விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''நானும் ஜோவும் மீண்டும்...''

''நானும் ஜோவும் மீண்டும்...''


01-04-09
சினிமா
''நானும் ஜோவும் மீண்டும்...''
''நானும் ஜோவும் மீண்டும்...''
 
''நானும் ஜோவும் மீண்டும்...''
''நானும் ஜோவும் மீண்டும்...''
- நா.கதிர்வேலன், படங்கள்: கே.ராஜசேகரன்

''நானும் ஜோவும் மீண்டும்...''

''ஒவ்வொரு படம் பண்ணும்போதும் பயமா இருக்கு. இனிமேலும், சினிமாவை விளையாட்டா எடுத்துக்க முடியாதபடி, என் மேல எல்லோருக்கும் நம்பிக்கை வந்திருக்கு. 'வாரணம் ஆயிரம்' முடிச்சுட்டுப் பெருமையாகவும், 'அடுத்து என்ன?'ன்னு கொஞ்சம் ஆர்வமாகவும் இருந்தப்போ, வந்தார் கே.வி.ஆனந்த். என் முதல் படமான 'நேருக்கு நேர்' முதல் என்னுடன் டிராவல் பண்ற மனிதர். அபாரமான ஒளிப்பதிவாளரா பல சாதனைகள் செய்த பிறகும் அடக்கமா இருப்பவர். 'உங்களை இன்னும் துறுதுறுன்னு காட்டணும் சூர்யா. 'பிதாமகன்' படத்துல கலகலப்பா வந்த மாதிரி, ஆக்ஷனிலும் பரபரன்னு வர முடியும்'னு

''நானும் ஜோவும் மீண்டும்...''

சொல்லி எடுத்த கதைதான் 'அயன்'. நிஜமாவே இந்தப் படம் எனக்கு இன்னொரு கலர் கொடுக்கும்.'' - நட்புடன் பேசுகிறார் வசீகர சூர்யா. சரசரவென கேரியர் கிராஃப் உயரப் பறந்துகொண்டு இருப்பதை மனதில் ஏற்றிக்கொள்ளாத பேச்சு.

''என்ன திடீர்னு கே.எஸ்.ரவிகுமார் - உதயநிதின்னு வித்தியாசக் கூட்டணியுடன் 'ஆதவன்'?''

''ரஜினியும் கமலும் ஏன் கே.எஸ்.ரவிகுமாரோடு மாத்திமாத்திப் படம் பண்றாங்கன்னு இப்பதான் புரியுது. அசத்தல் வேகம், அனுபவ நிதானம். ஒரு ஸீன், படத்துக்கு எந்த அளவுக்கு அவசியமாக இருக்கும், விறுவிறுப்புக்கு எந்தளவுக்குத் தோள் கொடுக்கும்னு எல்லாத்தையும் நாம கண் மூடி யோசிக்கிறதுக்குள்ள சட் சட்னு முடிவெடுக்கிறார். யார் திருத்தம் சொன்னாலும், அது சரியாக இருந்தால் ஏத்துக்கிறதில் தயக்கமே காட்டமாட்டார். என் உச்சரிப்பு கொஞ்சம் வேகமா இருக்கு, புரிஞ்சுக்க ஈஸியா இன்னும் கொஞ்சம் இடைவெளி தரலாம்னு சொன்னார். என் முந்தைய டைரக்டர்களுக்கும்கூட இது தெரிந்திருக்கும். ஆனா, ரவிகுமார் சார்தான் சொன்னார். ஒவ்வொரு படமுமே வாழ்க்கையைக் கத்துக்கிற பிராசஸ்னு நினைக்கும்போது, டைரக்டரிடமும் நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. உதயநிதி, சினிமா லவ்வர். அவர் ரசிச்சுப் பார்க்கிற என்டர்டெயின்மென்ட் சினிமா தயாரிப்பில் அவருக்கு இருக்கிற அக்கறை அலாதியானது. படம் நல்லா வருவதற்கு எல்லாத் தரப்பிலும் உதவுறார். இவரைவிடவும் இந்த சினிமாவுக்கு வேறு நல்ல தயாரிப்பாளர் இருக்க முடியாது!''

''இப்ப தமிழ் சினிமா மாறியிருக்கிற டிரெண்டைக் கவனிக்கிறீங்களா? 'சுப்ரமணியபுரம்', 'வெண்ணிலா கபடிகுழு'ன்னு பெரிய ஹீரோக்கள் யாருமே இல்லாமல் நல்ல படங்கள் கவனம் ஈர்க்குதே?''

''நல்ல சினிமாவை யாரும் ஒதுக்கிட முடியாது. அர்த்தமுள்ள சினிமாவுக்கான ஆசை என்கிட்டயும் இருக்கு. சமீபத்தில் 'பசங்க'ன்னு மூணு சின்னப் பசங்க நிக்கிற ஸ்டில்களைப் பார்த்தேன். அது மாதிரியான படங்களை நானும் கார்த்தியும் சேர்ந்து தயாரிக்கிற எண்ணம்கூட இருக்கு. ஆனால், நான் இதுமாதிரி படங்களில் இனி நடிக்க முடியுமான்னு தெரியலை. 'இது சூர்யா படம்'னு ஏராளமா எதிர்பார்க்கிற ரசிகர்களின் மனோபாவங்களை மதிக்கவேண்டி இருக்கு. ஆனால், நிச்சயம் இதுமாதிரி படங்களை வரவேற்கணும்; நான் வரவேற்கிறேன்!''

''தமிழ், ஹிந்தி இரண்டிலும் 'கஜினி' பெரிய ஹிட். இப்ப சொல்லுங்க, எந்த 'கஜினி' பெஸ்ட்?''

''ஷார்ட் டெர்ம் மெமரியில் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மொட்டை கேரக்டரை அமீர்கான் நல்லா செய்திருக்கார்னு எனக்குத் தோணுது. எனக்கு அவர்கிட்ட முதலில் பிடிச்சது பெருந்தன்மைதான். ஹிந்தி 'கஜினி' ரிலீஸூக்கு முதல் நாள், 'சூர்யா, படம் நாளைக்கு ரிலீஸ். ஏதோ கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கேன்னுதான் நினைக்கிறேன்'னு எஸ்.எம்.எஸ். பண்றார். 'தாரே ஜமீன் பர்'னு அழகான பெயின்ட்டிங் மாதிரி ஒரு படம் இயக்கிட்டு, பக்கா கமர்ஷியல் 'கஜினி'யிலும் ஒரு கை பார்க்கிற அந்தத் துணிச்சல், படத்தை 200 கோடிக்கு மேல் வியாபாரம் செய்கிற மாஸ்டர் மைண்ட் எல்லாமே எல்லாருமே கத்துக்க வேண்டிய பாடம். 'கஜினி'யின் காதல் காட்சியில் நான் இளமையாகத் தோன்றியதற்கு என் வயசு மட்டுமே காரணமாக இருக்கலாம். ''கஜினி'யில் உங்க அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா?'னு அவர் கேட்டுட்டே இருந்தார். ஆனா, என் பாராட்டுக்கள் முழுக்க அவருக்குத்தான்!''

''நானும் ஜோவும் மீண்டும்...''

''எப்படி இருக்காங்க ஜோதிகா? 'டி.வி-யில் என்ட்ரி, சினிமாவுக்கு ரீ-என்ட்ரி'ன்னு செய்திகள்...''

''ஜோவோட உலகம் தியாவைச் சுத்தியே இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி ஜோவுக்கு ஜலதோஷம். அதனால, குழந்தையை என் அம்மாகிட்டே விட்டுட்டு வந்தா. ஜோ-தியா ரெண்டு பேராலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிய முடியலை. நானும் அம்மாவும் சிரிச்சுக்கிட்டே 'நல்லா கொஞ்சிக்கங்கம்மா'ன்னு கிண்டல் பண்ணினோம். அதிகபட்சம் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதாவது விளம்பரத்தில் நடிப்போம். அதுவும்கூட என்னோட வற்புறுத்தலின் பேரில்தான் இருக்கும்!''

'' 'ஆயிரத்தில் ஒருவன்' கார்த்தி என்ன சொல்றார்?''

''முற்றிலும் வித்தியாசமான கதைகளோடுதான் கார்த்தியைத் தேடி வர்றாங்க. பாருங்க, 'பருத்திவீரன்' முடியவே அத்தனைக் காலமாச்சு. ஆனா, அந்தப் படம் வந்து ரெண்டு வருஷமாகியும், இன்னும் அடுத்த படம் ரிலீஸ் ஆகலை. சமயங்களில் கார்த்தி வருத்தப்படுவான். என்கிட்டயும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இருக்காது. அவன் மனசுக்குள் பெரிய போராட்டமே நடக்குதுன்னு தோணும். ஆனாலும், அவன் செல்வராகவன் மேல வெச்சிருக்கிற நம்பிக்கை, மரியாதை ரொம்பவே பெருசு. அவனோட தன்னம்பிக்கைதான் அவனோட பலம். நானும் அவன் அளவுக்கு நல்ல படங்கள் பண்ணணும்னு ஆசைப்படறேன். 'அண்ணன்'ங்கிற மரியாதையைக் காப்பாத்திக்கணும்ல!'' - மலர்ந்து சிரிக்கிறார் அண்ணன்.

 
''நானும் ஜோவும் மீண்டும்...''
''நானும் ஜோவும் மீண்டும்...''