''டைட்டில் பளிச்சுனு நல்லா இருக்கே...''
''தேங்க்ஸ்... காலம் மாற மாற எல்லா விஷயத்துக்கும் புதுசா ஐடியா பிடிக்கணும். இந்த விதி, காதலைச் சொல்றதில் இருந்து திருட்டுத் தொழில் வரைக்கும் பொருந்தும். பாண்டி, ஓணான், மங்கா, மாரின்னு நாலு திருட்டுப் பசங்க. அஞ்சு விரல் மாதிரி எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க. பருவ வயசும் இளம் ரத்தமும் எப்பவும் அவங்களைத் துள்ளலும் துடிப்புமா வெச்சிருக்கு. பண்ற விஷயம் தப்பா, ரைட்டான்னு தெரியாம அலைபாயுற மனசு. கோழி திருடுற பசங்களைக்கொலை பண்ணவைக்குது சூழல். ஒரு கட்டத்துக்கு மேலே சொந்த ஊர்ல வாழ முடியாம உயிர் பிழைக்கஓடுறாங்க. திருடன் கையில் வீட்டுச் சாவி கொடுத்த மாதிரி அவங்களோடு சேர்ந்து சுத்துறா ஒரு பொண்ணு. அஞ்சு பேரும் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வை மாத்தி யோசிச்சு தீர்க்கிறதுதான் கதை!''
'' 'ஒரு கல்லூரியின் கதை'க்கு அடுத்து ரொம்ப இடைவெளி எடுத்துக்கிட்டீங்களே?''
''மாத்தி யோசிக்க நேரம் எடுத்துக்கிட்டேன். 'ஒரு கல்லூரியின் கதை' யில் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்.அந்தப் படத்துக்குத் தேவையான நடிப்பை வாங்கணும்னு ஆர்யாவை ரொம்பவே டார்ச்சர் பண்ணிட்டேன். ஒரு நடிகனைச் சுதந்திரமா விட்டாதான் அவங்ககிட்டே இருந்து நமக்குத் தேவையான விஷயங்களை வாங்க முடியும்னு லேட்டாதான் எனக்குப் புரிஞ்சது. ஒரு நண்பனாக 'அங்காடித் தெரு'வில் வசந்த பாலனோடும், 'யோகி'யில் அமீரோடும் வேலை பார்த்தேன். திரும்ப வும் காதல் கத்திரிக்காய்னு படம் எடுக்க மனசு வரலை. வித்தியாசமா திகுதிகுன்னு பத்திக்கிற மாதிரி கதை வேணும்னு காத்திருந்து யோசிச்ச கதை தான் 'மாத்தி யோசி'!''
'வேற என்ன விசேஷம் படத்துல?''
''படத்தில் சென்னையைக் கிட்டத்தட்ட ஆயிரம் வித்தியாசமான கோணங்களில் ஸ்டில்ஸ்களாக காட்டப் போறோம். ஸ்பென்சர், சென்ட்ரல் ஸ்டேஷன் எல்லாமே நீங்க யோசிக் காத வித்தியாசமான கோணத்தில் இருக்கும். அஞ்சு பசங்களும் பார்க்குறதுக்கு மதுரைப் பக்கத்துப் பயலுக மாதிரி இருந்தாலும் எல்லா ருமே பக்கா பீட்டர் பார்ட்டிங்க. அக்மார்க் சென்னை வாசிகள். 'சூட்டிங் ஆரம்பிச்சதும் |