Published:Updated:

பிக்பாக்கெட் ஆக ஆசை!

பிக்பாக்கெட் ஆக ஆசை!

பிக்பாக்கெட் ஆக ஆசை!

பிக்பாக்கெட் ஆக ஆசை!

Published:Updated:

17-06-09
"பிக்பாக்கெட் ஆக ஆசை!"
பிக்பாக்கெட் ஆக ஆசை!
பிக்பாக்கெட் ஆக ஆசை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
ரீ.சிவக்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்
பிக்பாக்கெட் ஆக ஆசை!

ரு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள்... கொஞ்சம் அரட்டை. அகில், மீரா நந்தன், தேவிகா என 'வால்மீகி' வால் நட்சத்திரங்களின் ஜாலி சந்திப்பு இது...

பிக்பாக்கெட் ஆக ஆசை!

முதலில் தேவிகா. ''பரதநாட்டியம், மோகினி ஆட்டம்னு செம ஆட்டம் போடுவேன். கேமராமேன் அழகப்பன் சார் என் டான்ஸ் புரொகிராம் பார்த்துட்டு 'கனகா கேரக்டருக்கு தேவிகாதான் சரி'ன்னு முடிவுசெஞ்சார். அதுக்கு முன்னாடி 80 பொண்ணுங்கபார்த்து இருக்காங்க தெரியுமா?'' என்று இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார் தேவிகா.

இப்போது மீராநந்தன்... ''திலீப்புடன் 'முல்லா', ஜெயசூர்யாவுடன் 'கரன்சி'ன்னு மலையாளத்தில் ரெண்டு படங்கள் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துதான் அனந்தநாராயணன் சார் என்னை செலெக்ட் செய்தார். அழகப்பன் சார் கேமரா, ராஜா சார் மியூஸிக், விகடன் டாக்கீஸ் தயாரிப்புன்னு முதல் தமிழ்ப் படத்திலேயே மூணு ஜாக்பாட் அடிக்கும்னு சத்தியமா நினைக்கலை.'' - ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன மீராவுக்கு.

அகில் ஆரம்பித்தார்... ''இந்த மெட்ராஸ் பாஷை பேசறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சு. ச்சே, இன்னும் விட மாட்டேங்குது, பாருங்க. பொதுவா, தென் மாவட்டங்கள்ல இருந்து வர்றவங்களுக்கு மெட்ராஸ் பாஷையைப் பார்த்தாலே மிரட்சியா இருக்கும். இந்தப் படத்துல முழுக்க மெட்ராஸ் பாஷை பேசுற பிக்பாக்கெட் கேரக்டர். 'கல்லூரி'யில் அடக்கமான ஸ்டூடன்ட். 'வால்மீகி'யில் அதற்கு நேர்மாறா அதிரடியான ஆளு!'' என்கிற அகிலின் கண்களில் வெளிச்சம் மின்னுகிறது.

''எனக்கு சல்வார், சுடிதார்னு சராசரியான தமிழ்ப்பொண்ணு கேரக்டர். இவங்க பட்ட இம்சைகளை நான் அனுபவிக்கலை. ஆனால், தான் நினைக்கிற மாதிரி ஸீன் வர்ற வரைக்கும் டைரக்டர் சும்மா விட்டுற மாட்டார். வடபழனி கோயில்ல தண்ணியில மூழ்கற ஒரு ஸீன். அப்பப்பா, ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன்.''- காட்சிக்குள் மூழ்கிப் போனார் மீரா நந்தன்.

''அகில், உங்களுக்கு எது கஷ்டமா இருந்தது?'' என்று கேட்டால், ''டூயட் காட்சிகள்தான்'' என்று கண்ணடிக்கிறார். '' 'கல்லூரி' படத்தில் பெரிசா டூயட் கிடையாது. எல்லாமே மான்டேஜ் ஸீன்கள்தான். பாட்டு முழுக்க நடப்பேன், பேஸ்கட் பால் ஆடுவேன். ஆனா, இந்தப் படத்துல முதன்முதலா டூயட் ஆடணுங்கிறப்போ சின்னதா நடுக்கம். தேவிகாவோடு ஒரு நெருக்கமான ஸாங். ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன் சார்'' என்கிற அகிலிடமிருந்து பெருமூச்சு.

''ஆமாமா, அதுக்கு முன்னால வரைக்கும் அகில் சார் பயங்கர ரிசர்வ்ட் டைப். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவார், டயலாக் பேசுவார், நடிப்பார், போயிடுவார். அவ்வளவா பேசிப் பழகினது இல்லை. ஆனா, டூயட் ஆடின பிறகுதான் சார் ஒருவழியா செட் ஆனார்'' என்ற தேவிகாவின் முகத்தில் குறும்பு.

பிக்பாக்கெட் ஆக ஆசை!

''உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நானும் தேவிகாவும் ஒரே ஊர்க்காரங்க. ஆனா, அது ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசிப் பழகின பிறகுதான் தெரியும். சென்னைங்கிறது வேறு மாநிலத்தில் இருக்கிற இன்னொரு ஊருங்கிற உணர்வே வரலை எனக்கு. அப்படி ஒரு ஹோம்லி ஃபீல்'' என்கிற மீராவை வழிமொழிகிறார் தேவிகா.

''அனந்தநாராயணன் சாரை நான் அண்ணன்னு தான் கூப்பிடுவேன். அவ்வளவு பிரியமா இருப்பாரு. ஷூட்டிங் ஸ்பாட் போற வரைக்கும் கேரக்டரை நினைக்க மாட்டேன். ஆனா, அப்புறம் 9 டு 6 என்னை பாண்டியா மாத்திடுவாரு டைரக்டர். அவ்வளவு பொறுமையாச் சொல்லித் தருவார். யாரா வது பிக்பாக்கெட்காரன் ஆக ஆசைப்படுவாங்களா சார்? ஆனா, நான் இந்த கேரக்டர்ல நடிக்கிறப்ப ஆசைப்பட்டேன். அந்தளவுக்கு உயிரோட்டமுள்ள கேரக்டர். அதுவும் ராஜா சார் இசையில் படம் நடிச்சது வாழ்க்கையின் வரம். நான் ரொம்ப லக்கி சார்!'' என்பது அகிலின் சந்தோஷம்.

''கேரளாவில் சில படங்கள் பண்ணினாலும், தமிழில் ஒரு நல்ல படம் மூலமா என்ட்ரி ஆகிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!''-மகிழ்ச்சி ததும்பும் மீராநந்தனின் வார்த்தைகள்; ''மலையாளத்தில் சம்சாரிக்கிற சின்னத்திரையிலிருந்து 'வால்மீகி' மூலமா பெரிய ஸ்க்ரீனுக்கு ஷிஃப்ட் ஆகறேன்!''-தேவிகாவின் பெருமிதம்; ''வால்மீகி வந்தால் நானும் தமிழில் கவனத்துக்குரிய கதாநாயகன்!'' - அசைக்க முடியாத அகிலின் நம்பிக்கை என மூன்று பேருக்குமே இப்போதைய எதிர்பார்ப்பு... 'வால்மீகி'யின் வருகைதான்!

 
பிக்பாக்கெட் ஆக ஆசை!
-
பிக்பாக்கெட் ஆக ஆசை!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism