சினிமா விமர்சனம்

முந்தினம் பார்த்தேனே

கடந்து போகும் காதல் தருணங்களைக் கவிதையாகச் சொல்லும் முயற்சி 'முன்தினம் பார்த்தேனே'.

சஞ்சய் (அறிமுகம்) சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் காதல் கனவுகள்கொண்ட இளைஞன். கொஞ்சம் மாடர்ன் ஆக, அதே நேரத்தில் டிரெடிஷ னலாகவும், அளவுகொள்ளாத காதலுமாக இருக்கும் பெண்தான் அவரின் எதிர்பார்ப்பு. பூஜாவைச் (அறிமுகம்) சந்திக்கிறார். சஞ்சய் காதலில் விழும்போது, பூஜா பணத்தில் விழுகிறார். சஞ்சயின் எதிர்பார்ப்புக்கு எதிரான குணம்கொண்ட டான்ஸர் ஏக்தா(அறிமுகம்) அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். ஏக்தாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் சஞ்சய். 'முன்னாள் காதலன் மூலம் ரகசியக் குழந்தை உண்டு' என்று ஏக்தாவைச் சுற்றி புரளிகள். இந்த முரண்பாடுகள் ஒன்றையன்று சந்தித்து வெட்டிக்கொள்ளும் புள்ளியில் ஏற்படும் கீறல், காதலில் விரிசல் உண்டாக்குகிறது. இறுதியாகத் தன் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் லிஸ்னாவை (அறிமுகம்) காதலித்துத் திருமணம் செய்கிறார் சஞ்சய். புரளி பொய் என்று தெரிந்து, ஏக்தாவைத் தேடிச் செல்கிறார் சஞ்சய். ஏக்தாவை அவர் சந்தித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

மனிதர்களின் வித்தியாசமான நுண்ணுர்வுகளை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மகிழ் திருமேனி. காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்னும் வழக்கமான சினிமா பல்லவியில் இருந்து விலகிப் பயணிக்கிறது படம். படம் முழுக்க வாய்ஸ் ஓவரில் விரியும் கதை, கவித்துவ வார்த்தைகளால் கனம்பெறுகிறது. ஐ.டி. இளைஞர்களின் அசலான வாழ்க்கையைக் குறையோ, மிகையோ இல்லாமல் பதிவு செய்திருப் பதற்குப் பாராட்டுக்கள்.

சஞ்சய்... உற்சாகமான சிரிப்பு, காதல் குறித்த தேடலுடன் கூடிய துடிப்பு என பாத்திரத்துக்குப் பொருத்தம். ரயில்வே ஸ்டேஷனில் லிஸ்னாவைப் பார்த்துப் பதறும்போதும், ஏக்தாவிடம் பேச முடியாமல் தவிக்கும்போதும் நல்ல ஸ்கோர்.

மூன்று கதாநாயகிகளில் டான்ஸராக வரும் ஏக்தா மட்டும் தேறுகிறார். காதலில் தவிக்கும்போதும், காரணம் தெரியாமலேயே சஞ்சய்யைப் பிரியும்போதும் கண்களாலேயே உணர்ச்சிகளைக் கொட்டியிருக்கிறார். ஹீரோவின் நண்பர்களுள் பொறாமை + அலட்டல் பெண்ணாக வரும் யோகேஸ்வரி எதிர்பார்த்து ஏமாறும் இடங்களில் அசத்தியிருக்கிறார். மெதுவாக நகரும் படத்தைக் கலகலப்பூட்டி நகர்த்துவது சஞ்சய்யின் நண்பனாக வரும் சாய்பிரசாந்த். டான்ஸ் கிளாஸில் ஜோடி கிடைக்காமல் தவிக்கும்போதும், மிஸ்டர் பிஸ்டன் என்று கேர்ள் ஃப்ரெண்டைத் தேடும்போதும் தியேட்டரை அதிரவைக்கிறார் சாய்.

'நாம் அதிகம் நேசிக்கிற ஒரு விஷயத்தை நாமே கொன்றுவிடுகிறோம்' என்று ஆஸ்கர் வொயில்டின் பொன்மொழியைச் சொல்லி ஆரம்பிக்கிற வசனங்கள் அனைத்தும் அடர்த்தி, அழுத்தம். இரண்டாம் பாதியில் உள்ள கலகலப்பு முதல் பாதியில் தவறு வதால் காட்சிகளின் நீளம் பொறுமையைச் சோதிக்கிறது. கேரக்டர்கள் அனைத்தும் காதல், பெண், ஆண் என்று விடாமல் பேசித் தள்ளுகிறார்கள். அதைத்

தவிர இளைஞர்களிடம் பேச வேற டாபிக்கே இல்லையா? ஏக்தாவைப் பிரிந்ததும், சஞ்சய் உடனடியாக லிஸ்னாவோடு காரணம் இல்லாமலேயே காதலில் விழுகிறார். மீண்டும் ஏக்தாவைத் தேடித் தவிக்கிறார். ஏன் இந்தக் குழப்பம்?

தமனின் இசையில் பாடல்களில் பரவச காதல் ரசம். ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் கேமரா, சென்னை, ஊட்டி, லண்டன் என எல்லாவற்றையும் அழகு சொட்டச் சொட்டப் படம்பிடித்துக் கொடுத்திருக்கிறது.

நிறுத்தி, நிதானமாக ஃப்ளாஷ்பேக்கில் புதிய உத்தியில் கதை சொல்லி இருக்கிறார்கள். அதுதான் கதையின் பலம். பலவீனமும்கூட!

- விகடன் விமர்சனக் குழு