாஜின்னு புது இயக்குநர் இயக்குறார். படத்தில் நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோரும் புதுமுகங்கள்!"

"துள்ளல் இசையோடு கிராமத்தைக் கொண்டுவரும் உங்க டிரேடு மார்க் படங்கள் என்ன ஆச்சு?"

" 'துள்ளுவதோ இளமை' தந்த நம்பிக்கையில், 'ட்ரீம்ஸ்', 'இது காதல் வரும் பருவம்'னு கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன். கிராமத்து மண் வாசனை என்னைவிட்டுப் போகாது. கிராமம்தான் என் ரத்தம். அடுத்து நான் பண்ணப்போற 'பாண்டியப் பேரரசு' படம் கிராமத்தை மையப்படுத்திய கதைதான். பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கோட்டா சீனிவாசராவ்னு எல்லாரும் பெரிய நடிகர்கள். பிரகாஷ்ராஜை வெச்சு ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிச்சுட்டேன். ரெண்டு ஜென்மங்களில் பயணமாகும் ஒரு காதல்தான் கதை. 100 வயது முதியவரா பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். கிராஃபிக்ஸ், ஹிஸ்டாரிக்கல்னு பெரிய பட்ஜெட்ல இறங்கிட்டதால், பொறுமையாப் பண்ண வேண்டிய சூழல். நான் இயக்கும் அடுத்தடுத்த படங்கள் கிராமங்களை மையப்படுத்தியே இருக்கும்!"

"இன்றைய சூழலில் சினிமா தயாரிப்பது ரொம்பச் சிரமமோ?"

"ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட்டைவிட அருவாள் கால்ஷீட் வாங்குறதுதான் கஷ்டம். சுமோவெல்லாம் இப்ப ரோட்ல ஓடுறது கிடையாது. சினிமாவுல ஃப்ளையிங் ஷாட்ஸ்ல மட்டும்தான் யூஸ் பண்றாங்க. எந்தப் படத்தைப் பார்த்தாலும் கத்தி, அருவாளுடன் யாரோ யாரையோ துரத்திட்டே இருக்காங்க. ஹீரோ கால்ஷீட் வாங்கி, அவருக்குத் தகுந்த மாதிரி கதை பண்றாங்க. ஹீரோ, ஹீரோயின்களும் எங்களுக்கு ஃபேஸ் வேல்யூ இருக்குற வரைதான் சம்பாதிக்க முடியும்னு சொல்லி சம்பளத்தை ஏத்திடுறாங்க. எங்க வீட்டுலயும் ஹீரோ இருக்காரே. நானும் இதையேதான் சொல்லுவேன். நீங்க ஏன் ஹீரோக்கள் பின்னாடி ஓடுறீங்க? தரமான கதையைத் தேர்ந்தெடுத்து புதுமுகங்களை வெச்சு நல்ல படம் எடுக்கலாமே? 'சுப்ரமணியபுரம்', 'நாடோடிகள்', 'பசங்க', 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' எல்லாம் சின்ன பட்ஜெட்ல எடுத்து பெரிய வெற்றி பெற்ற படங்கள்தானே? 'ஆயிரத்தில் ஒருவன்' படச் சமயத்தில்கூட, 'நீ அதிகமாப் போறே'னு செல்வாட்ட அடிக்கடி சண்டை போடுவேன். 'இல்லப்பா... இந்தப் படத்தோட தன்மை அப்படி'ன்னார். அவரை கன்ட்ரோல் பண்ண முடியலை. விட்டுட்டோம். இருந்தாலும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாதி ரிஸ்க்கை நாங்கதான் ஏத்துக்கிட்டோம்!"

செல்வராகவனுடன் வாழ முடியாது!

"என்ன சொல்றார் உங்க சம்பந்தி?"

"ரஜினி சார் ஒரு ஞானி வாழ்க்கை வாழறார். நான் மனுஷன் மாதிரி வாழறேன். அவரிடம் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா, அதுக்கு நமக்கு வயசு பத்தாது. நம்மைவிட அறிவாளிகளுக்கு கம்பெனி தர்றது கஷ்டம். அவர் பேசுற விஷயங்களைக் கேட்கிறதும், அவர் கேள்விகளுக்குப் பதில் சொல்றதும் ரொம்பக் கஷ்டம். குடும்ப விழாக்கள், விசேஷங்களில் சந்திக்கிறதும், பேசுறதும் உண்டு. அவர் ஒரு ஜீனியஸ்!"

"யாத்ராவைக் கண்லயே காட்ட மாட்றீங்களே?"

"குடும்பம் வேறு, சினிமா வேறுன்னு தனுஷ் தெளிவாக இருக்கார். யாத்ராவை மட்டுமில்லை... அவரோட போட்டோவைக்கூட ஒளிச்சுவெச்சுக்கிறாங்க. அதுல ரஜினி சாரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இப்ப தனுஷ§க்கு அடுத்த குழந்தை பிறந்திருக்கு. 'ஒரு பேரக் குழந்தை பிறந்தா, ஆனந்தம். அடுத்த பேரக் குழந்தை பிறந்தா... பேரானந்தம்'னு சிவாஜி சார் சொல்வார். அந்த வகையில் எனக்குப் பேரானந்தம்!"

செல்வராகவனுடன் வாழ முடியாது!

"செல்வராகவன் அடுத்த கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்காரா?"

"செல்வா ஒரு ஜீனியஸ். அவர் கனவுகளோடு யார் டிராவல் பண்றாங்களோ... அவங்கதான் அவர் வாழ்க்கையிலும் டிராவல் பண்ண முடியும். அவரைப் புரிஞ்சுக்கிட்டா, அவரை ரொம்பப் பிடிக்கும். இல்லேன்னா... வில்லனாத்தான் தெரிவார். கனவுகள் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. அவரை நேசிக்கணும்னா, அவரோட கொள்கைகளையும் கனவுகளையும் நேசிக்கணும். அப்படி இல்லாத யாரும் செல்வாவோடு வாழ முடியாது. பதவி, பணம், ஆசை எதுவுமே அவரை அசைக்காது. அவர் ஒரு முழுமையான மனிதர்!"

"சோனியா அகர்வால் உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்காரா?"

"தங்கமான பொண்ணுங்க. அவருக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. செல்வாவின் கனவுகளை அவரால் ஃபாலோ பண்ண முடியலை. அதனால், பிரிஞ்சுட்டாங்க. ஆனா, இன்னமும் எல்லாரும் அவர்ட்ட பேசிட்டுத்தான் இருக்கோம். என்னோட 'பாண்டியப் பேரரசு' படத்தில் சோனியாவை நடிக்கக் கேட்டிருக்கேன். 'நடிக்கிறேன்'னு சொல்லி இருக்காங்க!"

செல்வராகவனுடன் வாழ முடியாது!
செல்வராகவனுடன் வாழ முடியாது!