விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டேக் ஓ.கே!

டேக் ஓ.கே!


01-04-09
சினிமா
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!
 
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!
- கிஷோர், டெலிசினி

டேக் ஓ.கே!

''என்ன கிஷோர்... கொஞ்ச நாளா சன் மியூஸிக் பக்கம் ஆளையே காணோம்?'' என்றபடி தோளில் கை போட்ட லிங்கேஷிடம், ''ஆஹா, வாசல்லயே வளைச்சு வெச்சு வகுப்பெடுக்குறீங்களே, தலைவா?'' என்றேன். கண்டுகொள்ளவே இல்லை. '''கல்லூரி' படத்துல நான் கமிட்டாகி கழட்டிவிடப்பட்ட விஷயமெல்லாம் உனக்கே தெரியும். அதுக்குப் பிறகு சினிமா வாய்ப்பு எதுவும் செட் ஆகலை. ஏ.ஆர்.முருகதாஸ் அசிஸ்டென்ட் ஏ.சி.குமார் ஒரு கதை சொன்னார். அடுத்த மாசம் ஷூட்டிங். தன் வினை தன்னைச் சுடும்னு சொல்வாங்கள்ல... அந்த மாதிரி யாரோட வினை யாரைச் சுடுதுங்கிறதுதான் படத்தின் ஒன்லைன்'' என்று கொஞ்சம் யோசித்தவர், ''தலைவா... இந்த விஷயம்லாம் நான் பேசலாம்தானே? இதெல்லாம் ஹீரோ லிமிட்டுக் குள்ளதானே வருது. பார்த்து தலைவா... பல நாள் கனவு!'' என்றவர் காதருகில் வந்து, ''அநேகமா எனக்கு ஜோடி சரண்யா மோகனா இருக்கலாம்!'' என்று வெட்கப்பட்டார்.

''தெம்பா வந்துட்டாங்க ரம்பானு எழுதுங்க சார்'' என்று தோள் தட்டினார் ரம்பா. தன் அண்ணன் தயாரிக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்துக்காக ஏவி.எம்-மில் மகா மெகா ஆட்டத்தில் இருந்தார். ''என்னை எவ்வளவோ பேட்டி எடுத்துட்டீங்க. நம்ம சுஜியைப் பேட்டி எடுங்க'' என்றபடி ரம்பா அழைத்தது சுஜிபாலாவை. ''ஏழெட்டுத் தமிழ்ப்படங்கள், மலையாளம், தெலுங்கில் ஒவ்வொரு படம்னு கிட்டத்தட்ட 10 படங்கள் நடிச்சிட்டு இருக்கேன்'' என்றவரிடம், ''ஆனா, பளிச்னு உங்களுக்குப் படம் எதுவும் சிக்கலையே?'' என்றேன். ''நான் அப்கமிங் ஆர்ட்டிஸ்ட்தானே? போகப் போகத்தான் பெரிய படங்கள் கிடைக்கும். 'இரு நதிகள்' படத்துக்காக பிரான்ஸ் போயிருந்தபோது, பயங்கர பனிப்பொழிவு. ரெண்டு கர்ச்சீப் சேர்த்தா என் காஸ்ட்யூம். நான் சவாலா எடுத்துக்கிட்டுதான் டான்ஸ் ஆடினேன். அங்கே கோட் சூட்ல இருந்தவங்க என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சாங்க!'' என்று லகலகத்தார்.

டேக் ஓ.கே!

பிக் எஃப்.எம்-மில் தின மும் இரவு 9 மணிக்கு சர்வரோக நிவாரணியாக, ஹஸ்கி வாய்ஸில் தீர்வு சொல்லும் ஸ்மிதாவைச் சந்தித்தேன். 'ரகசியமாய் - ரகசிய சிநேகிதி'ங்கிற நிகழ்ச்சியின் பேரை 'லவ் யூடா ஸ்மிதா'ன்னு மாத்திட்டோம். போன்ல புலம்புறவங்க பலரின் பிரச்னைகள் செக்ஸ் சம்பந்தப்பட்டதாவே இருக்கு. இவங்களுக்குப் பதில் சொல்றதுக்காகவே சைக்காலஜிஸ்ட்களுடன் பேசுறது, நிறையப் புத்தகங்கள் படிக்கிறதுனு என் லைஃப் ஸ்டைலை மாத்திக்கிட்டேன்.

