பிரீமியம் ஸ்டோரி
நா.கதிர்வேலன்
''ஐ லவ் சூர்யா!''
''ஐ லவ் சூர்யா!''
''ஐ லவ் சூர்யா!''
 
''ஐ லவ் சூர்யா!''
''ஐ லவ் சூர்யா!''

பார்த்த கணம் கண்கள் பச்சக்கெனப் பதிவது அழகான தோள்பட்டையில் இருக்கும் 'ஸ்ரீ விநாயக நமஹ' டாட்டூவில்தான். பார்க் ஷெராட்டனில் பாடும் கிளி மம்தா மோகன்தாஸைப் பார்த்தேன். ''பாஸ், இனிமேல் சென்னைதான் என் அட்ரஸ்!'' என்றார். 'மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா!'

''எப்படி இருக்கு தெலுங்கு சினிமா?''

'' 'சிவப்பதிகாரம்' எனக்குச் சந்தோஷம் அளித்த படம். அப்புறம் தெலுங்குப் பக்கம் இருந்து நிறைய அழைப்பு. ஜூனியர் என்.டி.ஆர், நிதின், விஷ்ணுன்னு வரிசையாகப் படங்கள். என் ஃபேவரிட் ஹீரோ நாகார்ஜுனாவோடு இரண்டு படங்கள் செய்தேன். ஆனாலும், எனக்கு தமிழ் சினிமா வேணும். எனக்கு தமிழ் சரளமா வரும். படிப்பேன். பின்னணிப் பாடகியாகவும் இங்கே ஒரு பெயர் இருக்கு. இங்கே ஹீரோயின்கள் குறைவா இருக்காங்க. இப்போ தமிழ்நாட்டுக்கு வந்தால், ஓர் இடத்தைப் பிடிக்க முடியும்னு தோணுச்சு. வந்துட்டேன்!''

''நீங்கதான் கவர்ச்சியில் பின்னுவீங்களே... ஏன் அங்கே இருந்து வர்றீங்க?''

''இன்னிக்கு இருக்கிறது கிளாமர் உலகம். அதில் போய் இப்படித்தான் முடியும், இப்படி நடிக்க மாட்டேன்னு அடம்பிடிக்க முடியாது. தெலுங்கு ஆடியன்சுக்கு மழையில் நனைவது ரொம்பப் பிடிக்கும். நனைஞ்சுதான் ஆகணும்.''

''உங்களைப் பரபரப்பாக்கியது மலையாள சினிமா. மறந்துட்டீங்களா?''

''இப்பவும் நாலு படங்களில் நடிக்கிறேன். 'இன் லவ் வித் கேரளா'ன்னு மிக முக்கியமான படம். மம்மூட்டியில் ஆரம்பிச்சு, நான் நடிக்காத ஹீரோ அங்கே கிடையாது. என்ன இருந்தாலும் என் மக்கள்... என் மொழி... அதை விட மாட்டேன். ராஜா ரவிவர்மாவின் மறைவுக்குப் பிறகு அவர் பாதியில் விட்டுப்போன ஓவியங்களைப் பூர்த்திசெய்ய வெளிநாட்டு ஓவியர் வருகிற மாதிரி ஒரு கதை. அவ்வளவு இயல்பான படம். சின்ன வயசுல தேசிய விருது வாங்கினால் எவ்வளவு நல்லா இருக்கும்.''

''நீங்களே நல்ல பாடகியாச்சே! எங்க ஹீரோக்கள் எல்லாம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. கேட்கிறீங்களா?''

'' 'கந்தசாமி'யில் விக்ரம் பாடினது கேட்டேன். அந்த மியூஸிக்கில் அவரது குரல் பொருத்தமாக இருந்தது. சிம்பு பாடுகிற பாட்டெல்லாம் எனக்குப் பிடிக்கும்.

''ஐ லவ் சூர்யா!''

அவர்கிட்டே இருக்கிற துடிப்பு அவர் பாடல்களில் இருக்கு!''

''தமிழில் யாரோடு நடிக்க விருப்பம்?''

''ஐ லவ் சூர்யா. அவர் என்ன பண்ணினாலும் பிடிக்கும். அதேபோல விஜய்யின் டான்ஸ். விக்ரம், அஜீத் கேரக்டர் ரோல்களில் நடிக்கும்போது அவங்களோடு நடிக்கணும். ஜெயம் ரவி அழகா இருக்கார். இன்னும் நான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' பார்க்கலை. இதுவரை நீ பார்த்த சிம்பு இல்லடின்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. எனக்கு கௌதம் மேனன், அமீர், மிஷ்கின் இவங்களோடு வொர்க் பண்ணணும்னு ஆசை!''

''நீங்க சினிமாவுக்கு வந்த நாலு வருஷத்துல நானூறு வதந்தி வந்துடுச்சு...''

''இதுவரை வந்த எந்த வதந்தியிலும் உண்மை இல்லை. உண்மைகள் எப்பவும் வெளியே வருவதே இல்லை. என்கிட்டே சில உண்மைகள் இருக்கு. அவை வெளியே தெரியாது. (சிரிப்பு) தேவிஸ்ரீ பிரசாத் எனக்கு நல்ல நண்பன். நட்புக்கும் காதலுக்கும் முடிச்சுப்போட்டால் அது பாவம்!''

''ஐ லவ் சூர்யா!''

''கேரளாவில் இருந்து வந்த ஹீரோயின்கள் எல்லோரும் கல்யாணமாகிப் போயிடுவீங்க. இல்லாட்டா, நயன்தாரா மாதிரி காதலிச்சுட்டே இருப்பாங்க. உங்க காதல் எப்படி?''

''ஐ லவ் லவ். ஆனா, போன வருஷம் ஒருத்தரைக் காதலிச்சிட்டு, இந்த வருஷம் இன்னொருத்தரை லவ் பண்ண என்னால் முடியாது!''

Click to Enlarge

''ஐ லவ் சூர்யா!''


 
''ஐ லவ் சூர்யா!''
''ஐ லவ் சூர்யா!''
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு