திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பல்லே பல்லே பாண்டியா!

பல்லே பல்லே பாண்டியா!

ம.கா.செந்தில்குமார்
பல்லே பல்லே பாண்டியா!
பல்லே பல்லே பாண்டியா!
பல்லே பல்லே பாண்டியா!
 
பல்லே பல்லே பாண்டியா!
பல்லே பல்லே பாண்டியா!

''100 படங்களுக்கு மேல் டிசைனரா வொர்க் பண்ணி இருக்கேன். டிசைனிங்ல நிறையப் புதுமைகள் பண்ணிப் பார்த்தாச்சு. மனசுக்கு நிறைவா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது தோன்றியதுதான் டைரக்ஷன் ஐடியா. என்னோட இந்த ஆசையை விகடன் பேட்டி மூலமாத் தெரிஞ்சுகிட்ட கல்பாத்தி அகோரம்சார் கொடுத்த வாய்ப்புதான் 'பலே பாண்டியா' படம். கடவுள், கல்பாத்தி அகோரம், விகடன் மூவருக்கும் நன்றி!'' - ஜாலியாகப் பேசுகிறார் டிசைனர் சித்தார்த் சந்திரசேகர். 'லேசா லேசா' தொடங்கி 'எந்திரன்' வரை கடந்த எட்டு வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் டிசைனர். இப்போது 'பலே பாண்டியா' இயக்குநர்.

பல்லே பல்லே பாண்டியா!

''மனசு சொல்ற வழியில போயிட்டே இருப்போம்... நடப்பது நடக்கட்டும்னு தான்தோன்றித்தனமா இருப்பேன். நான் யாரிடமும் உதவியாளரா இருந்தோ, தனியா கிளாஸ் போயோ டிசைனிங் கத்துக்கலை. நானே வீட்ல உட்கார்ந்து கத்துக்கிட்டதுதான் டிசைனிங். அதே மாதிரிதான் டைரக்ஷனும். இரண்டுமே தானா அமைஞ்சு வந்தது. இந்த இரண்டு தொழில்களிலுமே நிறையக் கத்துக்கிட்டு என்னை நானே தயாரிச்சேன். படத்தோட பாடல் வெளியீட்டுக்குப் பிறகு 'சூப்பரா இருக்கு'னு முகம் தெரியாத ஆட்களெல்லாம்கூட பொக்கே அனுப்புறாங்க. போற இடங்கள்ல ஆட்டோகிராஃப் கேக்குறாங்க. கம்ப்யூட்டரும் மவுசுமா ஒரு ரூம்லயே அடைஞ்சுகிடந்த எனக்கு இதெல்லாம் புது அனுபவம். தேங்க்ஸ் டு அகோரம் சார்!''

பல்லே பல்லே பாண்டியா!
பல்லே பல்லே பாண்டியா!

'' 'பலே பாண்டியா' யார் பாஸ்?''

''தொடர்ந்து கெட்டதா நடக்கும்போது, தனக்கு இனிமே எந்த நல்லதும் நடக்காது என உறுதியா நம்புற ஒரு பையன்தான் பாண்டியா. எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து மீள அவன் எடுக்கும் முடிவு சரியா... தவறா என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கோம். கொஞ்சம் அசந்தாலும் கடந்து போய்விடக்கூடிய சிச்சுவேஷன் காமெடியை சின்னச் சின்னதா படம் முழுவதும் தூவி இருக்கோம். கோபத்துக்குச் சிவப்பு, சாந்தத்துக்கு வெள்ளைனு படம் முழுவதும் பயன்படுத்தியுள்ள கலர் தெரபி காஸ்ட்யூமும் பேசப்படும்!''

பல்லே பல்லே பாண்டியா!

''விஷ்ணு - பியா ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி எப்படி?''

''ஹீரோ கேரக்டருக்கு எந்த இமேஜுக்குள்ளும் சிக்காத முகம் வேண்டும்னு நினைச்சேன். 'வெண்ணிலா கபடிக் குழு' விஷ்ணு கிடைச்சார். அவ்வளவு அருமையான நடிப்பை இப்படத்தில் பதிவு பண்ணியிருக்கிறார். 'பொய் சொல்லப்போறோம்' பார்த்துட்டு பியாவைப் பிடிச்சேன். அத்தனை விதமான பாவனைகளையும் தன் நடிப்பில் கொண்டுவரக்கூடிய ஒரு நல்ல நடிகை. அமரேந்திரன், ஜிப்ரன். இவங்க ரெண்டு பேரும் என் பெருமைக்குரிய அறிமுகம். பசங்க பின்னி இருக்காங்க!''

''இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் தேவனைப்பற்றி...''

''தேவன் எனக்கு நல்ல நண்பன். இந்தப் படம் கமிட்டானதும், 'படத்துக்கு புது கம்போஸரை அறிமுகப்படுத்தலாம்னு இருக்கேன். உனக்கு தெரிந்த நல்ல மியூஸிக்

பல்லே பல்லே பாண்டியா!

கம்போஸர் இருந்தாச் சொல்லு'ன்னு கேட்டேன். 'ஏன், என்னை எல்லாம் பார்த்தா உனக்கு ஒரு கம்போஸராத தெரியலையா?'ன்னு எகிறிட்டான். பின்னணி இசை, பாட்டு ரெண்டிலும் மனுஷன் பிரமாதப்படுத்தி இருக்கார். 'ஹேப்பி'ன்னு தொடங்கி வாலி சார் எழுதிக்கொடுத்த நேர்மறை எண்ணங்கள்கொண்ட பாட்டை எந்த இசைக் கருவியும் பயன்படுத்தாமல் மனிதக் குரல்களையே பின்னணி இசையாக்கி 20 பாடர்களை பாடவெச்சு அசத்தி இருக்கார். அதே மாதிரி தாமரையின் பாடல் வரிகளும் தாலாட்டும்!''

 
பல்லே பல்லே பாண்டியா!
பல்லே பல்லே பாண்டியா!