Published:Updated:

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

Published:Updated:
எஸ்.கலீல்ராஜா
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''
"ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?"
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

''நல்லவேளை 'நான் அவன் இல்லை' முதல் பாகத்தில் ஜீவனை உயிரோடு விட்டுவெச்சோம். அதான் இப்ப இரண்டாவது பாகம் எடுக்க முடியுது. தமிழ்ப் படங்களைத் தமிழிலேயே ரீ-மேக் பண்ணும் டிரெண்டில் வெளிவந்த முதல் படம் 'நான் அவன் இல்லை'தான். இப்போ ஒரே கேரக்டரை இரண்டாவது பாகத்திலும் நடிக்கவைக்கும் டிரெண்டையும் தமிழ் சினிமாவில் ஆரம்பிச்சாச்சு!'' - தாடி தடவிச் சிரிக்கிறார் இயக்குநர் செல்வா.

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

''ஏன் இரண்டாவது பாகம்?''

''இந்த மாதிரி கதைக்குக் காலமே கிடையாது. ஏமாத்தும் ஆண்களும் ஏமாறும் பெண்களும் எல்லா தலைமுறையிலும் இருந்திருக்காங்க. எதிர்காலத் தலைமுறையிலும் இருப்பாங்க. இந்த பூனை - கிளி விளையாட்டுக்கு ஃபுல்ஸ்டாப்பே கிடையாது. அந்தத் தைரியம் தந்த தன்னம்பிக்கைதான் ஒரிஜினலை ரீ-மேக் பண்ணவெச்சது. அந்தப் படத்தில் ஜெமினி கணேசன் இறந்துபோறதா பாலசந்தர் சார் க்ளைமாக்ஸ் வெச்சிருந்தார். அதை ரீ-மேக் பண்ணும்போது, 'எதுக்கும் இருக்கட்டும்'னு ஜீவன் ஃபாரின்ல செட்டில் ஆகிறதா படத்தை

முடிச்சிருந்தோம். அப்போ இரண்டாம் பாகம் ஐடியாவெல்லாம் கிடையாது. ஆனா, படம் ஹிட் ஆனதும் 'அதே மாதிரி ஒரு படம் பண்ணிக் கொடுங்க'ன்னு நிறையப் பேர் கேட்டாங்க. 'அதே மாதிரி எதுக்கு... அதே படத்தையே எடுப்போம்'னு இரண்டாம் பாக வேலையை ஆரம்பிச்சிட்டோம்!''

''இரண்டாவது பாகத்தை மக்கள் ரசிப்பாங்கன்னு எப்படி நம்புறீங்க?''

''நிச்சயம் ரசிப்பாங்க. ஒரு ஹிட் படத்தின் ஹீரோ கேரக்டரை மக்கள் எப்பவும் ஞாபகத்தில் வெச்சிருப்பாங்க. ஜேம்ஸ்பாண்ட் என்கிற ஒரு கேரக்டரைவெச்சு 20 படங்களுக்கு மேலே எடுத்து ஹிட் கொடுத்திருக்காங்க. இன்னமும் நாடு கடந்து, மொழி கடந்து அந்த கேரக்டரை மக்கள் ரசிச்சுட்டுத்தானே இருக்காங்க. ஜேம்ஸ்பாண்ட் ஒரு சூப்பர் ஹீரோ. நம்மாளு ஒரு ஃபிராடு கேரக்டர். மத்தபடி ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை சங்கதிகளும் அப்படியே டிட்டோ.

ஃபாரின்ல செட்டில் ஆன ஜீவன் அங்கே ஐந்து பெண்களை ஏமாத்துறதுதான் இரண்டாவது பாகம். ஃபாரின் பரிச்சயம் இருக்கிற, அங்கேயே செட்டில் ஆன பெண்களுக்குப் படிப்பறிவும், அனுபவ அறிவும் அதிகமா இருக்கும். அவ்வளவு சுலபமா அவங்களை ஏமாத்த முடியாது. அதையும் மீறி ஜீவன் எப்படி அவங்களைத்

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

தன் வலையில் விழவைக்கிறார்னு புத்திசாலித்தனமான ட்ரீட்மென்ட்டில் சொல்லியிருக்கோம். படத்தில் ஜீவன் மட்டும்தான் அதே ஆள். ஐந்து ஹீரோயின்கள், லொகேஷன், ஸ்கிரீன்பிளே எல்லாமே புதுசு!''

''இரண்டாவது பாகத்திலும் கிளாமர் கிரைண்டர்லதான் மாவாட்டுவீங்களா?''

''கதைக்குத் தேவையான கிளாமர் இருக்கும். நடிகையாக லட்சுமிராய், மாடலாக ஸ்வேதா, தெலுங்குப் பெண்ணாக ஸ்ருதி, ஃபாரின்ல செட்டிலான வங்களா ரக்ஷனா. அவங்கவங்க வேலைக்கு ஏத்த காஸ்ட்யூம் கொடுத்திருக்கோம். பொதுவாகவே, ஃபாரின் பெண்கள் எப்பவும் உடை சுதந்திரத்தோடுதான் இருப்பாங்க. படத்தில் சங்கீதாவுக்கு மட்டும் கிளாமர் போர்ஷன் கிடையாது. அவங்க ஊனமுற்ற பெண்ணா வர்றாங்க. சங்கீதாவுக்கும் ஜீவனுக்குமான ரிலேஷன்தான் மொத்தப் படத்துக்குமான அச்சாணி. கிளாமர் தவிர, சென்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் எல்லாமே இருக்கும்!''

''ரீ-மேக் குதிரை சவாரிதான் உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கோ?''

''எனக்கு இது 23-வது படம் சார். எனக்குன்னு தனியா எந்த ஸ்டைலும் இல்லை.

''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''

நான் அதை விரும்பவும் இல்லை. 'தலைவாசல்', 'அமராவதி', 'புதையல்'னு நான் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒரு ஸ்டைல்லதான் இருக்கும். அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப சிக்கினதுதான் இந்த தமிழ் டு தமிழ் ரீ-மேக். கொஞ்ச நாள் இந்த ரீ-மேக் குதிரை மேலேயே சவாரி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். 'நான் அவன் இல்லை-2' முடிச்சுட்டு வினய், சினேகாவை வெச்சு 'நூற்றுக்கு நூறு' படத்தை ரீ-மேக் பண்ணப் போறேன். 'நான் அவன் இல்லை-2' கிளைமாக்ஸிலும் ஃபுல்ஸ்டாப் வைக்காம கமா வைக்கப்போறேன். ரசிகர்கள் வரவேற்பைப் பார்த்துட்டு மூன்றாம் பாகம் எடுப்பதைப் பத்தி யோசிக்கலாம். ஜீவன் திருந்தணுமா வேண்டாமான்னு முடிவெடுக்கும் பொறுப்பைத் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கையில் கொடுத்துட்டேன்!''

 
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''
''ஜீவன் திருந்தணுமா... வேண்டாமா?''