தலைவர்: '''விரல்விட்டு எண்ணக்கூடிய தலைவர்களில் நானும் ஒருத்தர்'னு
வெளியே ஒரு பேச்சு இருக்கு தெரியுமா?''
தொண்டர்:''உங்களுக்குக் கணக்கு சரியா வராதுன்னு அவிய்ங்களுக்கும்
தெரிஞ்சு போச்சா!''
- கொளக்குடி சரவணன்
''என் கணவர் நேத்து சாக்கடையில விழுந்துட்டாரு!''
''ஐயையோ... அப்புறம்?''
''இன்னிக்குக் கட்சி உறுப்பினர் கார்டு கொடுக்கறதா
சொல்லி இருக்காங்களாம்!''
- கொளக்குடி சரவணன்
''மங்களம் 'உண்டாகட்டும்' சிஷ்யா!''
''என்ன சொல்கிறீர்கள் குரு?''
''மங்களத்தை என் அறைக்குப்
பணிவிடை செய்ய அனுப்பு என்கிறேன்!''
- என்.ஏ.பாலகிருஷ்ணன்
''இன்னிக்கு ராத்திரி கட்டின புடவையோடு வந்துடு!''
''ரொம்ப கஷ்டம் சுந்தர்!''
''ஏன்டா செல்லம்... அப்பா, அம்மாவைப் பிரிய முடியாதா?''
''இல்ல, ராத்திரில நைட்டி போட்டுத்தான் எனக்குப் பழக்கம்!''
- அதிரை புகாரி
''யாரங்கே!''
''மன்னா, டீ இன்னும் வரல!''
- வீ.விஷ்ணுகுமார்
|