18-02-09

சினிமா

நினைத்தாலே இசைக்கும்!

- ஆர்.சரண்

எம்.ஐ.ஏ.' என்பார்கள் மாதங்கி மாயா அருள்பிரகாசத்தை! மாயாவின் முதல் மேடை நிகழ்ச்சியான 'மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்' என்பதன் சுருக்கம் 'எம்.ஐ.ஏ.'

ஹிப்ஹாப் பாடகி, கவிஞர், ஓவியர் என மாயாவினுடையது பல தளப் பயணம்.

'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் மாயாவே எழுதிப் பாடிய 'ஓ... சாயா' பாடல் ஆஸ்கருக்கான பரிந்துரையில். மாயாவே இசையமைத்துப் பாடியிருக்கும் 'பேப்பர் பிளேன்ஸ்' பாடல் கிராமிய விருதுக்கான பரிந்துரையில். 'ஸ்லம்டாக்' பட இசைக்காக கோல்டன் குளோப் விருது பெறும்போது 'தேங்க்ஸ் டு மாயா!' என்று ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லியிருப்பது பெருமித அறிமுகம். அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் வசித்த படி, இசையுலகின் உச்சங்களைத் தொடும் மாயா ஒரு தமிழ்ப் பெண். கடல் கடந்த சிக்னல் இடர்ப்பாடுகளைத் தாண்டியும் வசீகரிக்கிறது மாயா தமிழ்!

''வாழ்த்துக்கள் மாயா!''

''வணக்கம். சென்னை வாழ்த்துகள் என்றுமே என் சந்தோஷம்! என் தந்தை அருள்பிரகாசம் தீவிர ஈழ ஆதரவாளர். பத்து வயது வரை நானும்இலங்கை யில்தான் வளர்ந்தேன். முத லாம் உள் நாட்டுப் போரில் இலங்கை அரசு பூர்வகுடித் தமிழர்களையும் அவர்களது குடும்பங்களையும் கொன்று குவிக்கத் தொடங்கியபோது, என் தாய் கலாவுடன் உயிர்பிழைத்துச் சென்னைக்கு வந்தேன். இலங்கையில் நிலைமை சீரடையும் நிலை தென்படாததால், அம்மா, அக்கா, தம்பியுடன் லண்டனுக்கு அகதிகளாக வந்தோம். லண்டனுக்கு வரும் முன் சென்னை யில் நான் குடியிருந்த சில நாட்கள் என் வாழ்வின் சொற்ப மான வசந்த தினங்களுள் அடங்கும். அங்குதான் நன்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டேன். பால்யத்தில் விழுந்த என் பற்கள் சென்னையில்தான் எங்கோ புதையுண்டு கிடக் கின்றன!''

''ஆரம்பத்தில் நீங்கள் ஓவியராகத்தான் அறியப்பட்டீர்கள்... ஆனால், இன்று ஹிப் ஹாப் பாடகி. எப்படி?''

''நான் லண்டன் செயின்ட் மார்ட்டின் ஓவியக் கல்லூரியில் படித்தேன். லண்டன் வாழ்வியலையும் ஈழ அரசியலையும் சித்திரித்த என் ஓவியங்கள் 2001-ல 'Alternative Turner' விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. அதன் மூலம் 'Elastica' இசைக் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் ஃப்ரீச்மேன் அவரது இரண்டாவது ஆல்பத்துக்கு ஓவியம் வரைய என்னை நாடினார். அப்படியே அந்தக் குழுவினரின் அடுத்தடுத்த ஆல்பங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. சிறு வயதில் இருந்தே ஹை-பிட்ச்சில் பாடும் என் குரல் வளத்துக்கு நன்றி. கல்லூரிக் காலத்திலேயே முதல் இசை ஆல்பம்'அருளர்' உருவாக்கினேன். என் தந்தையின் நினைவுகளால் உருவான அருளர் பாடல்கள், கல்லூரி வானொலியில் பிரபலமானதால் நிறைய வாய்ப்புகள் என்னைத் தீண்ட, அப்போது தொற்றிக்கொண்ட இசை ஜுரம், இன்னும் டிகிரி குறையாமல் உலுக்கிக்கொண்டு இருக்கிறது!''

''ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியது குறித்து...''

''ரஹ்மான் இசையில் பாடியது, ஒரு தமிழச்சியாக எனக்குப் பெருமை. அவ்வளவு பெரிய மேதை, என் ஹிப்ஹாப் பாடல்களின் ரசிகர் என்று எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதை மறக்க மாட்டேன். கோல்டன் குளோப் விருதினை அவர் வாங்கும்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசி யமே இல்லை. ஆனால், அவர் எல்லாரையும் விடச் சிறந்த வர்!''

''உங்கள் பாடல்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாகச் சொல்லி அமெரிக்கக் குடியுரிமை ஆரம்பத்தில் மறுக்கப்பட்டதே?''

''என் ஆரம்ப கால ஆல்பங்களில் புரட்சிக் கோட்பாடுகள் அதிக மாக இருந்ததாக விமர்சனங்கள். 'கலகக்காரி' என்ற பட்டம் காரணமாக அது நிகழ்ந்தது. என் இசை மொழி ருவாண்டா, காங்கோ, சூடான் மக்களின் பாரம்பரிய இசையையும், பறை, நாயனம் போன்ற தமிழ்ப் பாரம்பரிய இசைக் கருவிகளையும் பிரதிபலிக்கும். அந்த உச்சஸ்தாயி இசை உலுக்கி எடுப்பதால், அந்தப் கலகப் பேர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் ஆல்பங்களில் புரட்சிக் கருத்துக்கள் தூக்கலாகவே இருக்கும். அவையெல்லாம் சிறு வயதில் நான் அனுபவித்த துன்பங்கள், துயரங்கள். அகதிப் பெண் எழுதிய 'ஆயிரம் கரங்கள்கொண்டு தடைகளைத் தகர்ப்போம்!' என்ற வரியில் வன்முறை இருப்பதாகத்தானே அவர்கள் நினைப்பார்கள். ஆனால், நான் உலகளாவிய மனிதநேயச் சிந்தனையில் நம்பிக்கை உள்ளவள். இதை அனைவரும் புரிந்துகொண்டதால் இப்போது அமெரிக்காவிலேயே என்னால் வசிக்க முடிகிறது!''

''இலங்கையின் யுத்த நிலவரங்கள் குறித்து..?''

''கடல் கடந்து காத்துக் கிடந்தாலும், ஈழ மக்களின் வலிகளையும் வேதனை களையும் உணர்கிறேன். லண்டனில் வளர்ந்து இருந்தாலும், சிறுவயது நினைவுகள் என் வேராக அங்கேதான் பொதிந்துகிடக்கின்றன. வேரில் வெந்நீர் ஊற்றப்படும் விளைவுகள் என்னை சுருங்கச் செய்கிறது. ஈழ நிகழ்வுகள் குறித்தான செய்திகளை வெளியிட முடியாத அளவுக்குபத்திரி கையாளர்களையும் சர்வதேச மனித உரிமை

ஆர்வலர்களையும் தடுக்கிறது அங்குள்ள அரசு. அவர்களைக் கண்டிக்கும் உரிமை கொண்டவர்களே கைகட்டி வேடிக்கை பார்க்கும்போது, எங்களைப் போன்றவர்களின் கண்டனங்கள் என்ன செய்து விடும் என்பதே என் வேதனை!''

''உங்கள் காதல் குறித்து...''

''கிதார் பிளேயரான பெஞ்சமின் என் காதலர். காதலின் அடையாளமாகத் தாய்மையை அனுப வித்துக்கொண்டு இருக்கிறேன். இரண்டொரு நாட்களில் பிரசவம் நிகழலாம். இதனால் விருது விழாக்களுக்குக்கூட என்னால் செல்ல முடிய வில்லை. ஆஸ்கர், கிராமியைவிட 'தாய்' எனும் பட்டம் வாழ்வின் அர்த்தத்தைக் கூட்டும் தானே!''