Published:Updated:

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

Published:Updated:
நா.கதிர்வேலன் .
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''
"அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!"
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

''நல்ல கதைகளும் புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருக் கிறதுதான் என்னை மாதிரியானவங்களுக்கு மூலதனம். இப்போ என்னோட டைம்'' சமீரா டப்பிங் தியேட்டருக்கு வெளியே கை குலுக்குகிறார் பன்னீர்செல்வம். 'ரேனிகுண்டா' படத்தின் ரஷ் பார்த்தால், அவர் மீதான மரியாதை அதிகமாகிறது.

''சினிமாவில் நான் அப்படிக் கஷ்டப்பட்டேன்... இப்படிக் கஷ்டப்பட்டேன்னு ஆரம்பிக்கிறதில் எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவுக்கும் எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. விதவிதமான கதைகளோடு வேற வேற இடங்கள்ல திரிஞ்சுருக்கேன். 'என்னடா, இப்பிடிப் பந்தாடுறாங்க?'ன்னு அலைஞ்சிருக்கேன். இப்போதான் தோணுது... எல்லாமே 'ரேனிகுண்டா'வுக்காகத்தான். இப்படி ஒரு கதை, இப்படி ஒரு டீம்னு வந்து நிக்கிறப்போ நடந்து வந்ததெல்லாம் கரெக்ட்னு புரியுது.

ஒரு குழந்தை வயித்துல இருக்கும்போது அந்த அம்மா சந்தோஷமா இருக்கணும். நல்ல மியூஸிக் கேட்கணும். சும்மா அந்தக் குழந்தைகிட்ட ஏதாவது பேசிட்டிருக்கணும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. கருவுல இருக்கிற பிள்ளைக்கே அவ்வளவு நல்ல சூழ்நிலை தேவைப்படுதுன்னா, தெருவுல நிக்கிற பிள்ளைகளுக்கு? அதைத்தான் இந்தப் படம் பேசுது.

இன்னிக்கு இருக்கிற இளைஞர்களை நீங்க ஏதோ ஒரு விதத்துல நிர்க்கதியா நிறுத்தினீங்கன்னா, அவன் வேற மாதிரி வெளிப்படுவான். அப்படித் தடம் மாறிப் போற இளைஞர்களோட கதை இது. எங்கேயோ ஒரு ஊர்ல லாட்ஜ் போட்டுத் தங்கி, முன்ன பின்ன தெரியாத ஒருத்தரைக் கழுத்தறுத்து வீசிட்டுப் போற கூலிப் படையில இருக்கிற நிறைய பேர் 18, 20 வயசுப் பசங்க. நினைக்கவே அதிர்ச்சியா இருக்கு. இந்த வயசுல எங்கேயிருந்து வந்துச்சு உசுரெடுக்கிற வெறி..? எது இவங்களை இப்படித் திருப்பியது? வெறும் 2,000, 3,000 ரூபாய்க்குக் கொலை பண்ற கொடூரத்துக்குள்ளே இவங்க எப்படிப் போனாங்கன்னு அவங்க

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

வாழ்க்கைக்குள்ளே போக ஆசைப்பட்ட பயணம்தான் 'ரேனிகுண்டா'. இரக்கம் இல்லாத ஓர் உலகம், ஈரத்துக்கு ஏங்கும் சில இதயங்கள்னு இது நீங்க நிச்சயம் அறிந்து உணர வேண்டிய பயணம்.''

''இப்படிப் படம் பண்றது இப்போ டிரெண்டா?

''வெறுமனே ஷாக் தர்றது மட்டுமில்லை என் நோக்கம். இந்த உலகத்தோட நிரந்தரத் தேவை மனிதமும் காதலும்தான்னு சொல்ல வர்றேன். தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு ஓடிப் போற அஞ்சு பசங்க, வழியில ஆந்திரா ரேனிகுண்டாவுல தங்குறாங்க. அங்க நடக்கிற சம்பவங்களும்... ஒரு காதலும்தான் படம். அன்பு மாத்தாத மனுஷனே இல்லை. அன்பே மாத்தலைன்னா அவன் மனுஷனே இல்லை.

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

'மழை பெய்யும்போது
நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ
நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம், யார் சொல்வதோ'
னு யுகபாரதி இழைச்சிருக்கார். இசைக்கு கணேஷ் ராகவேந்திரா, கேமராவுக்கு சக்தினு புதுசா புத்துணர்ச்சியா ஒரு டீம் அமைச்சதுதான் என் முதல் பலம்.''

''எல்லாம் புதுப் பசங்க போல...''

''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''

''ஆமா. ஜானி, நிஜாந்த், தமிழ், சந்திப், தீப்பெட்டி கணேசன்னு ஐந்து அருமையான பசங்க. சனுஜான்னு பிரமாதமான பொண்ணு. என்னைப் பொறுத்த வரைக்கும் முகங்கள் முக்கியம் இல்லை. கதைதான் பாஸ். கதையையும் கமர்ஷியலையும் அழகா கோக்கிற வித்தை நான் லிங்குசாமி சார்ட்ட கத்துக்கிட்டது. உண்மையும் உணர்வும் சேர்ந்தா நிச்சயம் ஜெயிக்கும்.''

அழுத்தமாகக் கை குலுக்குகிறார் பன்னீர்செல்வம்!

 
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''
''அன்பு மாத்தாத மனுஷனே இல்லை!''