Published:Updated:

தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

Published:Updated:

17-06-09
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
எம்.குணா
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

'கடைசியில் முடிந்தேவிட்டது பிரபுதேவா - நயன்தாரா கல்யாணம்' என்று டும்டும் கொட்டுகிறது கோடம்பாக்கம். சூர்யா-ஜோதிகாவுக்கு அடுத்து ரொம்ப நாட்களாக வெற்றிடமாக இருந்த கோடம்பாக்க லவ் டிராக்கில் லேட்டஸ்ட்... பிரபுதேவா - நயன்தாரா!

பிரபு- நயன் திருமணம் நிஜம்தானா என்று கோலிவுட் பார்ட்டிகளிடம் விசாரித்தால், ''மறுத்துகிட்டேதான் இருப்பாங்க. ஆனா, சீக்கிரமே கன்ஃபர்ம் ஆகும் பாருங்க!" என்பார்கள்.

"இந்த லவ் மேட்டர் தெரிஞ்சபோதே பல சினிமா வி.ஐ.பி-க்கள் ஷாக் ஆகிட்டாங்க. ரெண்டு பேரிடமும் பேசிப் பார்த்திருக்காங்க. 'குடும்பம், குழந்தைன்னு ஆன பிறகு காதலெல்லாம் சரிப்பட்டு வராது. நயன்தாராவை மறந்து குடும்பத்தைக் கவனிங்க'ன்னு பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. நயன்தாராவையும் கூப்பிட்டு 'இந்த முடிவு அவரை மட்டுமில்லே... உன் சினிமா வாழ்க்கையையும் பாதிக்கும். உனக்கு இன்னும் கேரியர் இருக்கு. அதுக்குள்ளே ஏன் இப்படி ஒரு அவசர முடிவு?'ன்னு கேட்டுப் பார்த்துட்டாங்க. ஆனா, ரெண்டு பேருமே அந்த ஸ்டேஜையெல்லாம் தாண்டிப் போயிருந்தாங்க'' என்கிறவர்கள், காதல் கனிந்த விஷயத்தைப் பற்றி ஃப்ரெஷ்ஷாகச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

''பொதுவா, நயன்தாரா யாரோடு நடித்தாலும் அவர்களோடு நெருக்கம் காட்டுவார். அதனாலேயே சிம்பு, தனுஷ், விஷால் என்று இணைத்துப் பேசப்பட்டார். படம் முடிந்தபிறகு அடுத்த காரியத்தைப் பார்க்கப் போயிடுவார். ஆனா, பிரபுதேவா விஷயத்தில் மட்டும் வித்தியாசம்.

அவரை ஒருமுறை சந்தித்தாலே பல வருஷம் பழகியவர் மாதிரி ஃபீல் பண்ண வைப்பார் பிரபுதேவா. அவர்கிட்ட நம்ம பிரச்னைகளைச் சொல்லி ஆறுதல் தேடத் தோணும். 'வில்லு' படப்பிடிப்பு சமயத்தில் இருவரிடையே நட்பு மலர்ந்து தன் பழைய காதல் பற்றிப் பேச்சு வந்தபோது பிரபுதேவாவிடம் தேம்பி அழுதிருக்கார் நயன். அப்போதைய பிரபுதேவாவின் ஆறுதலும் தேறுதலும் இருவரிடையேயான நெருக்கத்தை அதிகரித்திருக்கிறது.

இது வழக்கமான ஈர்ப்பாக மட்டும் இருந்திருந்தால் 'வில்லு'வோடு முடிந்திருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் ரெண்டு பேரும் ஒருநாள்கூடப் பிரிஞ்சிருக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிட்டாங்க. 'வில்லு' ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போதே பிரபுதேவா வீட்டுக்குப் போய்வர ஆரம்பிச்சார் நயன். இதை வெறும் நட்புன்னு நம்பி அவரை அனுமதித்தார் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். பிரபுதேவாவின் மகன் விஷால் இறந்த சோகத்தின்போது, சடலத்தை எடுக்கும் வரை பக்கத்திலேயே இருந்து வேதனையோடு அழுதுகொண்டு இருந்தார் நயன்தாரா.

அதற்குப் பிறகான ஈர்ப்புகளின் காரணமாக, 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' என்று நயனிடம் வாய்விட்டுக் கேட்கும் அளவுக்கு பிரபுதேவா காதல் வயப்பட்டார். 'உங்களுக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கே?' என்பதை மட்டுமே தன் ஆட்சேபனையாகச் சொன்னார் நயன்.

வீட்டில் விஷயத்தை பிரபுதேவா ஓபன் செய்தபோது, அவர் எதிர்பார்த்த இடி, மின்னல், பூகம்பம்தான். குடும்ப நண்பர்களின் பஞ்சாயத்துக்கு விஷயம் போனது. இப்படி நாலு பேர் கூடிப் பேசுகிற விஷயமாக இது மாறியதும் வீட்டுப் பக்கம் போகவே தயங்கியவராக, நயன் சந்திப்புகளை துரிதப்படுத்த ஆரம்பித்துவிட்டார் பிரபுதேவா.

ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். அவர் வேதனையை வெளிப்படுத்தி முடிச்சதும், 'காதல் தப்பில்லை. அதனால யாருக்கும் பாதிப்பு வரக் கூடாது. நீ பிரபுதேவாவோட லைஃப்ல குறுக்க வர்றதால இன்னொரு பொண்ணோட வாழ்க்கை பாதிக்கப்படுதேம்மா' என்று நயனிடம் சொல்லிப் பார்த்தாராம். படபடத்த நயன்தாரா, 'இதை நீங்க இவர்(பிரபுதேவா)கிட்டே சொல்லுங்க சார். அவரை எனக்கு போன் பண்ணாம இருக்கச் சொல்லுங்க. நானும் விலகி என் வேலையைப் பார்க்கத் தயார்தான்!' அப்படினு கலங்கியபடி சொல்லவும்... பிரபுதேவாவுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கார் ரஜினி.

தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!

கொஞ்ச நேரம் அமைதியா இருந்த பிரபுதேவா, 'சார்... 'சந்திரமுகி' சக்சசுக்கு நயன்தாராவும் ஒரு காரணம்னு நீங்க நினைச்சீங்க. 'சிவாஜி'யில் சென்டிமென்ட்டா அவங்களை ஒரு பாட்டுக்கு ஆடவெச்சீங்க. அது சினிமா. எனக்கு இவங்க லைஃப்! அவங்ககூட வாழ்க்கைன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். மகனைப் பறிகொடுத்த எனக்கு நயன்தாரா பெரிய ஆறுதலா இருந்தாங்க. உலகத்துல யாருமே செய்யாத தப்பை நான் பண்ணலை. நானும் அதே மாதிரி இருந்துட்டுப் போறேன்'னு பணிவாச் சொன்னாராம்.

மொத்தத்தில் நல்லெண்ணத்தோடு ரஜினி செஞ்ச பஞ்சாயத்து தோத்துப் போச்சு. நயன்தாரா ஜெயிச்சிட்டாங்க. ஹைதராபாத்ல ரகசியமா கல்யாணம் நடந்துடுச்சுனுதான் எங்களுக்குத் தகவல். அது இல்லேங்கிற பட்சத்தில் ரம்லத்தோடு சேர்ந்து பிரபுதேவா கூட்டாக ஒரு அறிக்கை விட்டாதான் உண்டு. ரம்லத்தோடு பிரபுதேவா ஒண்ணா சேர்ந்து வாழ்ந்தா அதைவிட எங்களுக்கு சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்?" என்று முடித்தார்கள்.

பிரபுதேவா, நயன்தாரா இருவரையும் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டாலும், இதுவரை பதில் மௌனம் மட்டுமே. அவர்கள் பேசட்டும்... அதுவரை காத்திருப்போம்!

 
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!
-
தோற்றது ரஜினி பஞ்சாயத்து... ஜெயித்தது நயன்தாரா காதல்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism