விகடன் பொக்கிஷம்
Published:Updated:

''கமல்தான் இப்போ என் குரு!''

''கமல்தான் இப்போ என் குரு!''


01-04-09
சினிமா
''கமல்தான் இப்போ என் குரு!''
''கமல்தான் இப்போ என் குரு!''
 
''கமல்தான் இப்போ என் குரு!''
''கமல்தான் இப்போ என் குரு!''
- மை.பாரதிராஜா

அசின் கற்கும் புது வித்தை

''கமல்தான் இப்போ என் குரு!''

''கோலிவுட் டு பாலிவுட் ரூட்டில் ராக்கெட் வேகத்தில் எகிறுகிறது அசின் மார்க்கெட்!

'மிரிண்டா' விளம்பரங்களில் அதகளம் பண்ணும் அசினைச் சுற்றி, முன்பு வேலைக்காரப் பெண் டார்ச்சர், இப்போது உதவியாளர் விவகாரம் என்று சுழன்றடிக்குது வம்பு மேளா. ''என்னதாங்க நடந்தது?'' என்று கேட்டால், பெண்ணின் முகத்தில் ஜென் புன்னகை!

''ஆண்டவரைத்தான் எப்பவும் மனசுல நிறுத்திப்பேன். எனக்கு அதுதான் நிம்மதி தரும். எனக்கு இரக்க குணம் ஜாஸ்தி! கஷ்டம்னு ஒருத்தர் என்னிடம் உதவி கேட்டு வந்தா, என்னால முடிஞ்ச உதவியை யோசிக்காம செஞ்சுடுவேன். அதுதான் எனக்கு வினை. எங்கிட்டே பணம் பறிக்கிறதுக்காக நல்ல முத்துக்குமாரும் அவங்க அம்மாவும் சேர்ந்து நாடகம் ஆடுறாங்க. வேலைக்காரப் பெண் பியூலா மேட்டரும் இப்படித்தான் சம்பந்தமே இல்லாம கிளப்பப்பட்ட செய்தி. இனிமே, கஷ்டம்னு உதவி கேட்டு வந்தா, ரொம்ப ரொம்ப யோசிச்சுதான் உதவி பண்ணுவேன். ப்ளீஸ்! நல்ல விஷயங்களை மட்டும் பேசுவோமே!''

''ஓ.கே! எப்படி இருக்கு 'கஜினி' ஒளிவட்டம்?''

'''கஜினி' அங்கே டிரெண்ட் செட்டர்!

படம் பார்த்துட்டு தியேட்டர் வாசலிலிருந்தே ப்ரீத்திஜிந்தா போன்ல எனக்கு கங்கிராட்ஸ் சொன்னாங்க. 'வெரி க்யூட்'னு சுஷ்மிதா சென் வாழ்த்தினாங்க. அமிதாப்ஜி 'சூப்பர்ப் பெர்ஃபார்மென்ஸ்'னு தட்டிக் கொடுத்தார். ஐஸ்வர்யா - அபிஷேக் தம்பதி விருந்துக்கே கூப்பிட்டாங்க. இப்போ இந்த நிமிஷம் சந்தோஷத்திலே துள்ளிக் குதிக்கணும் போல இருக்கு.''

''கமல்தான் இப்போ என் குரு!''

''அப்போ இனிமே தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டீங்களா?''

''தமிழ் மட்டுமல்ல, மலையாள சினிமாவையும் மறக்கவே மாட்டேன். எவ்ளோ உயரமா வளர்ந்தாலும், நம்ம கால்கள் தரையில்தான் இருக்கணும். தமிழ்ல நிறையப் பேர் கூப்பிடுறாங்க. ஆனா, எனக்கு ஸ்பெஷலா எந்தக் கதையும் அமையலை. இந்தி கால்ஷீட்டைப் பொறுத்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பேன். இந்தோ - ஜப்பான் தயாரிப்பில் '19 ஸ்டெப்ஸ்'னு ஒரு படத்தில் கமிட் ஆகியிருக்கேன். இந்தப் படம் தமிழிலும் ரெடியாகுது. அந்தப் படத்தில் நான் மலையாளப் பெண்ணாவே வர்றேன். படத்தில் கமல் சாரும் நடிக்கிறார். எனக்கு களரிச் சண்டை கத்துக்கொடுக்கிற குருவாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைச்ச 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா டைரக்ட் பண்றார். இந்தப் படத்துக்காக அடுத்த மாசம் நான் களரி கத்துக்கப் போறேன்.''

