Published:Updated:

'என் அப்பா யார்?

'என் அப்பா யார்?

'என் அப்பா யார்?

'என் அப்பா யார்?

Published:Updated:
ம.கா.செந்தில்குமார்,படங்கள்: உசேன்
'என் அப்பா யார்?
'என் அப்பா யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
'என் அப்பா யார்?
'என் அப்பா யார்?'
'என் அப்பா யார்?
'என் அப்பா யார்?

லக நாடக மேடைகளின் ஹிட் ஹாட் நாட்டிய நாடகமான 'மம்மா மியா' கடந்த

'என் அப்பா யார்?

வாரம் சென்னையில் மேடையேறியது. ஜில் காஸ்ட்யூம், ஜிலீர் லைட்டிங், கிளாமர் டான்ஸ் என கலர்ஃபுல் கலக்கல் காக்டெயிலான நாடகத்தை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியது வரலட்சுமி சரத்குமார். 'மம்மா மியா' என்றால்?

ABBA என்ற சுவீடன் தேச இசைக் குழு 1970-களில் நடிப்பு, பாடல், நடனத்தை காக்டெயில் ஆக்கி கம்போஸ் செய்த மியூஸிக் ஆல்பம்தான் 'மம்மா மியா'. 'மை மம்' (எனது அம்மா) என்ற பெயர்தான் காலப் போக்கில் கண்டபடி உருமாறி மம்மா மியா என்றாகி விட்டது. உலகம் முழுக்கப் பெரும்பாலான நாடக மேடை களில் அரங்கேறி இருக்கும் மம்மா மியா ஹாலிவுட் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, பாக்ஸ் ஆபீஸ் ஹிட். 'மம்மா மியா'வின் உலகச் சுற்றுலாவில் இப்போ சென்னை ஸ்டாப்பிங்.

டிசம்பர் மாதங்களில் சங்கீதக் கச்சேரி கள் களைகட்டும் மியூஸிக் அகாடமிதான் நாடகத்துக்கான ஸ்பாட். தகதகக்கும் பட்டுச் சேலைகள் தட்டுப்பட்ட இடத்தில் மினி

'என் அப்பா யார்?

மிடி, ஸ்லீவ்லெஸ் ஜார்ஜெட், மைக்ரோ மிடி என குறை உடை நிறை அழகு தேவதைகள் கூட்டம். அறிமுக அசத்தலாகக் கால் விரல் நுனிகளில் நின்றபடி மேற்கத்திய பாணி நடனமாடி ரசிகர்களை ஆர்ப்பரிக்கவைத்தார் வரலட்சுமி. அவ்வப்போது ரோப் உபயத்தில் காற்றில் பறந்து, அந்தரத்தில் மிதந்து மொத்தக் கூட்டத்தையும் தாலாட்டி னார் வரூ.

'என் அப்பா யார்?' - இதுதான் மம்மா மியாவின் ஒன் லைன். 'அடுத்தவர் டைரியைப் படிப்பதுதானே தவறு. அம்மா அடுத்தவரா?' என்று சுய சமாதானம் செய்துகொண்டு, அம்மாவின் டைரியைப் படிக்கிறார் ஒரு மகள். அம்மாவுக்கு மூன்று காதலர்கள் என்கிறது டைரிக் குறிப்பு. (கதைக்களம் க்ரீக் தேசமென்பதால் இதற்கு மகளிடம் அதிர்ச்சி கிடையாது) ஆச்சர்யத்துடன் அம்மாவின் காதலர்களில் யார் தன் அப்பாவாக இருப்பார்

'என் அப்பா யார்?

என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள் மகள். தன் திருமண நிச்சயதார்த்தத்துக்கு 'அம்மா காதலர்களுக்கும்' அழைப்பு அனுப்புகிறாள். ஆடல் பாடல்களுக்கு நடுவே அப்பாவைக் கண்டுபிடித்து அம்மாவோடு சேர்ப்பதே கதை! ('அங்கேயும் உக்காந்து யோசிப்பாய்ங்க போல!')

ஆங்காங்கே டயலாக் காமெடி, குபீர் குரூப் டான்ஸ் என நாடகம் மொத்தமும் கலர்ஃபுல் கலாட்டாதான். சென்னை மம்மா மியாவின் தயாரிப்பாளரான வரலட்சுமிக்கு, நாடகத்தில் கெஸ்ட் ரோல். நாடகத்தின் இடையிடையே வரும் பாடல்களுக்குத் தலைகாட்டி டான்ஸ் ஆடிவிட்டுப் போனார். நாடகத்தின் முடிவில் விருப்பப்படும் பார்வையாளர்களை மேடைக்கு அழைத்து ஆடவைத்து மகிழ்ந்தார்கள்.

ஷோவை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் வியர்வை மின்னச் சிரித்துக்கொண்டு இருந்த வரலட்சுமியிடம் பேசினேன். ''இசை, நாடகம் ரெண்டுமே என் கனவு. பணம் சம்பாதிக்கிறதுக்காக இந்த ஷோ பண்ணலை. வித்தியாசமா ஏதாவது பண்ணனும்னு சாய்ஸ் தேடினப்போ சிக்கினதுதான் மம்மா மியா. சென்னை ரசிகர்களின் வரவேற்பு எங்களுக்கு செமத்தியான எனர்ஜி டானிக். அடுத்து பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புனேவில் மம்மா மியாவை அரங்கேற்றம் பண்ணப் போறோம். அப்புறம் துபாய், மலேசியாவில் சினிமா ஸ்டார்களோடு சேர்ந்து மம்மா மியா ஷோ பண்ண ஐடியா. அப்போதானே போட்ட பணத்தை எடுக்க முடியும்?'' - கணக்காகச் சிரிக்கிறார் தயாரிப்பாளர் வரலட்சுமி!

'என் அப்பா யார்?

 
'என் அப்பா யார்?
'என் அப்பா யார்?