நான் உண்டு... என் தூரிகை உண்டுன்னு இருப்பவன் நான். தப்பித் தவறி கல்யாணம், காதுகுத்துன்னு விசேஷங்களுக்குப் போய் நிக்கும்போது, விருந்து சாப்பாடு முடிஞ்சு வாய்ல வெத்தலையோடு, 'நீ ஏன் சினிமாவுல நடிக்கக் கூடாது? அதான் சினிமா ஆட்கள் உனக்கு ஃப்ரெண்ட்ஸா இருப் பாங்கள்ல!'னு கேட்டுவைப்பாங்க சிலர். நானும் அசமஞ்சமா சிரிச்சுவைப்பேன். ஆனா, ஒரு தடவை சினிமா ஆளு ஒளிப் பதிவாளர் ஆர்தர் வில்சனே, 'உங்க குரல் கணீர்னு ஆளையே மிரட்டுதே... நடிக்கலாம்ல'னு சொல்லவும் மனசுக்குள்ள பட்டாம் பூச்சி. பார்த்தா திடீர்னு, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அரஸ்! ஒரு போலீஸ் அதிகாரி ரோல் இருக்கு... பண்ணுங்க!'னு என் நெருங்கிய நண்பர் திருவாரூர் பாபு 'கந்தா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். நானும், 'ஓ... போலீஸ் அதிகாரியா? நல்லா ஏ.சி. ரூம்ல வட்ட வட்ட மேஜை முன்னாடி உட்கார்ந்து கம்பீரமா பேசிட்டு வந்துரலாம்'னு சந்தோஷப்பட்டேன். ஆனா, 60 அடி உயரத்துக்கு கிரேன்ல கட்டித் தூக்கிப் பந்தாடுவாங்கன்னு அப்போ தெரியாமப் போச்சு. சாதாரணமா சுற்றுலா பொருட்காட்சிக்குப் போனாக்கூட ஜெயன்ட் வீல் ராட்டினத்துல நான் ஏற மாட்டேன். மனைவி, பசங்களை மட்டும் ஏத்திவிட்டுட்டு, கீழேயே அஞ்சு ரூபாய் ஜெயன்ட் அப்பளத்தைக் கடிச்சிட்டு நின்னுட்டே இருப்பேன். அப்படிப் பட்ட வீரதீர சிகாமணியை அந்தரத்துல கட்டித் தொங்கவிட்டு, காட்டுகாட்டுனு காட்டிட்டாங்க.
ஒருநாள் மேம்பாலத்தில் ரவுடியைத் துரத்துற ஸீன். 'முதல் ஆக்ஷன் சொன்னதும் வில்லன் ஓடுவாரு. ரெண்டாவது ஆக்ஷன் சொல்றப்போ ஹீரோ அவரைத் துரத்துவாரு. மூணாவதா 'ஆபீஸர்னு' கத்துவேன். அப்ப போலீஸ் வேகமா அவங்களைத் துரத்தணும்'னு ரொம்பவே தெளிவா ஸ்டன்ட் மாஸ்டர் சொல்லிக் கொடுத்தாரு. அப்ப
|