Published:Updated:

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

நா.கதிர்வேலன்

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##
நே
ரில் பார்த்ததுமே ''நான் விஜய் ஆண்டனி'' என்று சிரித்தபடி கை கொடுக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. ''உங்களை நல்லாத்  தெரியுமே?'' என்றால், ''எல்லாம் ஒரு விளம்பரம் தான்''-மீண்டும் அதிரடியாகச் சிரிக்கிறார். அதிரடி மெட்டு, மென் மெலடி ஹிட்டுகளுக்குப் பெயர் பெற்ற விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்... கதாநாயகன். படத்தின் பெயர் 'நான்’.

''திடீர்னு ஹீரோ ஆகிட்டீங்க?''

''முயற்சிதான்! இந்தக் கதையை ஜீவா சாரின் அசிஸ்டென்ட் ஜீவா சங்கர் சொன்னப்போ, 'இதில் நாமே நடிக்கலாம்’னு தோணுச்சு. ரிஸ்க் எடுக்கிறது எனக்குப் பிடிக்கும். அப்பப்போ வாழ்க்கையில் சர்ப்ரைஸ் கொடுக் கணும்னு நினைப்பேன். இப்படி ஒரு கதை கிடைச்ச பின்னாடி, சும்மா இருந்தாதான் தப்பு. எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த் தப்போ, திருப்தியா, சந்தோஷமா இருக்கு. எனக்கே திருப்தியா இருந்தால்தான், அது உங்களையும் திருப்திப்படுத்தும்!''

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

'' 'நான்’ யார்?''

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

''இது வேணும், அது வேணும்கிற தேடலில் இருக்கிற வரை வாழ்க்கை சுவாரஸ்யமானது.  ஒருத்தனுக்குச் சாப்பிட நல்ல உணவு, கார், பங்களா, அருமையான காதலி, திகட்டுகிற அளவுக்குப் பணம், நல்ல உடல் நலம் இருந்தா வேற என்ன தேடப்போறான்? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாம தன் வேலைகளை மட்டும்தானே செய்வான்? அதுவே எதுவும் இல்லாதவனோட வாழ்க்கை எப்படி இருக் கும்? ஏதாவது அடையணுமேங்கிற பதற்றத்தில் எல்லாத் தப்புகளையும் செய்ய ஆரம்பிப்பான். நாம் எப்போ கெட்டவன் ஆகிறோம்கிற கேள்விக்குப் பதில்தான் 'நான்’. ஒரு மியூஸிக் டைரக்டர் என்னத்த நடிச்சிருக்கப் போறார்னு நினைச்சு நீங்க வந்தா, நிச்சயம் உங்களுக்கு நான் ஷாக் கொடுப்பேன். இது திமிர் இல்லை... தன்னம்பிக்கை!''

''நடிப்பு அவ்வளவு ஈஸியான விஷயமா?''

''அர்ப்பணிப்போடு செஞ்சா எந்த விஷயமும் ஈஸிதான். நமக்குன்னு அமைஞ்ச ரோலில் யாராலும் எளிதா செட் ஆகிட முடியும். அப்படி ஒரு கேரக்டர் கிடைக்கணும். அல்லது உருவாக்கணும்.  எனக்குக் கிடைச்சது!''

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

''இனிமே தொடர்ந்து நடிப்புதானா?''

''நான் தெளிவா இருக்கேன். இசையிலும் நடிப்பிலும் எனக்கான இடம் கிடைக்கும்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. 'வேலாயுதம்’ படத்துக்கு ரொம்ப மெனக்கெட்டு ட்யூன் போட்டிருக்கேன். நிச்சயம் எல்லா விஜய் ரசிகர்களுக்கும் பாடல்கள் பிடிக்கும். அப்பப்போ 'நான்’ மாதிரி படம் கிடைச்சா, நடிக்கவும் செய்வேன்!''

''எவ்வளவுதான் ஹிட் கொடுத்தாலும், முதல் வரிசை இசையமைப்பாளரா வர முடியலையேன்னு வருத்தம் இருக்கா?''

''என் இசையின் ஸ்கேல் எனக்குத் தெரியும். 'நான் நல்ல இசைதான் கொடுக்கிறேன்’னு என் மனசு தருகிற சர்ட்டிஃபிகேட் ரொம்பப் பெரிசு. விருதுகளைவிட என் மனசைத்தான் ரொம்ப நம்பு றேன். 'அடடா, நமக்குச் சரியானமெரிட் கிடைக்கலை’ன்னு கன்னத்தில் கை வெச்சிட்டு உட்கார்ந்தா, அடுத்த கட்டத் துக்கு நகரவே முடியாது. நான் தனியா வந்தேன். எந்தப் பின்னணியும் கிடையாது. கை தூக்கி விட யாருமே இல்லை.

''எனக்கு இதுவே பெரிய உயரம்தான்!''

எல்லாத்தையும் யோசிச்சா... இதுவே பெரிய உயரம்தான்.''

''மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?''

''ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு 'மாஸ்ட்ரோ’னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடுறோம்!''