விகடன் பொக்கிஷம்
Published:Updated:

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'


01-04-09
சினிமா
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
 
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
- நா.கதிர்வேலன்

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

''பாலசந்தர், பாரதிராஜா ரெண்டு பேர் கிட்டேயும் ஆழமான நட்பு இருக்கு. காலத்தின் அலைக்கழிப்புகளுக்கு இடையிலும், அந்த நட்பைப் பொக்கிஷமா போற்றிப் பாது காக்குறாங்க. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல! அவங்க சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் அன்பு ததும்பி நிறைஞ்சு நிக்கும். கனிவு, பாசம், அன்பு அத்தனையையும் குரலால் உணர்த்த முடியும்னு நினைக்கிறீங்களா... கே.பி. சார் குரல் கேட்டால் சாத்தியம்னு தோணும். 'என்ன பாரதி'ன்னு கம்பீரக் குரலெடுத்து அவர் கேட் கிறதே கொள்ளை அழகு. அவங்க பார்வையின் ஸ்பரிசத்தில் சிநேகிதத்தின் வெப்பத்தை உணர முடியும். அது காதலைத் தாண்டி, தாய்மையைத் தாண்டி நெகிழ்த்தும் நட்பு. அந்த நட்புதான் இந்தப் படத்தின் ஆதார இழை. ரெண்டு பேருடைய குழந்தைக் குதூகலமும் படத்தில் அருமையாக வந்திருப்பதில் எனக்குக் கொஞ்சம் கர்வம் கலந்த பெருமைதான்!'' - திருவிழாவில் உறியடித்த உற்சாகத்துடன் பேசுகிறார் இயக்குநர் தாமிரா. கே.பி. பட்டறையில் உருவான இளைஞர். இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ரெட்டச்சுழி' படத்தின் இயக்குநர்.

''பாரதிராஜா, பாலசந்தர்னு இரு பெரும் இமயங்களை இணைக்கும் யோசனை எப்படி வந்தது?''

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

''ரெண்டு சீனியர் குழந்தைகளோட செல்லக் கோபங்களும் சீண்டல் சண்டைகளும்தான் 'ரெட்டச் சுழி'. இருவரின் இயல்புக்குள்ளேயே கதை அமைப்பு அடங்கி இருக்கு. அவங்க இதுவரை இந்தச் சமூகத்துல பகிர்ந்துகொள்ளாத குழந்தைத்தனத்தை நான் பல சமயங்களில் அவங்ககிட்டே பார்த்திருக்கேன். ஷங்கர் சாரிடம் நான் கதை சொல்லும்போது பாலசந்தர் - பாரதிராஜா பெயர்களைச் சொல்லவில்லை. ஆனால், ரெண்டாவது சந்திப்பில் இவங்களை ஒண்ணா வரைந்து காட்டினேன். 'இது முடியுமா... சாத்தியமா? நல்லாயிருக்குமே!'னு அவரே பரவசப்பட்டார். 'நானே அவங்ககிட்டே பேசுறேன்'னு அத்தனை அடுக்கு வேலைகளுக்கு இடையிலும், அவங்க ரெண்டு பேரையும் போய்ப் பார்த்தார். அவங்களுக்கும் கதை பிடிச்சிருந்ததுதான் எனக்குச் சந்தோஷம். 52 வருஷம் கழிச்சு அவங்களை சோழிக்காய் ஆட வெச்சேன். நானே பார்த்தறியாத புது பாலசந்தர், பாரதிராஜா எனக்கு காணக் கிடைச்சாங்க. சிறுபிள்ளைத்தனமான ஈகோ கொண்ட இரண்டு பெரிய மனுஷங்களை இந்த அளவுக்கு இயல் பாக யாராலும் சித்திரிக்க முடியுமானு எனக்கு ஒவ் வொரு நாளும் ஆச்சர்யம் அதிகமாகிட்டே இருக்கு!''

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

''ஒரு படம் இயக்கியவரே அடுத்த படத்தில் நடிகரானால் இயக்குநரை கன்ட்ரோல் செய்யும் சீஸன் இது. அறிமுக இயக்குநரான உங்களுக்கு இந்த இமயங்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்துச்சு?''