''சல்மானுடன் நீங்க நடிக்கிற 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் எப்படி வந்திருக்கு?''

''ஷூட்டிங் முடியப் போகுது. இது ஒரு மியூஸிக்கல் சப்ஜெக்ட். ரஹ்மான் - ரசூல் பூக்குட்டி ரெண்டு பேருமே இந்தப் படத்தில் இருக்காங்க. ஹீரோக்களா சல்மான்கான், அஜய்தேவ்கன். லண்டன்ல நடக்கிற கதை. என் கேரக்டர் பெயர் ப்ரியா. லண்டன் தவிர பாரீஸ், மும்பையிலும் ஷூட்டிங் நடக்குது. பாரீஸ்ல எனக்கும் சல்மானுக்கும் செம ரொமான்டிக்கான பாட்டு ஒண்ணு இருக்கு. நிச்சயம் இந்த வருஷத்தோட ஹிட் அதுதான். அப்புறம் முக்கியமான விஷயம்... சல்மானும் அமீர்கானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சல்மானைப் பார்க்க வருவார் அமீர். அதே போல, அஜய்தேவ்கனை ரொம்ப சீரியஸ் ஆசாமின்னு நினைச்சேன். ஆனா, கலகலப்பான ஆளா இருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் ஏதாவது ஜோக் அடிச்சுக்கிட்டு, யாரையாவது ஜாலியா வம்பிழுத்துக்கிட்டே இருப்பார். கஜோல் ரொம்ப லக்கி.''

''வேட்டைக்காரன்' படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே, ஏன்?''

''அது கால்ஷீட் இல்லாததால!''

''இல்லையே! நீங்க ரெண்டு கோடி சம்பளம் கேட்டதால்தான் உங்களை கமிட் பண்ணலைன்னு ஒரு பேச்சு இருக்கே?''

''சம்பளம் ஒரு விஷயமே இல்லை. நல்ல படங்கள் நிறைய பண்ணணும். இந்தியில் முதன்முதலா நடிக்க வந்த சமயத்தில் 'வேட்டைக்காரன்' வாய்ப்பு வந்தது. அதனால்தான் ஓ.கே. சொல்ல முடியலை. மத்தபடி, நல்ல கதை அமைஞ்சா தமிழுக்கு வருவேன்.''

''தமிழில் கிளாமரா நடிக்காமல் தப்பிச்சிட்டீங்க... இந்தியில் விட மாட்டாங்களே?''

''கிளாமர் காட்டி நடிக்க மாட்டேன் என்பது என் பாலிசி. அதைத்தான் இந்தியிலும் செய்றேன். இந்த விஷயத்தில் எனக்கு

''கமல்தான் இப்போ என் குரு!''

தேவிதான் ரோல் மாடல்!''

''அப்புறம் புதுசாக் காதல்..?''

''என்னதான் நடிகைன்னாலும், நானும் ஒரு பெண்தானே! ஆனா, அதுக்காக என்னைக் காதலிக்கிற எல்லாரையும் காதலிக்க முடியாது. தவிர, மனசுக்குள் இன்னும் அந்த அலாரம் அடிக்கலை. ஒருவேளை அப்பா - அம்மா காட்டுற பையனைப் பார்த்துத்தான் அலாரம் அடிக்குமோ, என்னவோ?'' -

மெலிதாகச் சிரிக்கிறார் அசின்!

 
''கமல்தான் இப்போ என் குரு!''
''கமல்தான் இப்போ என் குரு!''