"சிங்கம்புலி ஃபிரேம்ல வந்து நின்னாலே சிரிப்பு பொத்துக்கும். 'வாடா என் ஜிகிர்தண்டா'ன்னா, 'போடா என் பித்தளை அண்டா'ன்னு கவுன்ட்டர் டயலாக் அடிப்பார். 'சோறுன்னாலே சோழவந்தான் வரைக்கும் வருவானுங்க... பிரியாணின்னா பிரிச்சு மேய்வானுங்களே'னு சரவெடிகளைக் கொளுத்திப்போட்டுட்டே இருப்பார். நாமதான் கதைக்குத் தேவையானதைப் பொறுக்கி எடுத்து பொருத்திக்கணும். இப்பப் பரபரப்பான காமெடியன் ஆகிட்டார். இன்னும் பெரிய லெவலில் வருவார். எங்க இயக்குநர் ரவிமரியா, இளவரசு, ஜெகன்னாத், ஜி.எம்.குமார்னு பல இயக்குநர்கள் படத்தில் இயல்பா நடிச்சிருக்காங்க."
"படத்தைப் பார்க்கச் சொல்லி கரீனா கபூர், தீபிகா படுகோன், வித்யாபாலன் எல்லாம் டிரெயிலர்ல சிபாரிசு பண்றாங்களே?"
"நட்புக்காகத்தான். மும்பையில் சப்-டைட்டிலோட மிளகாவை ஸ்க்ரீன் பண்ணினேன். எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. எவ்ளோ பிரச்னைகள் இருந்தாலும், நான்கைந்து ஹீரோ, ஹீரோயின்கள் அங்கே சேர்ந்து நடிப்பாங்க. அந்த மாதிரியான ஒரு சூழல் தமிழ் சினிமாவில் நடக்கும்போது, நிறையப் படங்கள் வெற்றி அடையும்!"
|