Published:Updated:

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

Published:Updated:

. இரா.வினோத்
சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!
சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

'30 நாட்களில் கன்னடம்' புத்தகம் வாங்கி, உரு போட்டு, பிட் எழுதி திவ்யா ஸ்பந்தனா முன் பளிச்சென்று நின்றால், "என்னா தலைவா, சௌக்கியமா?" என்று அழகுத் தமிழில் விசாரிக்கிறார். கன்னட சினிமாவின் 'ஹிட் ஹீரோயின்' சங்கராந்தி பூஜைக்காகப் புடவை அணிந்து (யூ டு திவ்யா?) பவ்யமாக அமர்ந்திருந்தார்.

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

"அசின், த்ரிஷால்லாம் மும்பை பறந்துட்டாங்க. தமிழ் சினிமாவே ஹீரோயினுக்காக ஏங்கிட்டு இருக்கு... நீங்க கண்டுக்காம இருக்கீங்களே?"

"குட் ஐடியா. தமிழ்ல எப்பவும் அழகு ப்ளஸ் திறமை காம்பினேஷன் க்ளிக் ஆச்சுன்னா 'கனவுக் கன்னி' ஆக்கிடுவாங்க. எனக்கும் உங்க எல்லார் கனவிலும் வர ஆசைதான். கொஞ்சம் வெயிட் ப்ளீஸ். ப்ளான் பண்ணி வந்திடுறேன்!"

"தமிழ்ல எந்த ஹீரோவோடு நடிக்க ஆசை?"

"நான் சினிமா சான்ஸ் தேடும்போது, பார்த்த முதல் தமிழ்ப் படம் 'ஆசை'. அப்போதிருந்தே அஜீத்கூட நடிக்கணும்னு அவ்வளவு ஆசை. அஜீத் சாரைப் பார்த்தா என் பேரை அவர் காதுல போட்டுவைங்க. உங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன்!"

"ஹ்ம்ம்... ஏன் வேற யாரையும் பார்த்தா உங்களுக்கு ரொமான்டிக் ஃபீல் வராதா?"

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

"நம்புங்கப்பா... இதுவரை நான் யாரையாவது காதலிக்கலாமான்னு யோசிச்சதுகூட இல்லை. ஊட்டி ஸ்கூல்ல படிக்கும்போது நான் அத்லெட் பிளேயர். எப்பவும் 64-ம் நம்பர் ஜெர்சி போட்டுத்தான் விளையாடுவேன். ஒருத்தன் என்னை விடாமச் சுத்திச் சுத்தி வந்து என் ஜெர்சி நம்பரைவெச்சு, என் பேரைக் கண்டுபிடிச்சுட்டான். மறுநாள் அவன் அக்கா என்னை வந்து சந்திச்சா. நிறைய சாக்லேட் கொடுத்தா. அவன் கொடுக்கச் சொன்னானாம். நான் பயங்கர சாக்லேட் பைத்தியம். எல்லா சாக்லேட்டையும் சாப்பிட்டு முடிச்சதும், ஒரு லெட்டரைக் கொடுத்தா. அவன் கொடுத்துவிட்ட லவ் லெட்டர். 'ஸாரி... நான் சாக்லேட்லாம் சாப்பிட்டுட்டேன். அதனால லெட்டரை மட்டும் திருப்பிக் கொடுக்குறேன்'னு சொல்லி டபாய்ச்சுட்டேன்.

அதுக்கப்புறம் இதுவரை யாரும் என்கிட்ட புரபோஸ் பண்ணலை. பசங்கள்லாம் ரொம்ப பிஸியா இருக்காங்க போல!"

"அப்போ, யாராவது 'ஐ லவ் யூ சொல்லக் காத்துட்டு இருக்கீங்கதானே?"

"ப்ச்ச்... இன்ட்ரஸ்ட் இல்லப்பா. இப்போ இருக்கிற பசங்ககிட்ட காதல்ல முந்தி மாதிரி சின்சியாரிட்டி, ஹானஸ்ட்டி, டெடிகேஷன்லாம் இல்லை. உலகத்தில் பத்து பெர்சன்ட் பேர்தான் உண்மையா காதலிக்குறாங்க. மத்தவங்க மூணு மாசம் பார்க், பீச், ரிசார்ட்னு சுத்திட்டு டாட்டா சொல்லிடுறாங்க. அடுத்த மாசம் வேற ஆளு. என்னைக் காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன்தான். அந்தக் காலம் மாதிரி உருகி உருகி என்னைக் காதலிக்கணும். அப்படி ஒருத்தன் கிடைச்சா நானே அவனைத் துரத்தித் துரத்திக் காதலிப்பேன்!"

"அது ஏன் நீங்க மட்டும் அடிக்கடி பரபர சர்ச்சைல சிக்கிக்கிறீங்க?"

சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!

"என்ன சொல்றதுன்னு தெரியலை. சினிமாவுல பிரச்னையைத் தீர்க்க சேம்பர், யூனியன்லாம் இருக்கு. ஆனா, நான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் அதைஎல்லாம் கண்டுக்காம மீடியாகிட்ட ஓடிர்றாங்க. நான் மீடியாவைத் தேடிப் போய்ப் பேசுறதில்லை. ஸோ... அவங்க நினைச்ச மாதிரி என் பேர் ரிப்பேர் ஆகுது!"

"டெக்னிக்கலாகவும், மார்க்கெட்டிங்லயும் தமிழ், தெலுங்கு சினிமாக்கள் வளர்ந்த அளவுக்கு கன்னட சினிமா வளரலையே... ஏன்?"

"உண்மையைச் சொல்லணும்னா கன்னட சினிமாவில் கிரியேட்டர்கள் குறைஞ்சுட்டாங்க. அதான் நேரடி கன்னடப் படங்கள் ரொம்பக் குறைச்சலா வருது. கன்னடத்தில் பத்து படம் வந்தா, அதுல ஏழு ரீ-மேக் படம்தான். அதிலும் நிறையப் படங்களில் டபுள் மீனிங் டயலாக், அளவுக்கு அதிகமான இங்கிலீஷ், கிளாமர்னு எல்லாமே லிமிட்டுக்கு மேல இருக்கு. அதனால

ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் தியேட்டருக்கு வர்றதே இல்லை. ஒரு சில கன்னடப் படங்களில் கதையே இருக்காது. தப்பித் தவறி கதைன்னு ஒண்ணு இருந்துட்டா, திரைக்கதை செம சொதப்பலா இருக்கும். ராஜ்குமார் சார், விஷ்ணுவர்தன் சார் இருந்தப்போ தமிழ், மராத்தி, தெலுங்கு மக்களும் கன்னடப் படங்களை விரும்பிப் பார்ப்பாங்க. அந்த நிலைமை திரும்பவும் வர்றதுக்காகப் போராடிட்டு இருக்கோம்!"

 
சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!
சினிமாவில் கிரியேட்டர்கள் குறைவு!