Published:Updated:

வர்றார் எந்திரன் -2

ம.கா.செந்தில்குமார்

வர்றார் எந்திரன் -2

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##
''எ
ன் நண்பர் ஒருவர் தன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் 'ரஜினி, ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு... ர, ர, ர, ர... ரானா’ன்னு எழுதி இருந்தார். ரஜினி சார்கிட்ட இதைச் சொன்னேன் . 'அட, ஆமாம்ல!’ன்னு ஆச்சர்யப்பட்டார். கெட் ரெடி ஃபோக்ஸ்... கிளம் பிட்டார் ரானா!'' - அதிர அதிரச் சிரிக்கிறார் ரான்டி என்ற ரத்னவேலு. தமிழ் சினிமாவுக்கு அல்ட்ரா மாடர்ன் வண்ணம் சேர்த்த ஒளிப்பதிவாளர். 'எந்திரன்’ படத்தை உலகளாவிய சினிமா ரசிகர் களிடம் கொண்டுசேர்த்த பெர்ஃபெக்ஷனிஸ்ட்.  ரஜினி - தீபிகாவின் டூயட்டுக்கு லொகேஷன் பார்க்க ஸ்காட்லாந்து விமானம் பிடிக்கும் அவசரத்தில் இருந்தவர், 'ரானா’ பற்றிய அதிகாரபூர்வத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
வர்றார் எந்திரன் -2

''எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் க்ளியர் கட் வரலாற்று சினிமான்னா, அது 'ரானா’தான். கதை 17-ம் நூற்றாண்டில் நடக்கும். ரஜினி ரசிகர்களுக்கான ஃபார்முலா, கே.எஸ்.ரவிக்குமார் சாரின் கமர்ஷியல் டச், டெக்னாலஜி மிரட்டல்கள்தான் 'ரானா’ ஸ்பெஷல். முழுக்கவே பீரியட் ஃபிலிம். ஆனா, 'கிளாடியேட்டர்’, '300’ படங்களில் வர்ற ஃபேன்டஸியும் இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தின்னு ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் பண்றோம். முதல் முறையா ரஜினி சாரே இந்தியிலும் டப்பிங் பேசுகிறார். தீபிகா படுகோன், வித்யாபாலன்னு பலரிடம் பேசிட்டு இருக்கோம். வரலாற்றுப் படம் என்பதால், சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக்கூட பெரிய ஸ்டார் காஸ்ட் இருந்தா நல்லா இருக்கும். தமிழகத்தில் நடக்கும் ஃபிக்ஷன் கதை. ஆனால், யாரையும் குறிப்பதாக இருக்காது. போர், ஆயுதங்கள், விளக்கு, ஃபர்னிச்சர்கள்னு தமிழகப் பேரரசர்களின் வரலாறுகளில் இருந்து டீடெய்ல்ஸ் பிடிச்சோம். ரஜினி சாரும் குதிரையேற்றம், பழங்கால ஆயுதப் பயிற்சிகள்னு தீவிரப் பயிற்சியில் இருக்கார். 'ரானா’வில் வைரமுத்து சார் எழுதிய ஓப்பனிங் பாடலுக்கு ரஹ்மான் சார் இப்பவே மியூஸிக் பண்ணிக் கொடுத்துட்டார்.

'எந்திரன்’ படம் ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி 1,400 பக்க கேமரா ரிப்போர்ட் கொடுத்தேன். பல இடங்களில் கிராஃபிக்ஸ் மாதிரியே தெரியாது. அந்த முனைப்பும் முயற்சியும் 'ரானா’விலும் தொடரும்!''

''ரஜினி என்ன சொல்றார்?''

''ஒவ்வொரு ஷாட் எடுக்கும்போதும் அறிமுக நடிகர்போலவே நிற்பார். மார்ஜின் கொடுத்தாச்சுன்னா, 'ஷாட் ஓ.கே’-ன்னு கேமராமேன் சொன்ன பிறகுதான் வெளியே போவார். அதேபோல் டைமிங். யாரையும் எதற்காகவும் அவர் காக்கவைத்ததே கிடையாது. ஒருநாள், 'எந்திரன்’ டப்பிங் முடிஞ்சதும் ராத்திரி ஒன்பது மணிக்கு என்னை செல்போனில் அழைத்தார். புது நம்பரா இருக்கேன்னு நான் எடுக்கலை. அடுத்தடுத்து அழைப்பு வந்துட்டே இருந்தது. நான் கண்டுக்கலை. உடனே, அவர் டிரைவர் மூலமா என் டிரைவரைப் பிடிச்சு, என்னை ரீச் பண்ணார். 'ஸாரி சார், உங்க நம்பர் என்கிட்ட இல்லை’ன்னு ஸாரி சொல்லி ஆரம் பிச்சேன். 'அதை விடுங்க. ஹாட்ஸ் ஆஃப் டு யூ’ன்னு மூணு தடவை சொன்னார். 'படத்தில் 'சிவாஜி’யைவிட யங்கா தெரியுறேன். எனக்காக நிறைய கேர் எடுத்திருக்கீங்க’ன்னார். 'இதை நாளைக்குக்கூடச் சொல்லியிருக்கலாமே சார்’னு கேட்டேன். 'இல்ல ரான்டி, சந்தோஷம்னா, உடனே அதை ஷேர் பண்ணிக்கணும். எதுக்கு நாளைக்கு வரை காத்திருக்கணும்’னார். இது சினிமா இண்டஸ்ட்ரியில் வேறு எந்த ஆர்ட்டிஸ்ட் டிடமும் இல்லாத குணம். அவர் சச்சின் மாதிரிங்க. அவர் மட்டும்தான் அவருக்குப் போட்டி!''

வர்றார் எந்திரன் -2

''ரஜினி 'எந்திரன்’ முடிச்சதும் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக்குவார்னு சொன்னாங்க. ஆனா, 'ரானா’ பரபரப்பா ஆரம்பிச்சிருக்கு. அவர் என்ன மைண்ட்செட்ல இருக்கார்?''

''ரஜினி சாருக்கு ஓய்வா..? சான்ஸே இல்லை. அநேகமா 'ரோபோ-2’ ரஜினி சார் பண்ணுவார்னு நினைக்கிறேன். பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. ஷங்கர் சார் '3 இடியட்ஸ்’ முடிச்சிட்டு வரணும். நாங்க 'ரானா’ முடிக்கணும். எல்லாம் முடிஞ்சதும் 'ரோபோ-2’ தொடங்கும்னு நினைக்கிறேன். ரஜினி, ஷங்கர், சன் டி.வி, ரஹ்மான் அப்புறம் நான். அனேகமா, அதே டீமாக இருக்கலாம். ஷங்கர் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார். இந்த மாதிரி பிரமாண்டமா ஒரு படம் பண்ணும்போது, படத்தில் சம்பந்தப்பட்டவங்க நட்பு, ஆடியோ ரிலீஸ் விழா வரைக்கும்கூடத் தாங்காது. ஆனால், 'எந்திரன்’ எங்க எல்லாரையும் ஏதோ ஒரு விதத்தில் கட்டிப்போட்டிருச்சு. அது 'எந்திரன்-2’விலும் தொடர வாய்ப்பு இருக்கு!''