நாடாளுமன்றத் தேர்தலில் சினிமா அரசியல்வாதிகள் ஓட்டிய ஃபிலிம்கள் அனைத்தும் அட்டர் ஃபிளாப். இனி, என்ன செய்யலாம் செல்லுலாய்டு கதர் சட்டைகள்?
விஜயகாந்த்: பல இடங்களில் டெபாசிட்டைக் காலி செய்த மக்களைத் தண்டிக்க, 'மரியாதை- பார்ட்-2' எடுத்து பயமுறுத்திப் பாடம் கற்பிக்கலாம்!
சரத்குமார்: '1977' என்ற உலக சினிமா எடுத்ததைப் போல '2011' என்று ஒரு டெர்ரர் சினிமா எடுக்கலாம்!
கார்த்திக்: 'ஜெய் ஹோ' பாடலைப் போல 'ஹேய் தொப்பி' என்று டியூன்போட்டு பாடலைப் பிரபலமாக்கலாம்!
விஜய டி.ராஜேந்தர்: குறள் டி.வி-யில் 'கவுக்கப் போவது யாரு?' புரொகிராமை மன்சூர்அலி கானோடு இணைந்து மிரட்டி வழங்கி தமிழ கத்தை டர்ராக்கலாம்!
'அரசியலுக்கு வருவேன், வருவேன்!' என்று சொல்லும் வடிவேலு அரசியலுக்கு வருவதாகத் தெரியவில்லை. அதனால், வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகளை அரசியல் பிரபலங்கள் பேசினால்..?
|