18-02-09

சினிமா

டேக் ஓ.கே!

- கிஷோர், டெலிசினி

'காதல் ஸ்பெஷல்!'

சீனியரிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்! 'சமூகத்தின் நலனைக் கருத்தில்கொண்டு, 'உங்க வாழ்க்கையில மொக்கையா லவ் ஃபீலிங் பிகிடி ஊதுன பசங்களைப் பத்திச் சொல்லுங்களேன்!' என்று சில ஜில் ஜிகிடிகளிடம் கடலை போட்ரு கிஷோரு!' என்று மைண்ட் வாய்ஸ் கேட்க, முதலில் குதித்த குளம்... விஜய் டி.வி. ஆபீஸ்!

''உங்களுக்கு நூல்விட்ட பசங்களைப் பத்தியும் நீங்க பல்பு கொடுத்த அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்க அம்மணி!'' என்றதும், ரம்யா முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்பு.

''நான் டென்த் படிச்சுட்டு இருந்தப்போ இன்னொரு செக்ஷன் பையனுக்கு, 'ரம்யாவை லவ் பண்றேன்டா மச்சான்'னு பசங்ககிட்ட ஃபிலிம் காட்டுறதுதான் ஃபுல்டைம் வேலை. அவன் கிளாஸ் பக்கம் நான் போனா, அவன் பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடுவாங்க. என் கிளாஸ் பக்கம் அவன் வந்தா, என் பேரைச் சொல்லி அவனைக் கூப்பிடுவாங்க. பப்ளிக் எக்ஸாமுக்கு ஒரு வாரம் முன்னாடி, என் ஃப்ரெண்டைத் தூது அனுப்பி, எங்க சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைச் சாத்தியமாக்கினான். ('ஹிஸ்ட்ரி எக்ஸாமுக்குப் படிச்சுட்டு இருந்தீங்களா?' கை, காலெல்லாம் உதற, லாங் சைஸ் நோட்புக்கை என்கிட்ட கொடுத்தான். முப்பது நாப்பது பக்கத்துக்கு 'ஐ லவ் யூ ரம்யா'னு கண்டதையும் கிறுக்கி இருந்தான். 'ஒரு வாரத்துல எக்ஸாம் வெச்சுக்கிட்டு லவ் கேக்குதா?'னு திட்டிட்டு, அரை லிட்டர் அட்வைஸ்களை அள்ளித் தெளிச்சுட்டு வந்துட்டேன். நான் நினைச்சது போலவே எக்ஸாம்ல அவன் ஃபெயில். அப்பவே அவனும் அப்பீட்டு!

கோச்சிங் கிளாஸ்ல சிக்கலான ஒரு சித்தப்பு எல்லாரையும் பதறிச் சிதறி ஓட வைப்பான். ஆனா, என்கிட்ட மட்டும் ஃபீலிங் ஃபியூச்சர் ஃபிலிம் ஓட்டுவான். 'ஆத்துக்காரி'ம்பான். திரும்பிப் பார்த்தா, 'பொண்டாட்டின்னு சொன்னேன்'னு அருஞ்சொற்பொருள் சொல்லி அலட்டுவான். 'உம்னு சொல்லு... நாளைக்கே வீட்ல இருந்து போட்டிருக்கிற பேன்ட்டோட ஓடி வந்துடறேன். என்னை வெச்சுக் காப்பாத்த மாட்டியா?'ன்னு கேப்பான். புத்தி வர்ற மாதிரி ஒரே அடி ஓங்கி அடிக்கணும்னு முடிவு பண்ணி, ஃப்ரெண்ட்ஸ்களுக்கு பார்ட்டி வைக்கிறதா, 'காபி டேக்கு வந்துடு'ன்னு ஒரு மெசேஜ் தட்டிவிட்டேன். மறு நாள் ஷார்ப்பா வந்து சல்யூட் அடிச்சான். டக்குனு கையில வெச்சிருந்த ராக்கி கயிற்றை அவன் கையில கட்டிவிட்டேன். கன்ட்ரோல் பண்ண முடியாம கதறி அழுதவன், கோச்சிங் கிளாஸூக்கே அப்புறம் அப்பீட்டு!'' என்றவரிடம், ''இத்தனை பேரையும் புறந்தள்ளிட்டு பல காலமா கால் கடுக்கக் காத்திருக்கிற அந்த எவனோ ஒருவன்... அந்த எவனோ ஒருவன்... இவன்தானா?'' என என் காலரை நான் தூக்கிவிட... ''கிஷோர்ர்ர்ர்ர்ர்! உனக்கு எப்பவுமே விளையாட்டுதான்!'' என்று சொல்லி மண்டையில் நச்சுனு குட்டு வைத்து எஸ்கேப் ஆனது கிளி.

