Published:Updated:

ஷங்கர் சொன்ன மந்திரம்!

ஷங்கர் சொன்ன மந்திரம்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
"ஷங்கர் சொன்ன மந்திரம்!"
ஷங்கர் சொன்ன மந்திரம்!
ஷங்கர் சொன்ன மந்திரம்!
 
.நா.கதிர்வேலன்
ஷங்கர் சொன்ன மந்திரம்!
ஷங்கர் சொன்ன மந்திரம்!

"'அரிது அரிது' படம் மூலமா ஒரே ஒரு செய்தி தான் சொல்ல ஆசை. அந்தச் செய்தி கொஞ்சம் பயமுறுத்தக்கூடியது. ஆனாலும், சொல்லித்தானே ஆகணும்!"-நிதானமாகத் துவக்குகிறார் இயக்குநர் கேஆர்.மதிவாணன். 'முதல்வன்' முதல் 'சிவாஜி' வரை இயக்குநர் ஷங்கரைப் பின்பற்றிய சீடர்.

"ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் பெரிய ஆயுதம் மதப்பற்றுதான். அதன் உணர்வுகள் நட்பு, காதல், தினசரி நடவடிக்கைகள்னு எல்லாத்திலும் பிரதிபலிக்கும். அது சுனாமி அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும்போதுதான் ரயில் எரிப்புகளும் கழுத்தறுப்புகளும் நடக்குது. நிச்சயம் ஓர் உயிரைப் படைக்க முடியாத நமக்கு, அதை அழிக்கிறதுக்கும் உரிமை கிடையாது. அது நியாயமும் கிடையாது. அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும் டி.வி.டி-க் களில் அயல் சினிமா பார்த்து எடுத்த படம் இல்லை இது. மனசுக்குள் உறுத்தும் சங்கதிகளை அதன் காரண காரியங்க ளோடு சொல்லும் படமா இருக்கும் 'அரிது அரிது'!"

ஷங்கர் சொன்ன மந்திரம்!

"குரு வழியில் பிரமாண்டம் காட்டாம 'செய்தி'யை நம்பிக் களம் இறங்குறீங்களே?"

"பிரமாண்டத்துக்கும் குறைச் சல் இருக்காது. கதைக்குத் தேவைப்பட்டுதுன்னு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஷூட்டிங் நடத்தி இருக்கோம். ஷங்கர் சாரிடம் கத்துக்கிட்ட விஷயங்கள் நிச்சயமா படத்தில் இருக்கும். அவரோட அடிப்படைப் பாடம், படத்தில் நிச்சயம் ஒரு செய்தி இருக்கணும்கிறதுதான். கோரிக் கைக்கும் வன்முறைக்கும் உள்ள வித்தியா சத்தை, அதன் வலியைப் புரிந்துகொள்ளும் நியாயத்துடன் பயணிக்கும் கதை இது!

நிச்சயம் நாட்டுக்கும் அவசியமான செய்திதான். குருவின் பாணியில் இருந்து விலகாத பயணம் என்பது நிச்சயம்!"

ஷங்கர் சொன்ன மந்திரம்!

"பளீர் அடையாளத்தோடு ஒரு ஹீரோ\ஹீரோயினை உங்களால பிடிச்சிருக்க முடியும். ஆனா, புதுமுகங்களைத் தேர்ந்தெடுத்தது ஏன்?"

ஷங்கர் சொன்ன மந்திரம்!

"சினிமா வாசனை இல்லாத முகம் தேவைப்பட்டது. பெரிய தேடலுக்குப் பிறகு நான் வெச்ச பரீட்சைகள் எல்லாத்திலும் பாஸ் ஆனது ஹரிஷ் மட்டும்தான். என்.ஆர்.ஐ. சாயலுடன் இருக் கும் தமிழ்ப் பெண் கேரக்டருக்குத்தான் ரொம்ப மெனக் கெட வேண்டியிருந்தது. சல்லடையாகச் சலித்தாலும் திருப்தியான முகங்கள் கிடைக்கலை. யதார்த்தமா நியூஸி லாந்தில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ருத்ரா கிடைச்சார். உடனே, கையைப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்துட்டோம். இந்தக் கதைக்கு மட்டுமில்லை... என் அடுத்த படத்திலும் இன்னொரு ஹீரோவை அறிமுகப்படுத்த வேண்டிய கதைகளாக் குவிஞ்சு கிடக்கு. மாஸ் ஹீரோ தேவைப்படும் கதைக்கு புதுப் பசங்களை யோசிக்கவே முடியாது. ஆனா, இந்தப் படத்துல அந்தச் சிக்கல் இல்லை!"

"ஷங்கரின் முக்கியமான சீடராக ரொம்ப நாள் இருந்திருக்கீங்க. விடை பெறும்போது என்ன சொன்னார்?"

" 'தனியா படம் பண்றேன். புறப்படவா?'ன்னு தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். 'போயிட்டு வா. சினிமா உலகில் யாரையும் முழுமையா நம்பாதே. எல்லா இடத்திலும் உன் பார்வை இருக்கட்டும். ஸ்க்ரீனில் வர்ற எல்லா விஷயத்திலும் உன் கவனம் இருக்கட்டும்'னு மட்டும் சொன்னார். அது மட்டும்தான் மனசுல மந்திரமா ஓடிட்டு இருக்கு!"

 
ஷங்கர் சொன்ன மந்திரம்!
-
ஷங்கர் சொன்ன மந்திரம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு