திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

இது படித்துறையின் சித்திரம்!

இது படித்துறையின் சித்திரம்!

பாரதி தம்பி
இது படித்துறையின் சித்திரம்!
இது படித்துறையின் சித்திரம்!
இது படித்துறையின் சித்திரம்!
 
இது படித்துறையின் சித்திரம்!
இது படித்துறையின் சித்திரம்!
இது படித்துறையின் சித்திரம்!

டித்துறை... தலைப்பே சொல்கிறது ஆயிரம் அர்த்தங்களை. குடத்தை நீருக்குள் கவிழ்த்து நீச்சல் பழகும் இளம்பெண்கள், பூவரசு இலை களுக்கு மத்தியில் சோப்பைப் பத்திரப்படுத்தும் பெரியம்மாக்கள், ஆற்று நீருக்குள் முங்கி தொலைந்த காசு தேடும் சிறுவர்கள், ஆயிரம் கண்களால் நம்மை மொய்க்கும் ஆற்று மீன்கள்... எனப் படித்துறையின் சித்திரம் மேலும் மேலும் நீளும்.

''இந்தக் கதையும் அப்படிப்பட்டதுதான். தாமிரபரணி நதி ஓரத்தில் எத்தனையோ படித்துறைகள் உண்டு. குறுக்குத்துறை, சிந்துபூந்துறை, முன்னாடி படித்துறை, பின்னாடி படித்துறை, ஆண்கள் படித்துறை, பெண்கள் படித்துறை என வகைவகையாக, தினுசுதினுசாக இருக்கும் படித்துறைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரமாயிரம் கதைகள் புதைந்துகிடக்கின்றன. காலந்தோறும் மனிதர்கள் தத்தமது மகிழ்ச்சியோடும், துக்கத்தோடும் வந்துபோய்கொண்டே இருக்க, எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறது படித்துறை. அதன் ஒரு சின்ன எடுத்துக்காட்டுதான் இந்தப் படம்.

தாமிரபரணிக் கரையில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் கதை. கோபம், வன்மம், மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், அன்பு என ஒரு குடும்பத்தின் அத்தனை உணர்ச்சிகளும் அதில் இருக்கும். ஆனால், ஒரே குடும்பத்துடன் கதை சுருங்கிவிடவில்லை. எப்போதுமே தனி மனிதர்களாக நாம் வாழ்ந்துவிட முடியாது. எல்லாக் காலங்களிலும் யாரோ சிலர் நம் வாழ்வின் மீது செல்வாக்கு செலுத்துகின்றனர். அப்படிப் பல குடும்பங்களின் கதைகளும் இணைந்திருக்கின்றன. ஓர் அசலான திருநெல்வேலி படம்'' - நிதானமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் சுகா. பேச்சாளர் நெல்லைக் கண்ணனின் மகன். பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் இயக்குநர்.

இது படித்துறையின் சித்திரம்!

''படத்தில் எல்லோருமே புதுமுகங்களா?''

''நாயகன், நாயகி உள்பட நிறையப் புதுமுகங்கள். சென்னையில் மாடலா இருந்த அபிராம்தான் ஹீரோ. கதாநாயகி பேரு சாந்தினி. இவங்களும் சென்னைதான். இவங்களைத் தவிர, படத்துக்குப் பெரிய பலம் இயக்குநர் அழகம்பெருமாள். அவரும் அடிப்படையில் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பாத்திரம் ரொம்ப உயிர்ப்போடு வந்திருக்கு. சினிமாவுக்குத் தொடர்பே இல்லாத 85 வயசுப் பாட்டி உட்பட படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் வட்டார வழக்குல அழகா நெல்லைத் தமிழ் பேசுவாங்க. இதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கோம். இதன் இன்னொரு சிறப்பு, வேலை பார்த்த டெக்னீஷியன்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு ஸீன்லயாவது நடிச்சிருக்காங்க. எடிட்டர் சுரேஷ் அர்ஸ் கூட

இது படித்துறையின் சித்திரம்!

ஒரு ஸீன்ல நடிச்சிருக்கார். படித்துறையில் இன்னும் ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி இருக்கோம். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன். ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பாட்டு எழுதி இருக்காங்க. 'ஐயையோ, விட்ருங்க!'னு பதறி ஓடினவங்களை இழுத்துப் பிடிச்சவர் இளையராஜா சார்தான்!''

''எப்படி வந்திருக்கு இசைஞானியின் பாடல்கள்?''

''எங்க வாத்தியார்கிட்ட இருந்தப்பவே ராஜா சார்தான் இசை என்பதில் தெளிவா இருந்தேன். அதுவும் இப்படி ஒரு கிராமத்துப் படத்துக்கு அவரோட இசை கூடுதல் அழகு. மொத்தம் அஞ்சு பாட்டு. நான் முறைப்படி சங்கீதம் படிச்சவன். படத்தின் பாடல்களில் அது தெரியும். அதைவிட முக்கியமான விஷயமா நான் நினைக்கிறது கணியான் கூத்துக் கலைஞர்களையும், அந்த இசையையும் இதில் பயன்படுத்தி இருக்கோம். திருநெல்வேலிப் பகுதியில் முன்பு பரவலா இருந்து இப்போ அழிஞ்சுட்டு வர்ற கலை இது. 'குத்துப்பாட்டு'னு சொல்றாங்கல்ல... அந்த மாதிரி ஒரு கணியான்கூத்துப் பாட்டு.''

''ஆமா, படித்துறை நடிகர் ஆர்யாவோட தயாரிப்பாமே?''

''ஆமா... நிறைய பேருக்குச் சந்தேகம். 'ஆர்யா ஏன் திடீர்னு படம் தயாரிக்கிறார், இவனை ஏன் இயக்குநர் ஆக்கினார்'னு. ஆர்யாவுக்கும் எனக்கும் பல வருட நட்பு உண்டு. ஒரு தயாரிப்பாளரா இல்லாமல் என் மீது வைத்திருக்கும் பிரியத்துக்காகவே அவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஆர்யாவைவிட யாரும் ஒரு புது இயக்கு நருக்கு இவ்வளவு சுதந்திரம் தந்துவிட முடியாது. சின்னக் கேள்விகூடக் கேட்காமல் என்னை நம்பி இந்தப் படத்தை எடுத்திருக் கிறார். நன்றி ஆர்யா!''

 
இது படித்துறையின் சித்திரம்!
இது படித்துறையின் சித்திரம்!