என் அடுத்த டார்கெட், சரண்யா மோகன். ''நீங்க குட்டிப் பொண்ணா இருக்கும்போது, குட்டியா ஒரு வெள்ளை ஃபிராக் போட்டுக்கிட்டு, 'ஆனந்தக் குயிலின் பாட்டு'னு 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஆடும்போதே, 'இன்னாருக்கு இன்னாரு'தான்னு என் மனசுல பச்சை குத்திக்கிட்டேனுங்க!'' என்றேன். நான் சொன்னதைக் காதில் அவர் வாங்கிக்கொண்டதாகவே தெரிய வில்லை. ''இத்தனை நாளா நல்லாப் பேசுறேன்னுதான் எல்லாரும் பாராட்டிட்டு இருந்தாங்க. 'வெண்ணிலா கபடிகுழு' படத்துலதான் பேசாமலே பிரமாதப்படுத்தி இருக்கே!'னு சொல்றாங்க. பெருமையா இருக்கு. ஆனா, அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அப்போ, 'தப்பு பண்ணிட்டோமோ'ன்னு நான் பயந்துட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல துறுதுறுனு ஒரு பையன் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சிட்டே இருந்தாரு. ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த கிராமத்துப் பையன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா, அவர்தான் அந்தப் படத்தின் ஹீரோ விஷ்ணுனு தெரிஞ்சப்போதான், அந்தப் பயம் வந்தது. ஆனா, போகப் போக அந்தப் பயம் தேவையில்லைனு சொல்ற அளவுக்கு விஷ்ணு பக்காவா நடிச்சு ஸ்கோர் பண்ணிட்டாரு'' என்றவரிடம், ''காதலர் தினத் தைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க சரண்யா'' என்றேன். ''ஒரு கும்பலே என்கிட்ட காதல் சொல்லி யிருக்கு. ப்ரபோஸ் பண்ணின ஆட்களோட தன்மையைப் பொறுத்து, என்னோட ஸ்கூல்லயோ, வீட்லயோ சொல்லி மாட்டிவிட்டிருக்கேன். ஆனா, இதுவரைக்கும் நான் காதல்ல மாட்டினதில்லை. காதல்ங்கிறது தும்மல் மாதிரி. எப்ப வரும்னு சொல்ல முடியாதில்லையா?'' என்று கேட்டதும், 'ஹச்!' என்று தும்மி ரொமான்ஸ் லுக்கைப் போட்டேன். 'களுக்' சிரிப்பை உதிர்த்துவிட்டு, சிட்டாகப் பறந்தது பொண்ணு. ('வான்ட்டடா வர்றவனை ஏம்மா நம்ப மாட்டேங்குறீங்க!')

'மோதி விளையாடு' ஷூட்டிங் ஸ்பாட்! வினய்யுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருந்த காஜல் அகர்வால், என்னைப் பார்த்ததும் ஓடி வந்தார். எனக்குள் 'தந்தன தந்தன தந்தனா!'

''தெலுங்கில் சிரஞ்சீவியின் பையன் ராம்சரண் தேஜாவின் இரண்டாவது படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. ஒரு ரகசியம்... சிரஞ்சீவியோட ஒரு பழைய பாட்டை இந்தப் படத்துல ரீ-மிக்ஸ் பண்றாங்க. அதுல ராம்சரணுடன் சேர்ந்து ஆடப்போறது சிரஞ்சீவியேதான்!'' என்று ஸ்கூப் கொடுத்தார். ''நீங்க அங்கே யாரையோ காதலிக்கிறீங்களாமே?'' என்றால், ''காதல் மறைக்க வேண்டிய விஷயமா என்ன... நான் காதலிச்சா உங்ககிட்டே சொல்ல மாட்டேனா பிரதர்?'' என்று சொல்ல, 'இன்னாது... பிரதரா?' சினிமா போலவே அடுத்த செகண்டில் மறைந்தேன்.

செல்போன் மெமரி அலாரம் 'கண்கள் இரண்டால்...' என்று ஒலிக்க, பெள்ளிராஜ் நினைவுக்கு வந்தார். மாசத்துக்கு ஒரு ஆம்பளைப் பையனிடமாவது பேசுவோம் என்று போன் போட்டால், பார்ட்டி கல்யாணம் முடித்த உற்சாகத்தில் 'ஹலோ!' சொன்னார். பெள்ளிக்கு ஜில் ஊட்டியில் கல்யாணம். ''கல்யாணத்துக்கு வராத உன் மேல கோபமா இருக்கேன் கிஷோர்!'' என்றவரை போனிலேயே தாஜா செய்ய பத்து நிமிடங்கள் பிடித்தன. ''காதல் திருமணமா?'' என நான் கொக்கி போட, ''ஆமா! ஆனா, ஒரு சின்ன ட்விஸ்ட். இது திருமணக் காதல்! இனி, என் மனைவி சோனியாவைக் காதலிக்கணும். பொண்ணு பார்க்கப் போனப்போ, 'விகடன் டாப் 10 நம்பிக்கை'களில் நான் இருந்த புத்தகத்தோடுதான் வரவேற்றாங்க. தேங்க்ஸ் டு அப்பா - அம்மா, ஜேம்ஸ் வசந்தன் சார், விகடன். இனி, ரொமான்ஸ் வித் சோனியா!'' என்று நெகிழ்ந்தார் பெள்ளி.

'கார்த்திகை' படத்தின் ஷூட்டிங்கில் 'ஜிகுஜிகு' காஸ்ட்யூமில் சமிக்ஷா! ''என்ன ஷமீ... ஃபுல் டைம் கிளாமர் ஆர்ட்டிஸ்ட் ஆகிட்டீங்க போல?''

''அப்படி ஒரு இமேஜ் விழுந்துருச்சு கிஷோர்ப்பா (ஷமீ செல்லமா அப்படித்தான் என்னைக் கூப்பிடுவாங்க!) அழகா சேலை கட்டி, தலை நிறையப் பூ வெச்சு ஃபிரேம்ல வந்து நின்னா நல்லாத்தான் இருக்கும். ஆனா, அப்பிடிப் படம் எடுத்தா, அதை நான் மட்டும்தான் ரசிப்பேன். ரொம்ப வல்கரா இல்லாம கிளாமர் கில்லின்னு பேர் வாங்கணும்கிறதுதான் இப்போ என் டார்கெட்'' என்றவரிடம், ''அட, அதை விடுங்க. இந்த காதலைப் பத்தி நீங்க ஏதாவது கருத்து சொல்லுங்களேன்!'' ('பைக்கில் பெட்ரோல் தீருவதற்குள் யாரையாவது மடக்கணும் மச்சான்!') செல்போன் இன்பாக்ஸில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். மட்டும் தட்டிவிட்டு, ''இதைப் படிச்சுட்டு சந்தோஷமா சிரிச்சுட்டே இரு!'' என்றபடி எஸ்ஸானார். அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்.... வேணாம் விடுங்க. சும்மாவே ஊருல ஒரு பய என்னை மதிக் கிறதில்லை. இதுல இது வேறயா?

லஞ்ச் டைம். எங்கே தேட்டை போடலாம் என்று யோசித்தபோது, பக்கத்து ரேடியோவில் 'சூச்சூ மாரி' ஒலித்தது. உடனே எஸ்.எஸ்.குமரன் வீட்டுக்கு விடு ஜூட். 'பூ' பட இசையமைப்பாளர் ஏற்கெனவே ஒரு முறை வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். அவர் மனைவி அனுஷா தேவி நெல்லை சமையலில் கில்லி. மனுஷன் பேச ஆரம்பித்தால், மனைவியைப்பற்றி பாரா பாராவாகப் பேசுகிறார். (மணக்க மணக்க நெல்லை ஸ்பெஷல் வஞ்சிர மீன் குழம்பை லவட்டிக்கொண்டுதான் காது கொடுத்தேன்!)

'' 'பூ' படத்துல நல்ல பேர் கிடைச்ச பிறகுதான் அனுஷா நார்மலாவே இருக்காங்க. சென்னை துறைமுகத்துல ஆடியோ விஷூவல் ஆபீஸரா இருக்கேன்னுதான் எனக்குப் பொண்ணே கொடுத்தாங்க. நான் இசை ஆர்வத்துல திடீர்னு ஒருநாள் இருக்குற நிலபுலன்களை வித்துட்டு, இசைக் கருவிகளை வாங்கிட்டு ஆபீஸூக்கு லாங் லீவ் போட்டுட்டு வந்தா, எந்த பொண்டாட்டிதான் சும்மா இருப்பா! 'என் வீட்டுக்காரரு ஒழுங்கா வேலைக்குப் போகணும் கடவுளே!'னு வேண்டிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் அவங்களுக்கு டஃப் கொடுக்குற மாதிரி ரூமுக்குள்ள போய்க் கதவை அடைச்சுக்கிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா ரெண்டு பேரையும் மனசுல ஏத்திக்கிட்டு, சோறு தண்ணி இல்லாம டியூன்களைப் போட்டுக்கிட்டு இருந்தேன். தினமும் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற சிவன் பார்க்ல வாக்கிங் போறது அவ வழக்கம். அந்த பார்க்குக்கு டைரக்டர் சசி சாரும் வாக்கிங் வருவாராம். அன்னிக்கு நான் சினிமாவுக்குத் தேறுவேனா... மாட்டேனானு தெரிஞ்சுக்குறதுக்காக சி.டி-யில என் டியூன்களை எடுத்துட்டு போய்க் கொடுத்திருக்காங்க. அதைக் கேட்டுட்டுதான் என்னை 'பூ' படத்துக்கு செலக்ட் பண்ணினார் சசி. நான் மியூஸிக் டைரக்டர் ஆனதுக்கு என் மனைவியோட அந்த டென்ஷனும் பிரார்த்தனையும்தான் காரணம்'' என்றவர், ''இப்போ என் மனைவியே என் வேலையைவிடச் சொல்றாங்க தெரியுமா? 12 பட வாய்ப்புகள் வந்திருக்கு சார்!'' என்று குதூகலிக்கிறார் குமரன். அவரை வாழ்த்திவிட்டு, அனுஷா மேடத்திடம் மீன் குழம்புக்கு தேங்க்ஸ் சொல்லி விட்டு, வரும் வழியில் ஹெட்போனில் எஃப்.எம். சிச்சுவேஷன் ஸாங்...

'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!'

- (ஷாட் பிரேக்!)