நா.கதிர்வேலன்

கனிமொழிக்குப் பிடித்த 'கனிமொழி'!

''நல்ல கதைகளும், புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் என்னை மாதிரி புதியவர்களுக்கு மூலதனம். சினிமாவுக்கும் எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு!''- அடக்கமாகப் பேசுகிறார் 'கனிமொழி' பட இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி.

''என்ன இது, திடீரென்று 'கனிமொழி'ன்னு தலைப்போடு...''

''பதற்றப்படாதீங்க, கனிமொழி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ, அதைமட்டும்தான் இது கொடுக்கும். உலகம் அறிந்த அழகான தமிழ்ப் பெயர் கனிமொழி. அதனால் இந்தப் பெயரைச் சூட்டினேன். எதற்கும் கனிமொழி மேடத்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவோம் என, நேரம் கேட்டு நானும் தயாரிப்பாளர் சிவாவும் போனோம். மிகவும் கனிவோடு எங்கள் கதையைக் கேட்டு, 'ரொம்ப நல்லா இருக்கு. தமிழ் சினிமாவுக்கு இவ்வளவு நல்ல கதைகள் வரத் தொடங்கிருச்சா?' என விசாரித்தார். என் பெயரைப் பயன்படுத்திக்கொள்வதில் எந்த ஆட்சேபணையும் இல்லை எனவும் கூறினார். இதனால் அவருக்குத் தெரிந்துதான் இந்தப் படத் தலைப்பு வைக்கப்படுகிறது. நிச்சயம் இதில் எந்த அரசியலும் இல்லை.''

'' 'கனிமொழி' என்ன சொல்ல வருகிறது?''

'' 'கனிமொழி' நிச்சயமாக தமிழ் சினிமாவுக்குப் புதுசு. சினிமா அகராதிக்குள் அதிகம் வராமல் ஒரு கதை சொல்லப் பார்த்திருக்கிறேன். ஜெய் மாதிரி ஒரு கேரக்டரின் ஒரு குறுக்குவெட்டுப் பகுதியைச் சுவாரஸ்யமாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, அது முடிஞ்சிருக்கு. இந்த உலகத்தோட நிரந்தரத் தேவை மனிதமும், அன்பும், காதலும்தான்னு சொல்ல வர்றேன். சீரியஸான கதை இல்லை. ஆனால், நிச்சயம் ஃபேன்டஸி, இந்த யதார்த்த மான கதையில் மறைஞ்சிருக்கு. ஏதோ புரியாத அலிபாபா கதைக்குள்ளே கொண்டுபோய் நிச்சயம் விட மாட்டேன்.''

''ஜெய் 'சென்னை-28', 'சரோஜா'வுக்குப் பிறகு சொல்லிக்கொள்கிற மாதிரி இன்னும் வெளிப்படலை. அவர் எப்படி இதற்குப் பொருத்தமா இருந்தார்?''

''ஜெய் முழுமையாக நம்புகிற படம் இது. காலேஜ் போற பையனாக நடிக்கிற உடல்வாகு அவர்கிட்டே மட்டும்தான் இருக்கு. ஏதாவது அவர் தவறு செய்தி ருந்தால், இது முற்றிலும் தன்னைத் திருத்திக்கிற படமா இருக்கும். ஒவ்வொரு

படப்பிடிப்பிலும் அவரைப் பார்த்திருக்கிறேன். என்னை அவருக்குத் தெரியும். அவரைச் சரியாகப் பயன்படுத்தினால், அவரை மிக நல்ல நடிப்பில் கொண்டுவர முடியும். என் கதைக்கு மிகவும் நம்பகமானவர் ஜெய்தான்.''

'' 'ராக்கெட் சிங்' ஹீரோயின் சஷான் பதம்சியைக் கொண்டுவந்துவிட்டீங்களோ?''

''யெஸ். நான் அந்தப் படம் பார்த்தேன். சஷான் பெரிய மாடல். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். 'ராக்கெட் சிங்' பார்த்தவங்க யாரும் சஷானை மறக்க முடியாது. கதையில் அவங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. கதைக்கு ஜெய், பதம்சி இரண்டு பேரும் நாணயத்தின் இருபக்கம் மாதிரி முக்கியமான வர்கள்.''

''வெங்கட்பிரபு மாதிரியே கதையைப்பத்திக் கவலைப்படாமல் ஜாலியா கதை சொல்வீங்களா?''

''நிச்சயம் 'கனிமொழி' வெங்கட்பிரபு படம் மாதிரி இருக்காது. முற்றிலும் அவரிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். இந்தக் கதையை வெங்கட்பிரபுவே தயாரிக்கத் திட்டமிட்டு இருந்தார். அவருக்கு அதற்கான வேளை கூடிவரலை. அப்புறம்தான் இந்தக் கதையை சிவா சாரிடம் சிபாரிசு செய்தார். என்னைப் பொறுத்தவரை முகங்கள் முக்கியம் இல்லை. கதைதான் பாஸ். கதையையும், கமர்ஷியலையும் அழகா சேர்க்கிற வித்தை நான் வெங்கட்பிரபு சார்கிட்டே கத்துக்கிட்டது. கதையில் உண்மையும், உணர்வும் இருந்தா நிச்சயம் ஜெயிக்கும்.''

''உங்க டீமுக்கு எப்பவும் யுவன்தான். நீங்க சதீஷ் சக்ரவர்த்தின்னு புது மியூஸிக் டைரக்டருக்கு வந்துட்டீங்க?''

''நீங்களே ஒரு புது டீம் உருவாக்குங்கன்னு சிவா சார் சொன்னார். சக்தி சரவணன் அசிஸ்டென்ட் பி.சிதம்பரம் தான் கேமராமேன். 'லீலை' சதீசுக்கு முதல் படம். அடுத்த மாதம் வருது. இசையமைப்பாளர் தாயன்பன் மகன்தான் சதீஷ். யு.எஸ். பெர்கலி ஸ்கூல் ஆஃப் மியூஸிக்கில் படிச்சவர். ஏ.ஆர்.ரஹ்மானிடம் இரண்டு வருஷம் சின்சியர் அசிஸ்டென்ட்டாக இருந்தவர். பிரமாதமான மியூஸிக் டைரக்டர். எங்க படம் வர்றதுக்கு முன்னாடி நிச்சயம் அவர் பிரபலமாகிடுவார் பாருங்க!'' -அழுத்த மாகக் கை குலுக்குகிறார் ஸ்ரீபதி!