நிகழ்ச்சியில் பேசுற பலர் 'உங்களை மாதிரி ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் கட்டிக்கணும்'னு ஆழம் பார்ப்பாங்க. என் குரலைக் கேட்கிறவங்க, நான் தலை நிறைய பூ வெச்சு, தழையத் தழையப் புடவை கட்டிட்டு வர்ற தேவதை டைப் பொண்ணுன்னு நினைச்சு, புடவை, தோடு, மூக்குத்தினு கிஃப்ட் அனுப்பி அட்டகாசம் பண்றாங்க. ஆனா, நான் செம மாடர்ன் பொண்ணு. அதே மாதிரி, நான் எத்தனை முறை செல் நம்பரை மாத்தினாலும், எப்படியோ நம்பரைக் கண்டுபிடிச்சு காதல் தூது அனுப்புறாங்க!'' என்று நீண்ட மூச்சு விட்டவரிடம், மறக்காமல் செல்போன் நம்பர் வாங்கிக்கொண்டேன்.

டேக் ஓ.கே!

விஜய் டி.வி-யின் 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா' ஷூட்டிங். சுந்தரம், புலியூர் சரோஜா, ரகுராம் என மேடையெங்கும் டான்ஸ் மாஸ்டர் முகங்கள். சிறப்பு நடுவராகப் பங்கேற்க பாலிவுட் நடன மகாராணியான சரோஜ்கான் வந்திருந்தார்.

''சரோஜ்கான் எங்களுக்கெல்லாம் சீனியர் மாஸ்டர். வைஜெயந்திமாலா, பத்மினி, ஜிதேந்திரா, தர்மேந்திரா, ஷாரூக், ஐஸ்வர்யான்னு அத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகளையும் ஆட்டுவித்த நடன மகாராணி. என் மகன் பிரபுதேவா பெயரில் நடக்கும் இந் நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்க சரோஜ் மாஸ்டர் வந்திருப்பது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என்றார் சுந்தரம் மாஸ்டர்.

''பிரபுதேவாவின் மேஜிக் மூவ்மென்ட்ஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு டான்ஸ் மாஸ்டருக்காக இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்ப வர்ற ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாருமே டான்ஸ் கத்துக்கிட்டு வர்றதால, நாங்க புதுசு புதுசா மூவ்மென்ட்ஸ் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு!'' என்ற சரோஜ்கான், 'ஏக்... தோ... தீன்...' பாட்டுக்கு ஜாலியாக டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்டதும், கூட்டத்தில் செம கிளாப்ஸ்!

ஜீன்ஸ், டி-ஷர்ட் என காஸ்ட்யூம்களில் கலக்கும் அபர்ணாவைப் பளபளக்கும் பட்டுப்புடவையில் பார்த்தபோது... ஊப்ஸ்..! ஜெயா டி.வி. 'தகதிமிதா' நிகழ்ச்சியில் இனி அபர்ணா அட்டகாசம். ''சின்ன வயசுல இருந்தே எனக்குப் பரதத்தில் பயங்கர ஆர்வம். அதனால் இந்த நிகழ்ச்சியை நடத்த சான்ஸ் வந்ததும், சந்தோஷமா ஓ.கே. சொன்னேன். அகில இந்திய லெவல்ல சிறந்த டான்ஸ் ஷோனு இந்நிகழ்ச்சியைத் தேர்வு செஞ்சிருக் காங்க. வெளிநாட்டில் உள்ள பலர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு பரத நாட்டியம் கத்துக்கறதா கேள்விப் பட்டேன். 1,500-க்கும் மேற்பட்ட சிறந்த சிறு வயது நடனக் கலைஞர் கள் பங்கேற்ற இந்த ஷோவை நடத் துறதை நினைச்சு நான் பெருமைப் படுறேன்'' என்றார் அபர்ணா.

டேக் ஓ.கே!

'சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு வர்றியா?' என்று எலெக்ட்ரிக்குரலில் வசீகரித்த உஜ்ஜயினி இப்போ, 'சா... பூ... த்ரீ' படத்தின் ஹீரோயினி. ''மூணு தனித்தனி கதைகளில் பய ணிக்கும் ஒரே சினிமா 'சா... பூ... த்ரீ.' படத்துல ஹீரோ யார், ஹீரோயின் யார்னு கண்டுபிடிக்கறது கொஞ்சம் சிரமம். ஆக்சுவலி நிறையப் பாட்டுப் பாடணும், நல்ல சிங்கர்னு பேர் வாங்கணும். இதுதான் என் லட்சியம். இந்த ஒரு படம் சும்மா ஜாலிக்கு. தொடர்ந்து நடிக்கும் எண்ணமில்லை'' என்றவர், ''பார்ட்டிக்கு வர்றீயா?'' என்று 'ஹம்'மினார். ''பார்றா!'' என்ற படி ஏறக்கட்டினேன்.

'ஹாய் மச்சான், மலையாளப் படத்துல மல்லுக்கட்டப் போறேன்!' -வண்டியை விரட்டி நமீதாவை அடைந்தேன். ''மலையாளத்தில் 'பிளாக் ஸ்டாலின்'னு ஒரு படத்தில் நடிக்கப் போறேன். ஹீரோ கலாபவன் மணி. எனக்கு ரொம்ப வித்தியாசமான கேரக்டர். முதல்முறையா மலையாளப் பட ஷூட்டிங்குக்காக கேரளா போறேன். வாழ்த்தி வழிஅனுப்பு'' என்றவரிடம், ''மலையாளிகளுக்கு உங்களைத் தாரைவார்க்குறப்ப எப்படி என்னால வாழ்த்த முடியும்?'' குலுங்கிக் குலுங்கி அழுகாச்சி ஆக்டிங் குடுத்த என்னை நமீ துரத்த, ஒரே கிளுகிளுப்பு கிங்கிமிங்கி!

ரும் வழியில் ஜி.வி.பிரகாஷ் வீடு. ''ஆஸ்கர் மாமா என்ன சொல்றார்?'' என்று பிட்டைப் போட்டால், மாமா போலவே வெட்கச் சிரிப்பு சிரிக்கிறார்.

''மாமாகிட்ட ஆஸ்கருக்கு வாழ்த்து சொன்னா குழந்தை மாதிரி சிரிக்கிறார். ரொம்பச் சின்ன வயசுலயே எனக்கு டெக்னாலஜி அயிட்டங்களை அறிமுகப்படுத்தி வெச்சதே அவர்தான். ஆப்பிள் ஐ-பாட் இந்தியாவுக்கு வந்தப்போ அவர் ஆசையா வாங்கி அவரோட ஃபேவரைட் பாடல்களை சேவ் பண்ணியிருந்தார். திடீர்னு 'இது உனக்குத்தான் பிரகாஷ்!'னு கிஃப்ட் பண்ணார். அவரோட '20 சேனல் மிக்ஸிங் இன்ஸ்ட்ரூமென்ட்'டை எனக்குக் கொடுத்தார். இப்போ வரைக்கும் அவர் கொடுத்த எல்லாத்தையும் பொக்கிஷம் மாதிரி பத்திரமா வெச்சிருக்கேன். மாமா என் மானசீக குரு!''- நெகிழ்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

டேக் ஓ.கே!

மெரிக்காவின் சிறந்ததொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு 'எம்மி விருது' மதிப்பான அடையாளம். எம்மி தேர்வுக் குழுவின் நீதிபதிகளுள் முதல் இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் பிரகாஷ் எம்.ஸ்வாமி. பிரபலப் பத்திரிகையாளரான இவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத் தூதர் ஆண்ட்ரோ சிம்கின், சரத்குமார், பாலமுரளிகிருஷ்ணா, அருணா சாய்ராம், ராதாரவி, எஸ்.வி.சேகர், போன்ற பலர் மனம் திறந்த பாராட்டுதல்களை வழங்கிய போது பிரகாஷின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இந்த கிஷோரும் தேர்ந்த பத்திரிகையாளர்தான்... யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே!

 
டேக் ஓ.கே!
- (ஷாட் பிரேக்...)
டேக் ஓ.கே!