''வேறு எவரையும்விட அவங்க ரெண்டு பேருக்கும் ஓர் இயக்குநரின் மதிப்பு நல்லாவே தெரியும். இந்தச் சின்னப் பையனின் ஒவ்வொரு உணர்வையும் கருத்தையும் அவ்வளவு அருமையாக ஏத்துக்கிற மனசோடுதான் அவங்க ஸ்பாட்டுக்கே வந்து உக்கார்றாங்க. ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி என்கிட்டே தனியா வந்து, 'இது போதுமாடா? இன்னொரு தடவை நல்லா பார்த்துக்கடா!'ன்னு தேர்ந்த ஆசானாகவும் கரிசனம் மிக்க தந்தையாகவும் அன்பா சொல்றாங்க. டாமினேஷனே கிடையாது. ஒரு அம்மாகிட்டேகுழந்தை களுக்கு என்ன மிரட்சி இருக்க முடியும், சொல்லுங்க? என் சிறுகதை ஒன்றைப் படித்துவிட்டு அவருக்கு உதவியாக என்னைச் சேர்த்துக்கொண்டவர் பாலசந்தர் சார். அதே மாதிரி என் சிறுகதையைப் படிச்சுட்டே, 'உன்னால் எதையும் உணர்வுபூர்வமாச் சொல்ல முடியும்டா. ஆரம்பி... நான் ஏதோ நடிச்சுப் பார்க்கிறேன்'னு பெருந்தன்மையின் உச்சியில் நின்னு ஆசீர்வதிச்சார் பாரதிராஜா.

ஒரு கலைஞனை அடிமனசுல இருந்து அங்கீகரிப்பதில் அவங்க ரெண்டு பேருமே வள்ளல்கள். எழுத்தின் மீது மரியாதை, எழுத்தாளனின் மீது வாஞ்சையைக் கொட்டுவதில் அவங்க ரெண்டு பேருக்கும் போட்டியே நடக்கும். படத்துல 24 குழந்தைகள் நடிக்கிறாங்க. இவங்களையும் சேர்த்தா 26 குழந்தைகள். அகில்னு புதுப் பையன்தான் ஹீரோ. அஞ்சலி... கதாநாயகி. இயல்பான எந்த சினிமாவுக்கும் அவங்க பொருந்துகிற பாங்கு வேற யாருக்கும் அமையுமானு எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்படியே தன்னை கேரக்டர்கிட்டே ஒப்படைச்சிட்டு, அவங்க தனியா நிக்கிறாங்க!''

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

''தயாரிப்பாளரான 'பிரமாண்ட இயக்குநர்' ஷங்கரின் ஈடுபாடு இதில் எப்படிப்பட்டது?''

''பிரமாண்டத்தின் சாயல் அவருக்குக் கவசமாகப் படியவில்லையென்றால், இன்னும் ஆத்மார்த்தமான படங்களை அவரே தந்திருக்கக்கூடும். ஷங்கருக்கு உள்ளே உள்ள ரசிகன் மிக உயர்ந்த மனுஷன். 'காதல்' தொடங்கி இவ்வளவு வித்தியாசமான படங்களைத் தயாரிப்பது ஷங்கருக்குள் இருக்கும் ரசிகன்தான். காலமும் அவரிடம் படம் செய்யும் இயக்குநர்களும் ஒத்துழைத்தால் இன்ன மும் நல்ல சினிமாக் களைத் தயாரிக்க அவர் தயாராவே இருக்கார். கதைச் சுருக் கத்தைப் படித்ததும், 'இந்தக் கதையில் என்ன ஸ்பெ ஷல்?'னு கேட்டார் ஷங்கர். 'ஒரு சந்தோஷம் இருக்கு. பார்வையாளர்களை இந்தச் சந்தோஷம் போய்ச் சேரும்'னு சொன்னேன். முதல் கட்டப் படப்பிடிப்பின் எடிட் செய்யப்பட்ட காட்சிகளைப் பார்த்துட்டு, 'நீங்க சொன்ன சந்தோஷம் இதில் வந்திருக்கு'ன்னு சொன் னார். துளி தலையீடு கிடையாது. நல்ல சினிமாவுக்கு தன் கவனத்தையும் பங்களிப்பையும் தருகிற ஷங்கர் சாருக்கு என்னோட அன்பு எப்பவும் மிகுதியாகவே இருக்கும்.''

'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'

''நீண்ட நாட்களுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இசை, இந்தப் படத்துக்கு. அவரோட தேர்வுக்கான காரணம்?''

''ஒரு படத்துக்கு முதல் தேவை இயக்குநர், கேமரா மேன், இணை இயக்குநர் ஆகியோர். அடுத்து படத்தை அழகுபடுத்திச் செழுமைப்படுத்துபவர்கள் எடிட்டர், இசையமைப்பாளர். இந்த அஞ்சு பேரும் படத்துக்கு உயிர்நாடின்னு நம்புகிறவன் நான். காரணமே தெரி யாமல் கார்த்திக் ராஜாவுக்கு ஒரு தேக்க நிலை இருந் தது. ஆனா, அதுக்காக அவரை யாரும் குறைத்து மதிப் பிடவே முடியாது. இன்றைக்கு இருக்கிற இசையமைப் பாளர்களில் யாருக்கும் அவர் சளைத்தவர் அல்ல. அவரின் எழுச்சி பிரமாதமாக வெளிப்பட்டிருக்கும் படம் 'ரெட்டச்சுழி!' ''

 
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'
'நீ ஒரு குழந்தை.. நான் ஒரு குழந்தை!'