''அண்ணே, நம்ம ரூட்டே தனி! 'சாமி'க்குப் பின்னாடி திரும்ப ஒரு போலீஸ் கதையைக் கையில் எடுத்திருக்கேன். நம்ம இந்திய அரசாங்க முத்திரையில் மூணு சிங்கம் கம்பீரமா நிற்கும். அதுக்குப் பின்னாடி நாலாவது ஒரு சிங்கம் மறைஞ்சு நிக்கும். நாம யாருமே பார்க்காத அந்த நாலாவது சிங்கம்தான் நம்ம துரைசிங்கம்!'' - கர்ஜிக்கிறார் ஹரி. கமர்ஷியல் மாஸ் டைரக்டர்.
'' 'சிங்கம்'னு பேரைப் பிடிச்சு அசத்திட்டீங்களே?''
''எப்படி இவ்வளவு நாள் இந்த டைட்டிலை விட்டு வெச்சாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. காதல், காவியம்னு வார்த்தையைக் கேள்விப் பட்டாலே, ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி ஓடி வந்திருவேன். நான் ஐ.பி.எஸ்., ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஐ.பி.எஸ்., பிரிலிமினரி எக்ஸாம் எழுதியும் பார்த்தேன். மார்க் கிடைக்கலை. 'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு சினிமாவுக்கு வந்துட்டேன். நல்ல போலீஸ்காரங்களைப் பார்த்தா, ஏக்கமாக இருக்கும். அதனால, அவங்களைக் கௌரவிக்கிற மாதிரி படம் எடுக்குறேன். இந்தக் கதை தூத்துக்குடி நல்லூரில் ஆரம்பிச்சு, ஆந்திரா நெல்லூரில் முடியும். இடைவேளைக்குப் பிறகு, இரண்டாவது ரீல்லயே க்ளைமாக்ஸ் ஆரம்பிச்சிரும். படகு, கப்பல், ஹெலிகாப்டர், விமானம், பஸ், ஜீப், ரயில், பைக்குனு துரைசிங்கம் பயணிக்காத வாகனம் இல்லை. போகாத ரூட் இல்லை. தீப்பிடிக்கிற வேகத்தில் திரைக்கதை இருக்கும். ரொம்ப சூடான படம்!''
|