ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி


17-06-09
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி
 
கிஷோர் டெலிசினி
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

மும்பை மாடல் ஷபன் சரண், தமிழில் 'கண்டேன் காதலை' படத்தில் அழகு அறிமுகம் ஆகிறார். ரேமண்ட்ஸ், கிட்கேட், ஸ்கூட்டி பெப் விளம்பர தேவதை. படத்தில் தமன்னாவின் தங்கச்சி. ராஜஸ்தானில் பிறந்து, டெல்லிக்கு நகர்ந்து, மும்பையில் செட்டிலானது ஷபனின் வாழ்க்கைக் குறிப்பு. ''ஆக்சுவலி... (இதை விட மாட்டீங்களாப்பா) நான் நடிக்க வந்தது ஆக்ஸிடென்ட் (யாருக்கு..?) ஸ்கூல் படிக்கும்போது டீச்சராக ஆசைப்பட்டேன். காலேஜ் படிக்கும்போது ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்பட்டேன். வளர்ந் ததும் எல்லோரும் மாடலிங் ஆசை காட்ட, மாடல்ஆகிட் டேன். அடுத்த ஏரியா சினிமாதானே... அதான் வந்துட்டேன்!'' என வித்தியாசமாகப்(!?) பேசுகிறார் ஷபன்.

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

வீட்டில் ஐந்து நாய்களை வளர்க்கிறார் அம்மு. ''பயந்துடாதீங்க எல்லாமே என்னை மாதிரி ரொம்ப சாஃப்ட்!'' என்கிறார். ''தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் அக்கா, தங்கை, தோழி கேரக்டர்கள்ல நடிக்க நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, தமிழ் தவிர மற்ற மொழிகளில் 'ஒன்லி ஹீரோயின்' ஃபார்முலாவில் ஸ்டெடியா இருக்கேன்!'' என்கிறார்.

'சத்தம் போடாதே'வில், 'பேசுகிறேன்... பேசுகிறேன்...' என்று பாடி நம் இதயத்தோடு பேசிய நேஹா பேஸின், லேட்டஸ்ட் 'கவிதை குண்டர்' ஹிட்டில் செம குஷியாக இருக்கிறார். ''என்னோட 'விவா' ஆல்பம் 5 லட்சம் சி.டி-க்கள் சேல்ஸ். இப்போ 'கவிதை குண்டர்' சி.டி. குண்டக்க மண்டக்க சேல்ஸ் ஆகிட்டு இருக்கு. அடுத்து யுவன் இசையில், 'யோகி'யில் நான் பாடியிருக்கிற ஒரு பாட்டு ஹிட் ஆகும். அவ்ளோ சூப்பர் பாட்டு!'' என்பது நேஹாவின் லேட்டஸ்ட் பேச்சு!

சிம்பு கிரிக்கெட்டில் இருந்து ஃபுட் பாலுக்குத் தாவிவிட்டார். 'விண்ணைத் தாண்டி வருவாயா?' ஷூட்டிங்குக்காக மால்டா தீவு சென்றவர், அப்படியே ரோம் சென்று 'சாம்பியன்ஸ் டிராஃபி' ஃபுட்பால் மேட்ச் பார்த்திருக்கிறார். அதில் அவரது ஃபேவரைட் டீமான 'மான்செஸ்டர் டீம்' தோல்வியடைய, சிம்புவுக்கு எக்கச்சக்க வருத்தம். அங்கிருந்து சவுதி சென்று, ரசிகர் மன்றம் ஒன்றைத் துவக்கி, அதில் 47 உறுப்பினர்களையும் இணைத்திருக்கிறார்.

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

'அசல்' அஜீத்துக்கு ஹீரோயின் சமீரா ரெட்டி. தவிர, பாலிவுட் பார்ட்டி கொய்னா மித்ராவையும் குத்துப் பாட்டுக்காகக் கொண்டு வந்து இறக்கப் போகிறார்கள். 'சிட்டிசன்' படத்திலேயே சமீரா ரெட்டி அஜீத்துடன் ஜோடி சேர்ந்து நடிப்பதாக இருந்தது. அசலில் அமைந்துவிட்டது. அசலும் முதலுமா அசத்துங்க!

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ப்ரியாமணி பிஸி. ''நான் நடிக்கிற கமர்ஷியல் படங்களில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் எப்படி இருக்கும்னு உலகத்துக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாத, நான் எதிர்பார்க்கிற ஒரு படம் 'புதிய முகம்'. அந்த மலையாளப் படத்தில் அடிச்சுப் பிரிக்கிற மாதிரி, ஆச்சர்யப்படவைக்கிற சூப்பர் கேரக்டர் பண்றேன். அதே மாதிரி மணிரத்னம் சாரோட படத்தில் நடிச்சே ஆகணும்னு வெயிட் பண்ணி கமிட் ஆனேன். ஏன்னா, மணி சார் படத்தில் நடிச்சா இந்தியாவுக்கே பார்ட்டி வைக்கலாம்!'' இது ப்ரியாமணி கருத்து.

