Published:Updated:

விருது அருவி!

விருது அருவி!

விருது அருவி!

விருது அருவி!

Published:Updated:

22-07-09
ஆர்.சரண், படங்கள்: வி.செந்தில்குமார்.
விருது அருவி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருது அருவி!
விருது அருவி!
விருது அருவி!
விருது அருவி!
விருது அருவி!

'தடதட தமாக்கா!' என்பதற்கு அர்த்தம்... 'மீரா இசையருவி 2008 - தமிழ் இசை விருதுகள் விழா!

கடந்த சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டரங்கத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பித்த ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அதிர்ந்து அடங்கியது. 2008-ம் வருட தமிழ் சினிமாவின் சிறந்த இசை சங்கதிகளுக்கான விருது வழங்கும் விழாவின் ஹைலைட்ஸ்...

'சிலம்பாட்டம்' படத்துக்கு மட்டுமே ஆறு விருதுகள். உற்சாகத்தில் சிம்புவும் யுவனும் மேடை ஏறி கூட்டத்தினரைச் செமத்தியாக வார்ம்-அப் செய்தார்கள். 'வேர் இஸ் த பார்ட்டி'தான் 'கிரேஸி ஸாங்க் ஆஃப் த இயர்!'

ரைஸிங் ஸ்டார் விருதுக்குத் தன் பெயர் அறிவிக்கப்பட்டதும் ஆச்சர்யத்தில் சிம்பு அசந்துவிட்டார். '' 'வேர் இஸ் த பார்ட்டி' பாட்டோட டான்சுக்கு பிரைஸ் கிடைக்கும்னு நினைச்சா, அந்தப் பாட்டு எழுதினக்குக் கொடுத்து இருக்காங்க. சாமி சத்தியமா நான் இதை எதிர்பார்க்கலை!'' என்று சிலிர்த்தார் சிம்பு.

விருது அருவி!

மூன்று விருதுகளை எட்டிப் பிடித்த யுவன் சொன்ன விஷயம் செம டச்சிங். ''ஈழத்தில் இருந்து ஒரு சின்னப் பையன், 'போர் முனையில் உங்க மியூஸிக் மட்டும்தான் எனக்கு ஒரே ஆறுதல்'னு மெயில் அனுப்பி இருந்தான். 'ஒரு ரிப்ளை மெயில் அனுப்புனா சந்தோஷப்படுவேன்'னும் சொல்லி இருந்தான். இன்னிக்கு நான் தினமும் அவனுக்கு மெயில் அனுப்புறேன். ஆனா, அவன்கிட்டே இருந்துதான் பதிலே இல்லை!''

விருது அருவி!

'பெஸ்ட் ஹீரோ இன் எ ஸாங்' பிரிவில் விருது வென்றது 'தசாவதாரம்' கமல். அவர் சார்பாக வந்திருந்த ஸ்ருதி கமல் அழகுத் தமிழில், ''எல்லோருக்கும் வணக்கம்!'' என்று சொல்ல, ''அடியே கொல்லுதே!'' என்று பதில் வணக்கம் வைத்தார்கள் இளசுகள். (அதே ஸ்ருதி 'அடியே கொல்லுதே' பாடலுக்காக 'சிறந்த அறிமுகப் பாடகியாக இரண்டாவது தடவையும் மேடை ஏறினார்!)

'கண்கள் இரண்டால்...' பாடலில் புதுக் குரலாக இணைந்து பாடிய பெள்ளிராஜுக்கும் தீபா மரியத்துக்கும் 'சிறந்த அறிமுகப் பாடகர்கள்' விருது.

விருது அருவி!

அதே பாடல் 'சிறந்த பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட, ஜேம்ஸ் வசந்தன் கண்களில் ஆனந்தக் கண்ணீர். 'சுப்ரமணியபுரம்' டீமையே மேடைக்கு அழைத்து ''இது டீமுக்கான விருது!'' என்று பெருமிதப்பட்டார்.

'சிறந்த குத்துப் பாட்டுக்கான விருது' 'கத்தாழக் கண்ணால...' இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு விருது வாங்க வர, ''அது நம்ம ஃபேவரைட் பாட்டாச்சே!'' என்று குத்தாட்டம் போட்டு பட்டையைக் கிளப்பியது தேவிஸ்ரீ பிரசாத்.

'நலந்தானா... நலந்தானா...' பாடலுக்குச் சிறப்பாக நடனம் அமைத்ததற்காக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பெயர் அறிவிக்கப் பட்டது. விபத்தில் சிக்கியதால் நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியோடு ராபர்ட் மெள்ள மேடையேற, சிம்பு ஓடி வந்து அவருக்கு உதவினார். ''வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதல் விருது இது.

விருது அருவி!

அதுக்குக் காரணம் என் நண்பன்தான்!'' என்று சிம்புவைக் கட்டிக்கொண்டார் ராபர்ட்.

'சிறந்த இசையமைப்பாள'ரை அறிவிக்க மேடைக்கு வந்தார் பார்த்திபன். ''ஒரு படம் ஓடுறதுக்கு காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனா, 'வாரணம் ஆயிரம்' ஹிட் ஆனதுக்கு முக்கிய காரணம் ஹாரிஸ் ஜெயராஜ்தான். பாருங்க... பொண்டாட்டிக்கு மல்லிகைப் பூ வாங்கிட்டுப் போற மாதிரி பொசுக் பொசுக்னு மேடைக்கு வந்து எத்தனை ஷீல்டுகள் வாங்கிட்டுப் போறார்னு!'' என்று லந்து பந்து வீசினார். '' 'சுப்ரமணியபுரம்' டீமே மேடைக்கு

விருது அருவி!

வந்து நின்னாங்க. ஆனா, 'வாரணம் ஆயிரம்' டீம்ல இப்போ இங்கே நான் மட்டும்தான் இருக்கேன்!'' என்றார் ஹாரிஸ் கொஞ்சம் வருத்தத்தோடு.

அவரைச் சமாதானப்படுத்தும்விதமாகப் பேசினார் பார்த்திபன். ''ஹாரிஸ் ரொம்ப மென்மையான ஆளு. 'நோ' சொல்றதையே நோகாமச் சொல்வார். ஏன்னா, என்னோட சேர்ந்து படம் பண்ண பிடி கொடுக்க மாட்டேங்கிறார். ஆனாலும், என்னோட எனர்ஜி ட்ரிங்கும் லிக்கர் ட்ரிங்கும் 'வாரணம் ஆயிரம்' பாடல்கள்தான். ரெண்டு ரவுண்டு அந்தப் பாடல்களைக் கேட்டாலே எனக்குப் போதை ஏறும். இன்னிக்கு சனிக்கிழமை வேற... பசங்க பார்ட்டி மூட்ல இருப்பாங்க. நிகழ்ச்சி முடிஞ்சதும் நாலு ரவுண்டு 'வாரணம் ஆயிரம்' பாட்டு கேட்டுட்டு பத்திரமா வீட்டுக்கு போங்கப்பா!'' என்று கிட்டத்தட்ட நடுநிசியில் பிரியாவிடை கொடுக்க, கலகலப்பாகவே கலைந்து சென்றனர் இசை ரசிகர்கள்!

 
விருது அருவி!
விருது அருவி!