"ஞான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனா, மலையாளப் படவுலகை ஆட்டிவைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா, தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு. அதுதான் உங்க ஆசையா சூப்பர் ஸ்டார்களே?" - ரௌத்திரமும் வேதனையும் வெடிக்கும் குரலில் கேட்கிறார் திலகன்.
சமரசங்கள் செய்துகொள்ளாத சாதனைக் கலைஞன் திலகன். சமீப நாட்களாக மம்மூட்டி, மோகன்லாலுக்கு எதிராக இவர் போர்க் கொடி உயர்த்திவிட்டார். மலையாளப் படவுலகமே 'மேக்டா', 'பெஃப்கா' என்று இரு அமைப்புகளாகப் பிரிந்து முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. ஆரம்ப நாட்களில் பிரச்னைகளின் மையப் புள்ளியாக இருந்த வினயன் இயக்கிய 'யட்சியும் நானும்' படத்தில் யாரும் நடிக்கக் கூடாது எனத் தடை விதித்தது மலையாள நடிகர்கள் சங்கமான 'அம்மா'. அதை மீறியது முதல் திலகன் மீது தடைக் கற்கள். தொடர்ந்து மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் என்று மெகா ஸ்டார்களின் கூட்டணியில் உருவான 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த
திலகனை அந்தப் படத்தில் இருந்து நீக்கினார்கள். இடையில், இன்னமும் அனல் தணியாமல் இருக்கிறார் திலகன்.
"சமயங்களில் ரொம்பவும் 'ஓவர் ரியாக்ட்' செய்கிறீர்கள் என்று உங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்களே?"
"பின்னே ஞான் கலைஞனாயிற்றே! உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சிவசப்படணும். அடித்தால், திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்துநொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்கள் இன்றைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?"
"தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லாலைக் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்ன?"
|