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

'அசத்தப் போவது யாரு?' காமெடி பார்ட்டி ஈரோடு மகேஷ், இப்போ ஆதித்யா சேனல் காம்பியர். வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகளுக்கு வி.ஐ.பி-க்களை அழைத்துச் செல்வது அவருக்கான இஷ்டமான அசைன்மென்ட். ''வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பின் பேரில் வி.ஐ.பி-க்களைக் கலை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிட்டுப் போறேன். மதுரையில் உள்ள 'சேவாலயம்' ஆதரவற்ற குழந்தைகளை சென்னைக்கு 4 நாள் சுற்றுலா அழைச்சுட்டு வந்தது சமீபத்திய சந்தோஷம்!'' என்று நெகிழ்கிறார் மகேஷ். நல்ல விஷயம்!

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

'ஷா பூ த்ரி' என்ற படத்தில் நடிக்கும் அக்ஷா இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண். ''முழுப் பேர் அக்ஷா சுதாரி. இலங்கையில் ஃபேஷன் டிசைனிங் முடிச்சுட்டு, மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். என் சிஸ்டர் நதிஷா ஹேமமாலினி சிங்களப் படங்களில் நடிப்பாங்க. அவங்களோட ஷூட்டிங் போய்ப் பார்த்து எனக்கும் சினிமா ஆசை வந்து, இப்போ தமிழ் நடிகை ஆகிட்டேன்!'' என்கிறார் இந்த இலங்கை இளநீர்.

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

'மிஸ். சின்னத்திரை-2009' விருது வாங்கிய சந்தோஷத்தில் இருக்கிறார் 'சன் மியூஸிக்' அஞ்சனா. ''பி.காம்., முடிச் சிட்டு, கரஸ்ல எம்.பி.ஏ., பண்றேன். வீட்டுக்குள்ளே மட்டும் சேட்டை செய்வேன். வீட்டுக்குத் தெரியாமதான் சேனல் இன்டர்வியூவில் கலந்துக் கிட்டேன். அப்புறம், 'காம்பியரிங் ஓ.கே. அப்படியே சீரியல், சினிமான்னு போகக் கூடாது'ன்னு சத்தியம் வாங்கிட்டுதான் ஓ.கே. சொன்னாங்க. இப்போ 'மிஸ்.சின்னத்திரை' விருது வாங்கினதும் சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. வீட்ல கேட்காமலேயே எல்லாத்துக்கும் 'நோ' சொல்லிட்டேன். சத்தியத்தைக் காப்பாத்தணும்தானே?''- கலகலவெனச் சிரிக்கிறார் மிஸ்.பிராமிஸ்!

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'கலசம்' சீரியலுக்குச் சீக்கிரம் சுபம் விழலாமாம். அடுத்து 'தங்கம்' என்ற சீரியலுக்குத் தயாராகிக்கொண்டு இருக்கிறார் ஆன்ட்டி பியூட்டி. அந்த 'தங்கம்' மூலம் நடிகர் விஜயகுமார் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்கிறார். 'தங்க'த்தைத் தயாரிக்கவிருப்பது ரம்யாவே!

சன் டி.வி. தொடங்கியதில் இருந்து, இதுவரைசொந்த மாக சீரியல் தயாரித்தது இல்லை. ஆனால், இப்போது படத் தயாரிப்பைத் தொடர்ந்து, சீரியல் தயாரிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். முதல் சீரியலை இயக்கும் வாய்ப்பு சி.ஜே.பாஸ்கருக்கு!

டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி

அஷ்மிதா என்றால் அதிர்ஷ்டலட்சுமி என்று அர்த்தம். ஏசியாநெட் சேனல் காம்பியரான அஷ்மிதா, அவ்வப்போது வைர விளம்பரங்களிலும் டெலி ஃபிலிம்களிலும் தலை காட்டியிருக்கிறார். இப்போது கோலிவுட்டுக்கு காலிங்பெல் அடித்துக் காத்திருக்கிறது கிளி!

'பிளஸ் டூ முடிச்சுட்டுதான் சினிமாவுக்குப் போகணும்'னு அம்மா சொன்னாங்க. இப்போ பிளஸ் டூ ஓவர். சினிமாவுக்குப் போக க்ரீன் சிக்னல் கிடைச்சாச்சு. வெயிட்டிங் ஃபார் கோலிவுட்!'' அழகாகச் சிரிக்கிறார் அஷ்சு!

 
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி
-(ஷாட் பிரேக்)
டேக் ஓ.கே! - கிஷோர், டெலிசினி