Published:Updated:

ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
"ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?"
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?
 
எஸ்.கலீல்ராஜா
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

கேரளாவே கொண்டாடும் ஒளிப்பதிவாளர் நா.அழகப்பன்.

மம்மூட்டி, மோகன்லால் போன்ற மலையாள சேட்டன்களின் ஆல்டைம் சாய்ஸ்! 32 மாநில விருதுகள் இவரின் கௌரவ அடையாளங்கள். 'வெயில்' படத்தில் பசுபதியின் தியேட்டர் காட்சிகளில் மட்டும் வசியம் செய்தவர், 'வால்மீகி' மூலம் கோலிவுட்டில் மீண்டும் என்ட்ரி.

ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

"எப்படி இருக்கு மலையாள சினிமா?"

"உண்மையைச் சொல்லணும்னா, இப்போ அங்கே கொஞ்சம் தள்ளாட்டம்தான். ஜெராக்ஸ் போட்ட மாதிரி ஒரே மாதிரியான படங்களால் ரசிகர்களிடம் ஒரு சலிப்பு. தமிழ் சினிமாவில் மசாலா படங்களைக் காப்பியடிக்கிற மாதிரி மலையாளத்தில் யதார்த்தப் படங்களை காப்பி அடிக்கிறாங்க. கேரளாவில் சூப்பர் ஹிட் ஆன 'சாக்லேட்' பக்கா மசாலா படம். திடீர்னு புதுசா ஒரு படம் வரவும் மக்கள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அதே நேரம் நல்லா ஓடுன 'ஒரே கடல்' யதார்த்தப் படம்தான். வித்தியாசமான ட்ரீட்மென்ட் இருந்ததால அதையும் ரசிச்சாங்க. மசா லாவோ, யதார்த்தமோ புதுசா இருக்கணும்... அவ்வளவுதான் மக்கள் எதிர்பார்க்குறது!"

"ஏன் தமிழில் தேர்ந்தெடுத்துப் படம் பண்றீங்க?"

"எனக்கு என்னன்னா... சினிமாவில் எப்பவும் ஒரு நல்ல தத்துவம் இருக்கணும். அப்பப்போ 'ஒரு நல்ல தமிழ்ப் படத்துல வேலை செய்யணும்'னு தோணும். அப்படி மனசைக் கரைக்கிற 'வெயில்' கதையோடு வசந்தபாலன் வந்து நின்னார். அவர் கதையைச் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே நான் 'ஓ.கே.' சொல்லிட்டேன். ஷூட்டிங் பெரிய இடைவெளிகள்விட்டு நடந்ததால், தொடர்ச்சியா 'வெயில்' படத்தில் வேலை பார்க்க முடியலை. பசுபதியோட தியேட்டர் போர்ஷன் மட்டும் பண்ணிக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டேன். முழுப் படமும் வேலை பார்க்க முடியாததில் எனக்கு வருத்தம்தான். ஆனா, அந்த வருத்தத்தை எல்லாம் துடைக்கிற மாதிரியான கதைதான் 'வால்மீகி'. ஒரு அழகான வாழ்க்கை, ஒரு சின்ன தத்துவம்னு 'வால் மீகி'யின் உலகத்துக்குள் ஈர்த்தார் இயக்குநர் அனந்த நாராயணன். 'விகடன் டாக்கீஸ்' படத்தைத் தயாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் முழு நம்பிக்கையோடு களம் இறங்கி னேன். தமிழில் முதல் படம் பண்ற மாதிரியான அக்கறை யோடு வேலை பார்த்திருக்கேன்!"

ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

"உங்க ஆதர்சமான பச்சை கலர் ட்ரீட்மென்ட் 'வால்மீகி'யிலும் உண்டா?"

"பச்சை நிறத்துக்கு எப்பவுமே ஒரு மென்மையும் குளிர்ச்சியும் இருக்கும். பச்சை நிறம் இல்லாம கேரளாவை நீங்கள் கற்பனைகூடச் செய்ய முடியாது. அதனால என் எல்லா மலையாளப் படங்களிலும் க்ரீன் டோன் அதிகமா இருக்கும். ஆனா, 'வால்மீகி' கதை கம்ப்ளீட்டா வேற! கட்டுப்பாடு இல் லாத அழுக்கான ஒரு மனிதனைப் பத்தின கதை. சென்னையின் ஒரு பகுதி மக்களை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டணும். அதனால என் பச்சை நிறத்துக்கு 'வால்மீகி'யில் வேலை இல்லை. நீங்க படம் பார்க்கும்போது, 'ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?'னு ஆச்சர்யப்படுவீங்க. கண்களை உறுத்தாத சென்னை சேரிகளின் இயல்பான நிறத்தைப் படத்தில் பயன் படுத்தியிருக்கேன்.

படத்தில் பெரும்பாலும், சினிமா ஷூட்டிங்குக்கான விளக்குகளைப் பயன்படுத்தலை. 60 சதவிகித காட்சிகளை இயல்பான வெளிச்சத்திலேயே பதிவு செய்திருக்கோம். படத்தில் பரபரப்பான சாலையில் ஒரு சம்பவம்தான் கிளைமாக்ஸ். அந்த மாதிரி ரோட்ல ஷூட் பண்ணும்போது, சிலர் கேமராவைப் பார்க்குறதைத் தவிர்க்க முடியாது. அதனால ஏழெட்டு கேமராக்களை மறைச்சுவெச்சு ஷூட்டிங் நடப்பதே தெரியாம அந்தக் காட்சிகளைப் படம் பிடிச்சோம். எடிட்டிங் முடிஞ்சு அந்தக் காட்சிகளைப் பார்த்தா அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அவ்வளவு அழகா, அத்தனை இயல்பா வந்திருக்கு கிளைமாக்ஸ் காட்சிகள்!"

ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?

"கவனிச்சீங்களா... இந்திய சினிமாக்களில் ஒளிப்பதிவின் தரம் அதிகரிச்சுட்டே போகுதே?"

"உண்மைதான். விசுவல் மீடியத்தின் அபரிமித வளர்ச்சிதான் காரணம். பத்து வரி வசனம் பேச வேண்டிய இடத்தில் ஒரு ஷாட் மூலம் ரசிகர்களுக்கு சூழ்நிலையைப் புரியவைக்க முடியும். இந்த விசுவல் ட்ரீட்மென்ட் சங்க தியை 'வால்மீகி' போல சில இயக்குநர் கள்தான் பயன்படுத்துறாங்க. எக்கச் சக்க டெக்னாலஜியோடு ஒளிப்பதி வாளர்கள் கிளம்பி வர்ற மாதிரி புதுப்புது பரிசோதனை முயற்சிகளோடு இயக்குநர்கள் வரணும்னு எனக்கு ஆசை. 'மிரர்'னு இரான் படம். ஒரு குட்டிக் குழந்தை காணாமல் போய், திரும்ப வீடு சேர்றதுதான் கதை. அந்தக் குழந்தை வீடு திரும்புற வரை நமக்கும் பதற்றமா இருக்கும். கதைக்கு அதிகம் மெனக்கெடாமல் சம்பவங்கள் மூலம் ஈர்க்கிற ட்ரீட்மென்ட்தான் உலக சினிமா. இந்த ஸ்டைலை நம்ம இயக்குநர்கள் பிடிச்சிட்டா, இந்திய சினிமாக்கள்தான் உலக சினிமாக்களுக்கு உண்மையான சவால்!"

 
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?
-
ஓ! இப்படி ஒரு சென்னை இருக்கா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு