18-02-09

சினிமா

பின்னியெடுக்கும் ஃபீலிங் எஸ்.எம்.எஸ்!

- ஆர்.சரண்

காதலர் தினப் பரிசாக ஒரு நாள் முன்னதாகவே 'சிவா மனசுல சக்தி' உலா ஆரம்பம்!

''காதலர் தின மூடுல நாடே தகிச்சுக்கிட்டு இருக்கு. உங்க ரெண்டு பேருக்கும் நடுவே நெளியுற மிஸ்ட்ரியான கெமிஸ்ட்ரி பத்திதான் இண்டஸ்ட்ரி முழுக்கப் பேச்சு. தயவுசெஞ்சு அந்த சீக்ரெட்டைச் சொல்லுங்களேன்... ப்ளீஸ்!'' என ஜீவா, அனுயாவிடமே கேட்டோம். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து, இவர்கள் தங்கள் 'கேரக்டர்' பற்றி போட்டுக்கொடுத்த தகவல்கள் ஜாலி பாஸ்பரஸ் ரகம்!

பொண்ணுங்கதான் ஆரம்பிக்கணும். சக்தி ஸ்டார்ட்...

''சிவா இருக்கானே... சரியான டுபாக்கூர் டூமாங்கோலி! 'வால்ல்ல்லிப வயசு'ன்னு சொல்லிட்டுத் திரியுற வடிவேலுவின் நிஜமான யூத் வெர்ஷன். (கேட்டா, சிம்பு ரசிகன்னு சொல்லுவான்!) எப்பவும் டீன்-ஏஜ்னு காலரைத் தூக்கிவிட்டுக்குறதுல 'மப்பு' மாப்பிள்ளைக்கு அவ்ளோ பெருமை. அவன் சிவப்பா இருக்கிறதால, ஹேண்ட்ஸம் பாய்னு நினைச்சுராதீங்க. சரியான 'பீர்பாய்!'

எப்போ பார்த்தாலும் ஃபீலிங் பிடில் வாசிச்சுட்டே திரிவான். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு காதல் அப்ளிகேஷனை ஒளிச்சுவெச்சுக்கிட்டுதான் பேசுவான். பயங்கர ஜொள்ளு சார். குடிக்கிறதே தப்பு... அதுல இவன் ஓசிக் குடி வேற. அதுலயும் ஓவர் டைம் போட்டுக் குடிப்பான். எனக்கு எப்படித் தெரியுமாவா..? இவனைப் பார்க்க நேராவே டாஸ்மாக் போயி நான் பட்டபாடு இருக்குதே... அங்கே இவன் உட்கார்ந்திருந்த போஸைப் பார்த்தே பேஜார்ஆகிட்டேன். இவனுக்கு டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தே ஃப்ரெண்ட்ஸெல்லாம் டிங்கரிங் ஷாப்ல கெடக்காங்களாம். இன்னிக்கு எந்த ஆட்டைப் பிரியாணி போடலாம்னே திரியுறதுதான் இவன் ஃபுல் டைம் ஜாப்!

ஆங்! இன்னொரு விஷயம்... தண்ணியடிச்சுட்டான்னா இவன் வாய்ல இங்கிலீஷ் சிக்கி, புலி வாய்க்குப் போன மானாகிரும். 'எலிஃபென்ட் மேட்டரு... இங்கிலீஷூ பீட்டரு'ன்னு பின்னி எடுத்துடுவான். கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வந்தப்போ, இவன் ஸ்லாங்ல யாராவது பீச் ஓரம் நின்னு பேசி இருந்தா, லேண்ட் ஆகாமலேயே கப்பலை ஒடிச்சுத் திருப்பி ஓடிப் போயிருப்பாங்க!

பேருக்கு ஒரு மொபைல் வெச்சிருக்கான் ராஸ்கல்... மறந்தும்கூட யாருக்கும் அவுட்கோயிங் பண்ணிர மாட்டான். சரியான மிஸ்டு கால் மகாதேவன்.

அதுசரி! இந்த பீலாவாலா உஷார் பண்ற பொண்ணுங்கள்லாம் 'பபாய்' சொல்லிட்டு பறந்துகிட்டே இருந்தா இதயம் எப்படித்தான் தாங்கும்? அதான், 'ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்'னு சொல்லிகிட்டே என்னைக் கலாய்க்க ஆரம்பிச்சான்!''

