Published:Updated:

''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

Published:Updated:
எம்.குணா
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"கடிக்கிறான்... கடிக்கிறான்..."
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா
மீனா கல்யாண கலாட்டா
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

''ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கோயில் கோயிலா அலைஞ்சு திரிஞ்சு முட்டி நோக விழுந்து விழுந்து வேண்டிக்கிட்ட திருமணஞ்சேரி பெருமாளும், காளஹஸ்தி சிவனும் கைவிடலை!'' - மீனாவின் கழுத்தில் தாலி ஏறியதும் அவரது தாயார் ராஜமல்லிகா இந்த வார்த்தைகளைத்தான் உதிர்த்திருப்பார். அந்த அளவுக்கு மீனாவுக்கு வரன் பார்த்து மணம் முடிப்பதற்குள் தவித்துவிட்டார் அவரின் அம்மா.

தனியார் மண்டபத்தில் அதிகாலையில் திருமணம் முடித்துவிட்டு, ஏழுமலையானைத் தரிசிப்பதாகத் திட்டம்.

'நான் இந்த ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் ஆயிட்டேன். என்னையும் ரவுடியா ஏத்துக்குங்க!' என்று வடிவேலு சலம்புவது போல, கல்யாணத்துக்கு வந்து இருந்தவர்களிடம், 'நான்தான் மீனாவோட ஹஸ்பெண்ட்!' என்று சுயஅறிமுகம் கொடுத்துக்கொண்டே இருந்தார் மாப்பிள்ளை வித்யாசாகர். ஏற்கெனவே கமிட் ஆன டி.வி. சீரியல்களைக் கல்யாணத்துக்குப் பிறகும் நடித்து முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால், கல்யாணத்துக்குப் பிறகும் தன்னை நடிக்க அனுமதிக்கும் கணவனுக்காகக் காத்திருந்தார் மீனா. 'நோ பிராப்ளம். சீரியல் வேலைகளை எல்லாம் நிதானமா முடிக்கலாம். கல்யாணத்தை இப்பவே வெச்சுக்கலாம்!' என்று பெங்களூரு வித்யாசாகர் ஓ.கே. சொல்லவும்தான் அவரை டிக் அடித்திருக்கிறார் மீனா.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டு இருந்தாலும், மீனாவின் கல்யாணத்துக்கு வந்து இருந்த விருந்தினர்கள் நூற்றுக்குள் அடங்கிவிடுவர்.(சங்கவி மட்டுமே அறிந்த முகம்!)

உள்ளூரும் வெளியூருமாகக் குவிந்த மீடியா ஆட்களைக் கட்டுப்படுத்துவதில்தான் செக்யூரிட்டி ஆட்களின் பலப் பிரயோகம் முழுமையும் செலவானது.

திருமணம் முடிந்து வெளியே வரும்போது படம் பிடித்துக்கொள்ளலாம் என்று மீடியா ஆட்கள் பொறுமையாகத்தான் காத்திருந்தார்கள். ஆனால், தம்பதியினர் வெளியே வந்தபோது அவர்களை முழுக்க மறைத்துக்கொண்டு நின்றனர் செக்யூரிட்டி படையினர். செக்யூரிட்டிகளைத் தாண்டி ஒரு போட்டோகிராபரின் கேமரா லென்ஸ் மீனாவை போகஸ் செய்ய, ஒரு செக்யூரிட்டி என்ன செய்வது என்று தெரியாமல் அந்த போட்டோகிராபரின் கையைக் கடித்துவிட்டார். ''கடிக்கிறான்... கடிக்கிறான்... ஏய்! இந்தப் பயலுக ரொம்ப லிமிட் தாண்டுறாங்கப்பா!'' என்று அலறியபடியே கையில் இருந்த கேமராவைக் கீழே தவறவிட்டார். அது கீழே விழுந்து நொறுங்கியது.

உஷ்ணமான மீடியா ஆட்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்க, சமரசங்களுக்குப் பிறகு சேதமான கேமராவுக்கான தொகையைப் போலீஸார் பெற்றுக்கொடுத்தனர்.

''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா

தகவல் தெரிந்ததும், மீனா கவலைப்பட்டு இருக்கிறார். 'அட விடும்மா... திருமலையில கல்யாணம் நடக்கிறதே விசேஷம். அப்போ பத்திரிகைக்காரங்ககூட சண்டை வந்தா, டபுள் விசேஷம். ஏன்னா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருப்பதியில கல்யாணம் பண்ணும்போது இதே மாதிரிதான் கலாட்டா நடந்துச்சு. ஆனா, அவங்க இதுவரை எந்த சண்டை சச்சரவும் இல்லாம எவ்வளவு சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு இருக்காங்க. அந்த சென்டிமென்ட் உனக்கும் செட் ஆகும்!'' என்று ஒரு சினிமா உறவு ஆறுதல் சொல்ல, மீனா முகத்தில் மேக்கப் இல்லாத உண்மையான வெட்கச் சிவப்பு!

 
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா
''கடிக்கிறான்... கடிக்கிறான்...'' மீனா கல்யாண கலாட்டா