Published:Updated:

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
ரீமாவின் டபுள் எக்ஸெல்...
ரீமாவின் டபுள் எக்ஸெல்...
ரீமாவின் டபுள் எக்ஸெல்...
 
நா.கதிர்வேலன், மை.பாரதிராஜா படங்கள்: என்.விவேக்,வீ.நாகமணி
ரீமாவின் டபுள் எக்ஸெல்...

திகிலூட்டும் குகை வடிவில் அரங்கம்,வெண் பட்டுச் சேலையில் கேரளப் பெண்களின் செண்டை மேளம், ஜீபூம்பா மேஜிக், ஜிலீர்மாடலிங்கேட்வாக், நைஜீரியாவின் பாரம்பரிய 'மக்காஸ்' நடனம்...'ஆயிரத் தில் ஒருவன்' படத்தின் மிரட்டல் டிரெயிலராகவே இருந்தது அந்தப் பட இசைவெளியீட்டுவிழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் கிட்டத்தட்ட கோடம்பாக்கத்தின் கிளாஸ் ப்ளஸ் மாஸ் பாஸ்கள் ஆஜர்!

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

லதா ரஜினி, லட்சுமி சிவகுமார், விஜயலட்சுமி கஸ்தூரிராஜா, சோனியா செல்வராகவன் போன்ற வி.ஐ.பி. இல்லத்தரசிகள் குத்துவிளக்கு ஏற்றியது வெல்கம் மங்களம்!

"செல்வா என் ஃபேவரைட் இயக்குநர்களில்ஒருவர். இந்தப் படத்தின் தகவல்களை ஆரம்பத்தில் இருந்தே பிரமிப்போடு கவனிச்சுட்டு இருக்கேன். உங்களை மாதிரியே நானும் படத்தின் ரிலீசுக்காகக் காத்து இருக்கேன்!" என்றது 'எந்திரன்' இன்ஜினீயர் ஷங்கர்.

படத்தில் வரும் 'உம்மேல ஆசைதான்!' பாடலுக்கு தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஆன்ட்ரியா ஆகியோர்தான் பின்னணி பாடி இருக்கிறார்கள். விழா மேடையிலும் மூவரும் அதே பாடலை ஆடிப் பாடும்போது, தன் மனைவி ஐஸ்வர்யாவைப் பார்த்தபடி 'உம்மேல ஆசைதான்!' என்று எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கை வீசி தனுஷ் பாட... மாமியார் லதா ரஜினி மற்றும் மச்சினிச்சி சௌந்தர்யா முகத்தில் அம்புட்டுச் சிரிப்பு!

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

"மத்த ஹீரோக்களுக்கு மட்டும் காதல், பிரமாண்டம்னு படம் பண்ணும் என் அண்ணன் செல்வராகவன் என்னை மட்டும் சைக்கோவா மாத்திடுறார்!" என்று தனுஷ் கலாய்க்க, செல்வராகவன் முகத்தில் சென்டிமீட்டர் புன்னகை!

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

விழாவின் கிளாமர் ராக்கெட் கிட்டத்தட்ட டபுள் எக்ஸெல் கவர்ச்சியில் வளைய வந்த ரீமா சென்தான். சின்ட்ரெல்லா கவுனில் அடக்கமான அழகில் வசீகரித்தார் ஆண்ட்ரியா.

ரீமாவின் டபுள் எக்ஸெல்...

"டப்பிங் பேசுறப்போ படம் பார்த்துட்டு, 'இந்தப் படத்தோட தமிழ் ரைட்ஸை எனக்கே கொடுத்துடுங்க'ன்னு செல்வாகிட்டே சீரியஸா கேட்டேன். அவருக்குச் சட்டுன்னு புரியலை. 'தெலுங்கு ரைட்ஸ் வேணும்னா தயாரிப்பாளர்கிட்டே கேட்டுப் பாருங்க!'ன்னார் சின்ஸியரா. 'அதில்லைங்க... படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு. அதான், நான் தமிழ் ரைட்ஸ் கேட்டேன்!'னு சொல்ல, அதுக்கும் அடக்கமாத்தாங்க சிரிக்கிறார் இந்த மனுஷன்!" என்று பார்த்திபன் சொல்ல, அதற்கும் அடக்கமாகவே இருந்தார் செல்வா.

கார்த்தி பேசும்போது 'வாழ்க!' கோஷம் விடாது ஒலித்துக் கொண்டே இருக்க, "நானே பருத்திவீரனுக்கு அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இப்பதான் பேச வந்திருக்கேன்... கொஞ்சம் பேசிடுறேனே!" என்று கெஞ்சிக் கேட்டு, படத்துக்காகத் தான் பட்டகஷ்டங்களை ஃபீலிங்ஸாகப் பேசிச் சென்றார்.

விழா தொடங்கியதில் இருந்து முடியும் வரை அதைப் பற்றிக் கவலைப்படாமல் கலகலப்பாக இருந்த ஜோடி... ஆர்யா - லேகா வாஷிங்டன்! ஆர்யா என்னதான் சொல்வாரோ... குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டே இருந்தார் லேக்ஸ்.

விழாவுக்கு ஆச்சர்ய விருந்தினர் யுவன்ஷங்கர் ராஜா. 'செல்வா- யுவன் லடாய்'க்குப் பிறகு இருவரும் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இதுதான்!

 
ரீமாவின் டபுள் எக்ஸெல்...
-
ரீமாவின் டபுள் எக்ஸெல்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு