Published:Updated:

சினிமா விமர்சனம்: வாமனன்

சினிமா விமர்சனம்: வாமனன்

சினிமா விமர்சனம்: வாமனன்
சினிமா விமர்சனம்: வாமனன்
சினிமா விமர்சனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சினிமா விமர்சனம்: வாமனன்
வாமனன்
சினிமா விமர்சனம்: வாமனன்
சினிமா விமர்சனம்: வாமனன்

ரு சாதாரண இளைஞன்... அசாதாரணச் சூழ்நிலை... அப்புறம் என்ன... எடுக்கும் அவதாரம்தான் வாமனன்!

நடிகனாகும் ஆசையில் சென் னைக்கு வந்து கண்ணில் படும் விநோத மனிதர்களின் மேன ரிசங்களைப் படித்துத் திரிகிறார் ஜெய். மாடல் லட்சுமிராய் நடிக்கும் ஒரு விளம்பர சூட்டிங்கின்போது யதேச்சையாக கேமராவில் பதிவா கிறது ஓர் அரசியல் கொலை. போலீஸ் கமிஷனருக்குத் தகவல் சொல்ல முற்படும் இயக்குநரும் கொலையாகிறார். அடுத்த சில தினங்களிலேயே லட்சுமிராயும் கொல்லப்பட, பழி விழுவதோ ஜெய் மீது. போலீஸ் ஒரு பக்கம் துரத்த, வில்லன்கள் மறுபக்கம் துரத்த... அந்த மகா மெகா கும்பல் களிடம் இருந்து ஜெய் எப்படித் தப்புகிறார் என்பது கிளை மேக்ஸ்.

விறுவிறு திரைக்கதை காரண மாக முன்பாதியில் ரேஸ் கார் வேகம் காட்டுகிறார் அறிமுக இயக் குநர் அஹமது. ஆனால், பின்பாதி தொடங்கியதுமே பெட்ரோல் தீர்ந்து டிராக்கிலிருந்து விலகி தட்டுத் தடுமாறுகிறது படம்.

'தளபதி'கள் பாணியில் பில்ட் -அப் பாடலுடன் என்ட்ரி கொடுத் தாலும், அதற்குப் பிறகு ரொம்பவே அடக்கி வாசித்து சாந்தப்படுத்துகிறார் ஜெய். ஹீரோவாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொள்ளும்போதும், மப்பில் சந்தானத்திடம் தன் காதலியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டச் சொல்லும் இடங்களிலும் ஜெய் ஹோ! ஆக்ரோஷம் பொங்க வேண்டிய ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அவரிடம் தேவை இன்னும் பல டிகிரி உஷ்ணம். (அதனால்தானோ என்னவோ அதற்கு இடம் கொடுக்காமல் அவரை ஓட விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்!)

முன்பாதி காமெடி கதகளி மூலம் அபாரமாக ஸ்கோர் செய்கிறது சந்தானம் - ஊர்வசி பார்ட்னர்ஷிப். ஜெய்யின் சதாய்ப்பு களுக்கு எல்லாம் செவி சாய்க்கும் பரிதாப நண்பனாகவும் அப்ளாஸ் அள்ளுகிறார் சந்தானம். (ஆச்சர் யமாக டபுள் மீனிங் டயலாக் இல்லாமல்!)

லட்சுமி ராய் மாடல் என்பதால் அவர் நீச்சலடிக்கும் காட்சிகள் பக்கா. ஆனால், சென்சிட்டிவ்வான ஒரு மரணத்தைப் பற்றிய தகவல் தெரிந்துகொண்டு, அதை ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரி யிடம் தெரிவிக்க முடியாமல் திண்டாடுவதும், அதற்குள்ளாகவே அவர் கொலை செய்யப்படுவதும் மெகா லாஜிக் பொத்தல். (இத்த னைக்கும் பரபரப்பான ஜர்னலிஸ்ட் நண்பரும் இருக்கிறார்!)

அறிமுக நாயகி பிரியா புதுமை இல்லாத பதுமை. ஆடல், பாடல், அழுகையுடன் ஒதுங்கிக்கொள் கிறார். 'ஏதோ பெரிதாகத் திருப்பம் ஏற்படுத்தப் போகிறார்!' என்று எதிர்பார்க்கவைத்துக்கொண்டே இருக்கும் ரஹ்மான் கேரக்டரும் இறுதியில் புஸ் ஆகிறது.

'ரோட்டுல பார்க்குற சாதாரண மனுஷங்ககிட்ட இருந்து நடிப்பு கத்துக்கணும்!' என்று போகிற போக்கில் சந்தானம் சொல்லும் வார்த்தைகளை கொலைப் பழிக்கு ஆளாகும் அளவுக்கா சின்சியராகக் கடைபிடிப்பார் ஜெய்?

'இணை கமிஷனராக இருந்தவர் கமிஷனர் ஆவது எப்படி?' என்று எழும் கேள்வியை மறந்தாலும் ஒரு சிட்டி கமிஷனரை இந்தளவு கலாட்டாவாகக் காய்ச்சி இருப்பது டெரர் காமெடி.

சினிமா விமர்சனம்: வாமனன்

கிளைமாக்ஸில் ஜெய் 'அந்த டேப்பை இவங்களும் கேட்குறாங்க' என்று பொத் தாம்பொதுவாகச் சொல்லி, பீகார் கடத்தல்காரர்களோடு உள்ளூர் வில்லன்களைக் கோத்து விடும் இடத்திலும் ரஹ்மானைப் பற்றியே பற்றவைக்கும் இடத்திலும் 'அட' போட வைக்கிறது திருப்பம். ஆனால், அட்டைப் பெட்டிகளாக அடுக்கப்பட்டு இருக்கும் கோடவுனில் 'திருடன்-போலீஸ்' விளையாட்டு கணக்காக டுமீல் டுமீல் என இரு தரப்பும் சுட்டுக் கொண்டு மடியும்போது, சீரியஸ் படமா, சிரிப்புப் படமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.

படத்துக்கு கலர்ஃபுல் ரிச்னெஸ் கொடுக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா. 'ஏதோ செய்கிறாய்', 'ஒரு தேவதை' பாடல்களில் யுவன்ஷங்கர் ராஜா ஈர்க்கிறார்.

'நான் நடிச்சுட்டு இருக்குறதுல 'வாமனன்' மட்டும்தான் ஹிட் ஆகும்!' என்று ஜெய் சொன்னதாக ஒரு சர்ச்சை எழுந்தது. உஷாரா இருங்க பாஸ்!

-விகடன்
விமர்சனக் குழு

 
சினிமா விமர்சனம்: வாமனன்
சினிமா விமர்சனம்: வாமனன்