டேனி டென்சோங்பா (Danny Denzongpa). சிரமமாக இருந்தாலும் சொல்லிப் பழகத்தான் வேண்டும். ஏனெனில், 'எந்திரன்' படத்தில் ரஜினிக்கு வரவிருக்கும் சிக்கல் ப்ளஸ் சிரமங்களுக்கு இவரே காரண மாக இருப்பார். யெஸ்! டேனிதான் எந்திரனின் செம போல்ட் வில்லன்!
'சிவாஜி' படத்தைப் போலவே எந்திரனில் ஷங்கருக்குச் சவாலாக இருந்தது வில்லன் செலெக்ஷன்தான். எந்திரனில் ரஜினிக்கு சரிக்குச் சரி சவால்விடக்கூடிய வில்லன் கேரக்டருக்கு ஜே.டி. சக்கரவர்த்தி, சுமன் என்று பலரைப் பட்டியலில் வைத்திருந்து, கடைசியாக டிக் அடித்தது டேனிக்கு.
டேனி, சிக்கிம் மாநில சினி இண்டஸ்ட்ரியின் சீனியர் வில்லன். 1971-ல் 'ஜரூரத்' என்ற படத்தில் அறிமுகமானவர். இத்தனை ஆண்டுகளில் சிக்கிம், ஹிந்தி, நேபாளி என 154 படங்களில் நடித்துவிட்டார். அமிதாப், ஷாரூக் தொடங்கி ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் பிராட் பிட்டுடன் 'செவன் இயர்ஸ் இன் திபெத்' படத்தில் நடித்தது வரை டேனி, செம ஹிட் வில்லன். மீடியாவுக்கும் டேனிக்கும் மகா மைல்கள் தூரம். ஒரு பிரஸ் மீட்டுக்கும் அடுத்த பிரஸ் மீட்டுக்குமான இடைவெளி எட்டு வருடங்கள்.
''எனக்கு சினிமா பார்ப்பதே பிடிக்காது. டான்ஸ் ஆடுவதைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கிறது. நான் நடித்த படங்களை நான் பார்ப்பதே இல்லை. நடித்துவிட்டு அதை வேடிக்கை பார்ப்பது போரடிக்கிற விஷயம். கடைசியாக 92-ம் வருடம் அமிதாப்புடன் நடித்த படத்தை அமிதாப் அனத்தியதால் வேறு வழி இல்லாமல் பார்த்தேன். நான் நடிக்கும் படங்கள், என் பணப் பசியைத் தீர்க்க மட்டுமே உதவுகிறது. எனக்குப் பட வாய்ப்புகள் வரவில்லை என்றால், கவலைப்பட மாட்டேன். சந்தோஷப்படுவேன்...'' இந்த ரீதியில்தான் இருக்கும் டேனியின் பேட்டிகள்.
''இந்தியா - சீனா போரில் எனது கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்குச் சென்ற பலர் இறந்துவிட்டார்கள். அதனால், என் அம்மா எனது ராணுவ ஆசைக்கு |