Published:Updated:

குட்டி

குட்டி

குட்டி

குட்டி

Published:Updated:

. சினிமா விமர்சனம்
குட்டி
குட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டி

தன் காதலியை அவள் காதலனுடன் சேர்த்துவைக்க உதவும் காதலனின் கதை! 2004-ல் தெலுங்கில் கிட்டத்தட்ட ஒரு வருடம் 'ஷோ' காட்டிய 'ஆர்யா' படத்தின் ரீ-மேக் இந்த 'குட்டி'.

குட்டி

சமீர் தத்தானியை (அறிமுகம்) காதலிக்கிறார் ஸ்ரேயா. இது தெரிந்தும் ஸ்ரேயாவிடம், 'ஐ லவ் யூ' சொல்கிறார் தனுஷ். 'நீ என்னை லவ் பண்ண வேண்டாம். என் லவ்வை ஃபீல் பண்ணாப் போதும்!' என்று தன் காதலுக்கு கான்செப்ட் சொல்கிறார். ஆனால், தொடரும் சம்பவங்களால் தனுஷ் மீது வெறுப்பைத்தான் ஃபீல் பண்ணுகிறார் ஸ்ரேயா. இதற்கிடையில் சமீர் - ஸ்ரேயா திருமணத்தை நடத்த தன் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார் தனுஷ். தனுஷின் காதலை ஸ்ரேயா ஃபீல் செய்தாரா... இல்லையா என்பது கிளைமாக்ஸ்!

'ஏ... உன்னோட லவ்வர்ஸ் வந்திருக்காங்க!', 'நான் அவங்களை லவ் பண்றேன். அவங்க அவரை லவ் பண்றாங்க!' போன்ற ஒரு வரி ஜோக் மத்தாப்புகளைப் பற்றவைக்கும் கேட்சிங்கான ஒன்லைன். ஆனால், 2004 முதலே தென்னக சினிமாக்களில் அடித்துத் துவைத்துச் சாயம் வெளுத்த கிளிஷே காட்சிகளின் ரிப்பீட் அணிவரிசை ரிவிட் அடிக்கிறது.

துறுதுறு சுறுசுறுவென வளைய வரும் தனுஷ், கல்லூரி மாணவன் கேரக்டருக்குக் கச்சிதம். 'ஒரு தடவைகூட என் லவ்வை ஃபீல் பண்ணலையா? எல்லாத்தையும் விளையாட்டாவே எடுத்துக்கு வேன்னு நினைச்சுட்டியா?' என்று கலங்கும் இறுதிக் காட்சி முக பாவனைகளில், 'ஐயம் வெரி எக்ஸ்ப்ரஸிவ்' என்பதை நிரூபிக்கிறார். அதிர்ச்சியாக 'அடக்கமாகவே' வரும் ஸ்ரேயா, ஆச்சர்யமாகச் சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். பணக்காரத் திமிர் நிரம்பிய ப்ளேபாய் கேரக்டருக்கு சமீர் பக்கா!

முக்கால் பேன்ட், டி-ஷர்ட், ஐ-பாட் என தனுஷின் 'மச்சானாக' வரும் ஆர்த்தி... வாரே வாவ் நட்பு பார்ட்டி. டப்பா-கல் விளையாட்டின்போது கிச்சுகிச்சு மூட்டுபவர், தனுஷ§க்கு இணையாக ஆட்டமும் போடுகிறார். 'இவன் ஏன்டா நடிகர் சிவகுமார் மாதிரி அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்?' , 'கடைசியில விக்ரமன் பட ஹீரோ கணக்கா மாறிட்டானே?' என்றெல்லாம் அவ்வப்போது ஸ்ரீநாத் வீசும் சரவெடி செம காமெடி.

குட்டி

முதல் ஒரு மணி நேரத்தில் சுவாரஸ்யமான தளம் அமைத்து ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். ஆனால், அதற்குப் பிறகான சொதப்பல் திரைக்கதைகள் நான்ஸ்டாப் கொட்டாவிகளுக்கு கியாரன்ட்டி. 'இந்த இடத்தில் தனுஷ் என்ட்ரி கொடுக்கணுமே', 'இந்த இடத்தில் வில்லன் மனம் திருந்தணுமே!', 'இந்த இடத்தில் ஸ்ரேயா மண மேடையிலிருந்து எழுந்திருக்கணுமே!' என்று நாம் கணிப்பதெல்லாம் கச்சிதமாகக் காட்சிகளாகின்றன. 2004 கதைக்கு 2010 திரைக்கதையை அப்டேட் செய்திருக்கலாமே!

ஒருதலைக் காதலை உயர்த்திப் பிடித்து தனுஷ் பேசும் வசனங்கள் ரசிக்கவைக்கின்றன. ஆனால், அதற்காகப் படம் முழுக்கப் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமா? தனுஷ் பேச்சை நிறுத்தினால், அவரோடு இருக்கும் குழந்தைகள் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பெரியபிள்ளைத்தனமாகப் பேசும் குழந்தைகளுக்கு தமிழ் சினிமாவில் லாங் லீவ் கொடுத்து அனுப்புங்க பாஸ்! சென்னையில் நடக்கும் கதை எந்த முன்பின் தொடர்புகளும் இல்லாமல் காயல்பட்டினம், ஊட்டி என்று பயணிக்கிறது. எடிட்டிங் கத்திரிக்கு வேலையே வைக்கவில்லைபோலும்! பாலசுப்ரமணியெம் கேமரா அழகழகான லொகேஷன்களை அப்படியே அள்ளித் தருகிறது. ஓவர் பேச்சு, நாடகத்தனமான காட்சிகளால் படத்துக்கு மனசுக்குள் 'குட்டி' இடம்தான்!

- விகடன் விமர்சனக் குழு

 
குட்டி
குட்டி