Published:Updated:

பியா... ஹேப்பியா!

பியா... ஹேப்பியா!

பியா... ஹேப்பியா!

பியா... ஹேப்பியா!

Published:Updated:
மை.பாரதிராஜா, படங்கள்: சு.குமரேசன்
பியா... ஹேப்பியா!
பியா... ஹேப்பியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பியா... ஹேப்பியா!
பியா... ஹேப்பியா!
பியா... ஹேப்பியா!

'

பியா... ஹேப்பியா!

'எப்படி இருக்கீங்க பியா?''

''ரொம்ப ஹேப்பியா!''

'பொய் சொல்லப் போறோம்' என்று ஜாலி லூட்டி அடித்து, 'பலே பாண்டியா' என்று ஆடிக் கொண்டு இருந்தவர், இப்போ 'கோவா' படத்துக்காக கோவா சென்று வந்திருக்கிறார்.

''நீங்க எப்பவாவது பேயைப் பார்த்திருக்கீங்களா? நான் பாத்திருக்கேன்!'' என்றுஅவரா கவே திகில் ஓப்பனிங்கோடு ஆரம்பித்தார்.

''ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டிக்குப் பக்கத்துல இருக்குற ஹோட்டலோட 419-ம் நம்பர் ரூம். நல்லாத் தூங்கிட்டு இருந்தேன். ராத்திரி ஒரு மணி இருக்கும். திடீர்னு பாத்ரூம் குழாய்ல இருந்து 'சடசட'ன்னு தண்ணி கொட்டுற சத்தம்.கதவைத் திறந்து பார்த்தா, சத்தம் கேட்கலை. ஆனா, காலி பக்கெட் முழுக்கத் தண்ணி இருக்கு. ஒண்ணும் இருக்காதுன்னு தூங்கிட்டேன். ஆனா, அடுத்த அரை மணி நேரத்தில் திரும்பவும் தண்ணி கொட்டுற சத்தம். 'ரூம்ல ஏதோ பேய் இருக்கு'ன்னு ஹவுஸ் கீப்பிங்ல புகார் கொடுத்தா, சிரிச்சுட்டே வந்து பைப் லைனைச் சரிபண்ணிட்டுப் போனாங்க. ஆனா, மறுபடியும் தண்ணி கொட்டுற சத்தம். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு, 'ஹலோ பேய்! நீ இந்த ரூம்ல இருக்கிறதைப் பத்தி எனக்கு ஒண்ணுமில்லை. ஆனா, என்னைப் பயமுறுத்தாதே... ப்ளீஸ்'னு கேட்டுக்கிட்டேன். அப்புறம் தண்ணி கொட்டுற சத்தம் கேட்கலை.. நல்ல பேய்ல. என்ன சொல்றீங்க?''

''நல்ல கதை... புரொடியூஸர் ரூம் போட்டுக் கொடுத்தா... இப்படித்தான் உக்காந்து யோசிக்கச் சொல்லும். 'கோவா' படத்தோட பிகினி ஸ்டில்ஸ் குடுங்க.. கிளம்பிட்டே இருக்கோம்...''

''டைரக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க. அப்பதான் கொடுப்பேன்! (அடி ஜில்லி!) 'ஏகன்' படத்துல நடிச்சுட்டு இருக்கும்போது, அஜீத் சார்தான் எனக்கு வெங்கட் பிரபுவை அறிமுகப்படுத்தினார். அப்புறமா அவர் 'கோவா' வில் நடிக்க எனக்கு சான்ஸ் குடுத்துட்டு, 'எப்பவும் எப்படி லூஸ் மாதிரி நடந்துப்பீங்களோ, அப்படியே இதிலும் இருங்க. அதுதான் உங்க கேரக்டருக்கு ஹோம்வொர்க்!'னு சொல்லிட்டாரு.
படத்துல கோவாவில் வாழ்கிற பொண்ணு கேரக்டர் எனக்கு. ரெண்டு நாள்தான் சூட்டிங் போய்ட்டு வந்திருக்கேன். ஸோ... இதுக்கு மேல என்கிட்ட எதுவும் நியூஸ் கிடையாதே!''

''விடுங்க... உங்க பாய் ஃப்ரெண்ட்ஸ் பத்திச் சொல்லுங்க?''

''ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். நான் ப்ளஸ் டூ படிச்சப்போ, என்கிட்டே ஒரு பையன் லவ் ப்ரபோஸ் பண்ணணும்னு சொன்னான். 'கிளாஸ் முடிஞ்சதும் ஈவ்னிங் காபி ஷாப் வா'ன்னு சொன்னேன். வந்தான். நிறையப் பேசினோம். எட்டரை மணிக்கு 'நாம நல்ல ஃப்ரெண்ட்ஸா மட்டும் இருப்போம்'னு சொல்லிட்டு, காபிக்குக் காசு கொடுத்துட்டுக் கிளம்பிட்டான். அதுக்கப்புறம் அவன் என் கண்ணுல தட்டுப்படவே இல்லை. ஆங்... என்ன கேட்டீங்க?''

பியா... ஹேப்பியா!

''விடுங்க... உங்க வாழ்க்கையில உங்களுக்கு உதவுன நாலு நல்லவங்க பத்திச் சொல்லுங்க?''

''அதுக்கு முன்னாடி இதைக் கேளுங்க. இந்த 'சென்னை-28' டீம் பசங்க பயங்கர கலாட்டா பசங்கப்பா.

ஒரு நாள் எனக்கு வெங்கட் பிரபு போன் பண்ணி, 'ஹோட்டல்ல வெயிட் பண்ணு. நானும் ஜெய்யும் மட்டும் வர்றோம். ரகசியம். மத்த பசங்ககிட்ட சொல்லாதே'ன்னு சொன்னார். ஒரு மணி நேரம் கழிச்சு வித்தியாசமான கெட்-அப்ல தலைமுடியை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஏலியன் மாதிரிஒருத்தர் கதவைத் தட்டுனாரு.

நான் பயந்துட்டே கதவைத் தொறந்தா, 'ஐயம் பிரேம்ஜி. பை தி வே வெங்கட் என்னை இங்கே வரக் கூடாதுன்னு சொல்லியிருந்தான். அதான் வந்துட்டேன்'னு இன்ட்ரோ ஆகுறார். அப்படியே வரிசையா வெங்கட், ஜெய், அஜய்னு 'சென்னை-28' டீம் மொத்தமும் வந்து என்னைக் கலாய்ச்சுக் காலி பண்ணிட்டாங்க. நீங்க என்ன நல்லவங்க பத்திக் கேட்டீங்கள்ல!''

''விடுங்க... நாங்க கிளம்புறோம்... இது ஆவுறதில்லை!''

பியா... ஹேப்பியா!

 
பியா... ஹேப்பியா!
பியா... ஹேப்பியா!