Published:Updated:

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

Published:Updated:

17-06-09
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
பாரதிராஜா,செந்தில்குமார், படங்கள்: 'ப்ரீத்தி', செந்தில்
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ர்த்தி w/o 'ஜெயம்' ரவி!

காதல் 'ஜெயமான' 'சந்தோஷ'த்தில் 'தாம்தூம்' கெட்டிமேளம்! ('அட! இந்த படப் பெயர் டிரெண்டை எப்ப ராசா நிறுத்துவீங்க?') அடைகாக்கப்பட்ட ஹோட்டல் அரங்கத்தில் திருமணத்தைச் கமுக்கமாக முடித்த ரவி குடும்பத்தினர், ரிசப்ஷனைக் கோலாகல கொண்டாட்டமாக்கிவிட்டனர்.

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

திருமணத்துக்கு வந்த ரஜினி வழக்கம் போல விறுவிறு நடையும் ஓட்டமும் கலந்து மேடையேற, ஒரு போட்டோகிராபர் அவரிடம், ''உங்ககூட சரிக்குச் சரியா ஓடி வர முடியலே சார்!'' என்று சவுண்டுவிட்டார். ''எங்கூட நீங்க ஓடி வர முடியாது. ஆனா, எனக்கு முன்னால ஓடிப் பாருங்க. என்னை விட வேகமா ஓட முடியும்!'' என்று அந்த மைக்ரோ விநாடியிலும் ஒரு தத்துவம் உதிர்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் எஸ்கேப்!

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

திருமணம் முடிந்ததும், ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் ரவி. அவர்கள் மணமக்கள் நடந்து வரும்போது பூக்களைத்தூவி, 'அண்ணி வாழ்க!' என்று கோஷம் எழுப்ப, ஆர்த்தி கண்களில் அத்தனை ஆச்சர்யம். ''ரவிக்கு ரசிகர்கள் இருப்பாங்கன்னு தெரியும். ஆனா, இவ்வளவு அன்பா இருப் பாங்கன்னு தெரியாது. 'யாருக்காகவும் அவங் களை விட்டுக்கொடுத்துராதீங்க'ன்னு ரவி கிட்ட சொல்லியிருக்கேன்!'' என்று நெகிழ் கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஆர்த்தி ஸ்காட்லாந்தில் மேனேஜ்மென்ட் படித்தவர் என்பதால், திருமணத்துக்கு ஸ்காட்லாந்து வகுப்புத் தோழிகள் ஃபிளைட் பிடித்து வந்துவிட்டனர். மணப்பெண் கோலத்தில் ஆர்த்தியைப் பார்த்தவர்கள் அவருக்கு முத்தமழை பொழிய, 'விட்டால் மேடையிலேயே தனக்கும் இச் தந்துவிடுவார்களோ' என கொஞ்சம் அலர்ட் ஆக ஒதுங்கி நின்று கொண்டார் ரவி.

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

ஆர்த்தியின் அம்மாவும் குஷ்புவும் பிஸினஸ் பார்ட்னர்கள். திருமணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் குடும்பமாக வந்திருந்து, விருந்தினர்களை வரவேற்று உபசரித்து தங்கள் வீட்டுக் கல்யாணமாகவே நடத்தி முடித்தார்கள் குஷ்பு-சுந்தர்.சி தம்பதியினர்.

வரவேற்புக்கு வந்த அ.தி.மு.க-வின் செங்கோட்டையனும் ஜெயக்குமாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு, திரும்பிச் செல்ல லிஃப்டுக்குக் காத்திருந்தனர். அந்தச் சமயம் துணை முதல்வர் ஸ்டாலின் வந்திருப்பதாகப் பரபரப்பு கிளம்ப, லிஃப்டில் ஸ்டாலினை எதிர்கொள்ள நேர்ந்தால், வணக்கம் வைத்தாக வேண்டுமே என்று எண்ணி, மாடிப்படிகள் வழியாகக் கிட்டத் தட்ட தப்பி ஓடிவிட்டனர்.

மன்சூர் அலிகான் தன்னுடன் ஒரு குட்டிப் பையனையும் அழைத்து வந்திருந்தார். 'பையன் யாரு?' என்று ஒருவர் கேட்க, ''இவனைப் பார்த்தா என் பையன் மாதிரி தெரியலையா? பக்கத்து வீட்டுப் பையனையா விசேஷத்துக்குக் கூட்டிட்டு வருவேன்!'' என்று எகிறத் தொடங்க... சுற்றியிருந்த மொத்தக் கூட்டமும் மன்சூருக்கு ஒதுங்கி வழிவிட்டு நின்றது.

தம்பி கார்த்தியுடன் வந்த சூர்யா, ரவியிடம் ஏதோ ரகசியம் கிசுகிசுத்தார். பிறகு, மேடையை விட்டு இறங்கும் முன் ஆர்த்தியிடம், ''ரவி ரொம்ப நல்ல பையன். பத்திரமா பார்த்துக்கம்மா!'' என்று மாப்பிள்ளைக்கு சர்ட்டிஃபிகேட் கொடுத்துச் சென்றார்.

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

தன் கணவருடன் வந்திருந்த நதியா மேடையில் ரொம்ப நேரம் நின்று அனைவரிடமும் நல விசாரிப்புகளை நிகழ்த்திக்கொண்டு இருந்தார். அதனால் ஏற்பட்ட டிராஃபிக் ஜாமைக் கொஞ்சம் லேட்டாகப் புரிந்து கொண்டவர், அவசரமாக மேடையை விட்டு இறங்கினார்.

போனிலேயே விஜயகாந்த் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட, பிரேமலதா விஜயகாந்த்தும் சுதீசும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றனர்.

துணை முதல்வர் ஸ்டாலின், மகன் உதயநிதியுடன் வந்து வாழ்த்தித் திரும்ப, பாதுகாப்புப் பணியில் இருந்த ஒருவர் ஸ்டாலின் பின் சென்ற உதயநிதியின் தோளில் கைவைத்துத் தடுத்தார். உடனே அருகில் இருந்தவர்கள், 'இவர் யார் தெரியும்ல... அண்ணன் யார் தெரியும்ல...' என்று அவர் யார் என்று சொல்லாமலேயே பில்டப்புகள் கொடுத்தனர். உடனே உதயநிதியே, 'பரவாயில்லை... யார்னு தெரியாமத்தானே தடுத்தாரு!' என்று அமைதி ஏற்படுத்தினார்.

ஆர்த்தி w/o ஜெயம் ரவி!

''நேத்து மாதிரி இருக்கு. ஆனா, ஆர்த்தியை நான் முதன்முதலில் பார்த்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி! என் காதலைச் சொன்னதும், காத்திருந்த மாதிரி அவங்களும் தன் விருப்பத்தைச் சொன்னாங்க. அப்பாகிட்ட சொன்னதும் அதுக்குப் பிறகு நடந்த எல்லாத்தையும் அவரே பார்த்துக்கிட்டார். என் அப்பாகிட்டே நான் கேட்டுக் கிடைச்சதைவிட, கேட்காம கிடைச்சதுதான் அதிகம். அடுத்த ஜென்மத்திலும் நான் அவருக்கே மகனா பிறக்கணும். தேங்க்ஸ் அப்பா!'' என்று மகிழ்ந்து நெகிழ்கிறார் ரவி.

 
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!
-
ஆர்த்தி w/o ஜெயம் ரவி!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism