Published:Updated:

பால் கிடைச்சா கபால்!

பால் கிடைச்சா கபால்!


ம.கா.செந்தில்குமார்
பால் கிடைச்சா கபால்!
பால் கிடைச்சா கபால் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பால் கிடைச்சா கபால்!
பால் கிடைச்சா கபால்!

'''ஏடாகூடப் பேட்டின்னு நீங்க கேக்கும்போதே கபாலத்துல இருந்து கால் கட்டை விரல் வரைக்கும் சுரீர்ங்குது தம்ம்ம்ப்ப்ப்....ர்ர்ரீ! இருந்தாலும், ப்ராப்ரா வாங்க தம்ப்ப்ரீ... கூடிக் குழாவி கும்மி அடிப்போம்."

'வெண்ணிற ஆடை' தொடங்கி, லேட்டஸ்ட் 'தமிழ் படம்' வரை ரைமிங், டைமிங், டபுள்மீனிங் என்று ஏடாகூடமாகக் கலக்கும் வெண்ணிற ஆடையாரின் குளுகுளு பேட்டி...

 

''ஒரே அர்த்தத்துல உங்களுக்கு எத்தனை வார்த்தைகள் தெரியும்?"

''ஒரு வார்த்தையை உச்சரிச்சா, நமக்கு உச்சி மண்டையில சுர்ர்ருங்கணும். கேக்குறவனுக்குக் கபாலத்துல கிர்ர்ருங்கணும். நாட்டுல எத்தனையோ தறுதலைங்க பத்துப் பதினஞ்சு மீனிங்ல எல்லாம் பேசிக்கிட்டுத் திரியுதுங்க. நான் அட்லீஸ்ட் டபுள் மீனிங்ல பேசுறது ஒரு குத்தமா தம்ம்ம்ப்ப்...ர்ர்ரீ? நான் பேசுறதுல உள்ள உயர்ந்த கருத்துக்களை ஏன் பார்க்க மாட்டேங்குறீங்க?"

பால் கிடைச்சா கபால்!

''கபாலம், மூதேவி மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு தடை போட்டா ஆடிப்போயிடுவீங்கள்ல?"

''வாயைத் தவிலாக்கி, நாக்கை நாகஸ்வரமாக்கி, உதட்டுல உறி அடிச்சு 'ப்ப்ப்ர்ர்ர்', 'தம்ம்ம்... ப்ப்ப்ரீரீரீ'ன்னு ஊரை அலறவைக்கிற வித்தை கைவசம் இருக்கிற வரைக்கும் இந்த மூர்த்தி எதுக்கும் ஆடவும் மாட்டான், ஓடவும் மாட்டான். மூதேவிக்குத் தடைபோட்டா 'நாதாரி'யைப் பிடிச்சுக்க வேண்டியதுதான்!"

''ஆடையோடு பால் குடிப்பீங்களா, ஆடை இல்லாம குடிப்பீங்களா?"

''குடிக்கிறதுக்குப் பால் கிடைச்சா, கபால்னு வாயில கவுத்துக் குடிக்க வேண்டியதுதான். அதுசரி, நீங்க சொல்ற பால் ஆண் பாலா, பெண் பாலா... இல்லை, ஆவின் பாலா?"

''நீங்க என்ன உஜாலாவுக்கு அம்பாஸடரா?"

'' 'வெண்ணிற ஆடை'ங்கிற பேருக்காக இந்தக் கேள்வியா? நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஃப்ரெண்ட்கூட சேர்ந்து 'ஜாக் அண்டு ஜில்'னு டிரை கிளீனிங் கம்பெனி ஆரம்பிச்சேன். டெய்லி ரெண்டு மூணு சட்டை, பேன்ட் திருடு போயிட்டே இருந்துச்சு. ஒரு எழவும் புரியலை. எதேச்சையா ஒரு நாள் பார்த்தப்போ, ஆபீஸ் வாசல்ல நின்ன செக்யூரிட்டி வழக்கத்துக்கு மாறா குண்டா இருந்தது மாதிரி இருந்துச்சு. 'என்னப்பா, ரொம்ப செழிப்பா இருக்கே?'ன்னு அவன் தோள் மேல கையைப் போட்டேன். மெத்தை மாதிரி புஸ்புஸ்னு இருந்துச்சு. டிரெஸ்ஸை எல்லாம் அவுத்து ஆராய்ஞ்சு பார்த்தா, சட்டைக்குள்ள சட்டை, அதுக்குள்ள இன்னொரு சட்டைன்னு எல்லா சமாசாரத்துக்குள்ளயும் நாலஞ்சு அயிட்டங்களை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கான். மிரண்டுட்டேன். இதுல ஏதாவது ஏடாகூடம் இருக்கா?"

''மஞ்சள், பச்சை, நீலம்... இந்த கலர்களைப் பார்த்தா உங்களுக்கு என்ன தோணும்?"

பால் கிடைச்சா கபால்!

''மஞ்சள்னா மங்களகரம். பச்சைன்னா பசுமைப் புரட்சி. நீலம்னா வானம். வேற என்ன எதிர்பார்த்தீங்க? நாங்கள்லாம் மோர்லயே மத்து இல்லாம வெண்ணெய் எடுக்குறவய்ங்க!"

''குரு 8-ம் வீட்டுக்குப் போறார்னு சொல்றாங்களே... அப்ப 8-ம் வீட்ல இருக்கிறவர் எங்கே போவார்?"

''ம்ம்ம்... டூ லெட் போர்டு தேடி தெருத் தெருவா அலைவாரு. யெல்லோபேஜஸ்ல எம்ட்டி வீடு இருக்கான்னு கும்ட்டி அடுப்போடு தேடுவாரு. ஏங்க, ஏடாகூடப் பேட்டின்னு பேர் வெச்சுட்டு குரு பகவான் வரைக்கும் குசும்பு பண்றீங்களே?"

''வர்ற தேர்தலுக்கு யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?"

''இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க? போடுறது எல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் பச்சை கலர் பட்டனைப் பார்த்து அமுக்கணும்!"

 
பால் கிடைச்சா கபால்!
பால் கிடைச்சா கபால்!