சக்தி ரூபமாக அனுயா சத்தாய்த்து முடிக்க... ''என்ன சிவா, டோட்டல் டேமேஜால்ல இருக்கு! நீ அம்புட்டுதான் போல!'' என்று சிவா கேரக்டர் போர்த்தியிருந்த ஜீவாவைச் சூடேற்றினோம்.

''யார் சார் டுபாக்கூர்? ஓ.கே. நான் டுபாக்கூர்னே வெச்சுக்குவோம். அப்போ ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு ஒண்ணரை மணி நேரம் மொக்கை போடுறதுக்கு இன்னா பேரு சார்? வாய் கிழியப் பேசியே எல்லா பிரச்னைக்கும் வாய்தா வாங்கிடுவா இந்த சக்தி! சப்பை மேட்டருக்கெல்லாம் டூ மச் பில்ட்-அப் பண்றதுதான் அவளோட ஃபுல் டைம் வேலை.

பேச ஆரம்பிச்சா பொய்யா கொட்டித் தீத்துருவா! என்னமோ 'பார்வதி ஓமனக்குட்டனுக்குப் பதில் நான் போயிருந்தா, முதல் பரிசைத் தட்டியிருப்பேன்'கிற ரேஞ்சுலயே திரியுற அலட்டல் அம்பாஸடர். பைக்ல லிஃப்ட் கேட்டுப் போறது இவ போங்கு பொழுதுபோக்குல ஒண்ணு. தமிழையே இங்கிலீஷ் மாதிரி பேசுற பசங்கதான் சார் அவ ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்.

இவளை நம்பி ஒருத்தன் 'பிளாக் கேட்' மாதிரி கூடவே சுத்திக்கிட்டிருக்கான். அவனை மாதிரி இன்னும் எத்தனை பேரை இவ சுத்தல்ல விட்டிருக்காளோ!

ஏன் சார், டாஸ்மாக் போறவன்லாம் கெட்டவனா? அப்புறம் ஏன் கவர்மென்ட்டே டாஸ்மாக்கை நடத்துது. ஒரு மனுஷனுக்கு மனசு கந்தலாகிப் போனா ஃபீல் பண்ணி ஒட்டு போடுறதுக்கு வேற எங்ங்ங்ங்ங்க சார் (சிவாஜி ஸ்டைலில்) போக முடியும்? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஆம்பளைங்க குடிக்கிறதுக்குக் காரணமே, அவங்களை ஊறுகாய் மாதிரி தொட்டுகிட்டு தூரப் போடுற இவளை மாதிரி பொண்ணுங்கதான், சார்!

இங்கிலீஷைப் பத்தி இவ பேசுறா பாருங்க... அதான் இன்டர்நேஷனல் காமெடி! அது இன்னா இவ பாட்டன் வூட்டு சொத்தா? பிரெஞ்சு தெரிஞ்சிருந்தாத்தான் பிரெஞ்சு கிஸ்ஸை பிக்-அப் பண்ண முடியுமா? இங்கிலீஷ் தெரிஞ்சவன்தான் கான்வென்ட் பொண்ணை செட்-அப் பண்ண முடியுமா? ஏன் இந்த சக்தி இப்படி இருக்கா? ஐ டோன்ட் நோ ஒய். ஆல் ஃபிகர்ஸ் ஆர் ஃபாலோயிங் மை! பார்த்துட்டே இருங்க... தியேட்டருக்கு வந்து பசங்க விசிலடிச்சுக் குமிக்கும் போது தெரியும் யார் லோக்கல்... யார் கலக்கல்னு!

வீம்புக்கு பீட்ஸா தின்னுக்கிட்டு விக்கிக்கிட்டு அலையுறவ அவ. என்னை கீழ்ப்பாக்கம் அனுப்பப் போறதா 'பெட்' கட்டிஇருக்காளாம். பார்த்துட்டே இருங்க. என் 'மடி'ப் பாக்கத்துல அவளை மடிச்சுப் போடறேனா இல்லையானு'' - என்றபடி 'சிவா' தன் செல்லை எடுத்து யாருக்கோ எஸ்.எம்.எஸ். தட்ட ஆரம்பிக்க... மெதுவாக எட்டிப் பார்த்தோம்.

''அட, டென்ஷனாவாதே தலைவா! பிப்ரவரி 13-தான் தமிழ்நாடே அடிக்கப் போவுதே எக்குத்தப்பு எஸ்.எம்.எஸ்!'' என்றபடி மறுபடி 'ஜீவா'வாக மாறி ஏறிப் பறந்தார் காரில்!