Published:Updated:

ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!

ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
 
நா.கதிர்வேலன்
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!

"வெளிநாட்டில் வாழும் பரத் தன் அடையாளத்தைத் தேடி... அப்புறம் தவிர்க்கவே முடியாம தன் காதலியையும் தேடி தமிழ்நாட்டுக்கு வர்ற பயணம்தான் 'தம்பிக்கு இந்த ஊரு'. காதல், அதிரடி, சென்டிமென்ட் எல்லாம் பக்கா ஃபார்முலாவில் சேர்த்த கலவை. துறுதுறு, பரபரன்னு அசத்தலா ஒரு என்டர்டெயின்மென்ட்!" உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் பத்ரி.

" 'தம்பிக்கு இந்த ஊரு'ன்னு சொல்லிட்டுக் கடல் கடந்த லொகேஷன்லயே ஷூட்டிங்கை முடிச்சிட்டீங்க போல..!"

"வழக்கமான இடங்கள் வேண்டாமேன்னு தவிர்த்தோம். அவ்வளவுதான்! இந்தோனேஷியாவிலேயே இதுவரை கேமரா பார்க்காத ஒரு தீவு. சோறு தண்ணி இல்லாம அங்கே சும்மா சுத்திட்டே இருக்கலாம். அவ்வளவு அழகு கொட்டிக் கிடக்கு. அழகு மட்டுமில்லை... ஆச்சர்யமும் அங்கே ஏராளம். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல காபி குடிச்சா 60 ஆயிரம் ரூபாய் பில் வைக்கிறான். பிரியாணி சாப் பிட்டா ஒன்றரை லட்சம் பில். ஆனா, அந்த ஊரோட 200 ரூபாய் நம்மூர் ஒரு ரூபாய்க்குச் சமம். 10 ஆயிரம் இந்திய ரூபாயைக் கொடுத்தால் சூட்கேஸ் சூட்கேஸா கரன்சியைக் கொட்டிக் கொடுக்குறாங்க. ஆனாலும், அங்கேயும் வறுமைதான். சுனாமிக்குப் பிறகு கடலலை கொஞ்சம் கரை தாண்டினால் கூட பயந்து நடுங்குறாங்க. குழந்தை மாதிரி காலை வருடுற அலைகள் இப்படி ஆட்கொல்லிகளாக மாறுமான்னு ஆச்சர்யமா இருக்கு. பூலோகத்தின் மிக விலை மலிவான சொர்க்கம் அந்தத் தீவு!"

ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!

"பரத்துக்கு இதிலும் வழக்கமான ஆடிப்பாடும் லவ்வர் பாய் கேரக்டர்தானா?"

"அதுவும்... அதுக்கு மேலயும் இருக்கும். ஜாக்கிசானின் ஸ்டன்ட் மாஸ்டர் ஜிம்மிலோ தான் படத்தில் பரத்துக்கும் மாஸ்டர். அவரோட ரிஸ்க்கான ஸ்டெப்ஸ்களுக்கு பரத் பயமே இல்லாம, டூப் வெச்சுக்காம சண்டை போட்டார். காரணம், ஜிம்மி லோ கொடுத்த நம்பிக்கை. அவர் முதல்ல ஹீரோவோடு நிறையப் பேசிப் புரிஞ்சுக்கிட்டு, ஹீரோக்களுக்கு சண்டைக் காட்சிகளின் தன்மையைப் புரியவைப்பார். ஹீரோவை சகஜமாக்கி சடசடன்னு காட்சிகளைப் படம் பிடிக்கிறார். நிச்சயம் படத்தின் சண்டைக் காட்சிகள் பெருசா பேசப்படும். அதோடு பரத் முதன்முதலா சொந்தக் குரலில் ஒரு பாட்டும் பாடி இருக்கார். நேர்த்தியான பின்னணிப் பாடகர் மாதிரியே ஆச்சர்யப்படுத்தி இருக்காரு. அது போக, வெளிநாட்டுக் காட்சிகள் முழுவதையும் ரெட்-1 கேமராவில் படம் பிடிச்சிருக்கோம். 'இவ்வளவு வசதிகளா'ன்னு ஆச்சர்யப்படுத்துது கேமரா!"

ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!

"அறிமுகமான 'சிலம்பாட்டம்' படத்திலேயே சனாகான் ஆர்.டி.எக்ஸ். கவர்ச்சி காமிச்சாங்க. இதில் இன்னும் அதிரடியா களமிறங்க வெச்சிருப்பீங்களே..!"

"சனாகான் 'சிலம்பாட்ட'த்தை விட இன்னும் சிக்குனு செம கிக்கா வந்து நின்னார். அவர் எந்த எல்லைக்கும் தயாரா இருந்தாருங்கிறது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த எல்லை மீறாம எங்க கட்டுப்பாட்டி லேயே அவரை வெச்சிருந்தோம். அடக்கி வாசிக்கவேண்டிய இடங் களில் சிறு விளக்காகவும், அதிரடி தேவைப்படும் இடங்களில் சீரியல் செட்டாகவும் ஜொலிப்பார் சனா கான்!"

 
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
-
ஒரு பிரியாணி ஒன்றரை லட்சம்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு