Published:Updated:

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

Published:Updated:

17-06-09
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

யிரம் பிரச்னைகள் அலைக்கழித்தாலும், பிரியாமல் பாசம்வைத்துப் பாலம் கட்டுபவர்களே 'மாயாண்டி குடும்பத்தார்!'

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

மணிவண்ணன்(மாயாண்டி),ஜி.எம்.குமார் இடையே சொத்துத் தகராறு. ஜி.எம்.குமாரின் மகன்கள் ரவிமரியா, நந்தாபெரியசாமி இருவரும் சண்டைக்கோழி கள் என்றால், மணிவண்ணனின் மகன்கள் பொன் வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி ஆகியோர் பாசப் புறாக்கள். மணிவண்ணன் மரணத்துக்குப் பிறகு, தனிக்குடித்தனத்துக்கு மல்லுக்கட்டும் மருமகள்களால் சில்லுச் சில்லாகச் சிதறுகிறது மாயாண்டி குடும்பம். கல்யாணமாகாத கடைசித் தம்பி தருண்கோபி ஆதரவற்றுத் திரிகிறார். பங்காளிப் பிரச்னை, பாகப் பிரி வினைக்கு நடுவே மாயாண்டி குடும்பத்தார் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை!

பத்திரிகையில் பெயர் போடாததற்காக சிலுப்புவது, இழவு வீட்டில் ஈரம் காய்வதற்கு முன்பாக சொத்துப் பிரச்னையைக் கிளப்புவது என்று கிராமத்தின் அசல் முகத்தை வைத்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராசு மதுரவன். 10 இயக்குநர்களை இணைத்திருப்பது வெறுமனே வித்தியாச முயற்சியாகத் தொக்கி நிற்காமல், கதாபாத்திரங்களோடு ஒன்றவைத்திருப்பதை ரசிக்கலாம்!

தத்தமது மனைவியின் தலையீட்டைத் தடுக்க முடியாதவர்களாக, தம்பியை இழக்க முடியாதவர்களாகத் தவிப்பை வெளிப்படுத்தும் இடங் களில் பொன்வண்ணனும் சீமானும் இயல் பாக ஈர்க்கிறார்கள். மாயாண்டி மகன்களில் அதிகம் கவர்பவர் ஜெகன்நாத். காதுகேளாத புரோட்டா கடைப் பெண்ணைக் காதல் பாடல்கள் போட்டு கரெக்ட் பண்ண நினைப் பதும், புது மாப்பிள்ளை பூரிப்பில் திரிவதுமாகக் கலகலக்கவைக்கிறார். சந்தடி சாக்கில் கிடைத்ததைச் சுருட்ட நினைக்கும் ராஜ்கபூர் சின்னச் சின்ன கேப்பில் கூட சிக்ஸர் அடிக்கிறார்.

அந்தக் குடும்பத்தின் சோப்ளாங்கி பிள்ளை தருண் கோபிதான். காதல், மோதல், சோகம், பாசம் எல்லா வற்றுக்கும் தருண்கோபியிடம் ஒரே மாதிரி உஷ்ண உணர்ச்சிகள்தான்.

அங்காளி பங்காளிகளாக வரும் ரவிமரியா, நந்தா பெரியசாமி இருவருக்கும் தொடை தட்டித் துள்ளிக் குதிப்பதோடு வேலை ஓவர். சீரியஸாக நகரும் கதையில் ஆங்காங்கே சிரிப்பு வெடி கொளுத்துவது சிங்கம்புலி. ஜி.எம்.குமாரின் மனநிலை பாதிக்கப்பட்ட மகனாக, வளர்ந்த குழந்தையாக வந்து, 'அப்பா நீ செத்துட்டா இந்த பீடி எனக்குத்தானே?' என்று வெறுப்பேற்றிக் கலகலக்கவைக்கிறார்.

சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்

'கள்ளக் காதலைக்கூட வெளிப்படையா செய்யிற காலத்துல கூடப்பிறந்தவனுக்கு ரகசியமாத்தான் உதவ வேண்டியிருக்கு!' என்று ஆங்காங்கே வசனங்களில் கூர்மை. சபேஷ்-முரளியின் இசையில் 'களவாணியே', 'வந்தனமுங்க' பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பாலபரணியின் ஒளிப்பதிவில் 'வந்தனமுங்க...' பாடல் கிராமத்து திருவிழாவை 'லைவ்' செய்கிறது!

படத்தில் பலவீனமே, வழுக்கிவிடும் அளவுக்கு பூத்து நிற்கும் பாசக் காட்சிகள்தான். அம்புட்டுப் பாசம் பேசும் அண்ணன்கள் திடீரென்று காணாமல் போய், தருண் கோபி தேடி வரும்போது மட்டும் திகட்டத் திகட் டப் பாச பாயசம் காய்ச்சுகிறார்கள்.

நாடகத்தனமான காட்சிகள் அடுத்தடுத்து அடுக்கப்பட்டு இருக்காவிட்டால், மாயாண்டி குடும்பத்தாரின் விருந்தை ரசித்தே ருசித்து இருக்கலாம்!

 
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்
-
சினிமா விமர்சனம்: மாயாண்டி குடும்பத்தார்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism