'' 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துல அப்படி லவ்லியான கேரக்டர் எனக்கு. பொதுவா, சிம்புன்னா அதிகமாப் பேசுவான். ஆட்டம் ஜாஸ்தி. பொண்ணுங்களுக்கு அவ்வளவாப் பிடிக்காதுன்னு பேசினவங்களுக்கு எல்லாம் இந்தப் படம்தான் என்னோட பதில். இனிமே உங்களுக்குத்தான் கஷ்டம்... எக்குத்தப்பா ஏதாவது பேச வெச்சு தம்பியை மாட்டி விட்ர லாம்னு இனிமே ஹிந்திப் பிரசார சபா தெருப் பக்கம் வந்துடாதீங்க'' - தலை கோதிச் சிரிக்கிறார்.
''கௌதம் மேனன் மாதிரி ஸ்டைலிஷான டைரக்டரோட வேலை பார்க்கிற அனுபவம் எப்படி இருக்கு?''
''சூப்பர்!
அவரை நம்பி நம்மளை முழுசாக் குடுத்துடலாம். டைரக்டர்கிட்டே சந்தேகம் இருந்தால், நமக்கும் பதற்றமாகும். என்ன... ஏதுன்னு கேட்கத் தோணும். இவர் தெளிவா இருக்கார். ஒரு முடிவு எடுத்தா... அவ்வளவுதான். வேற கருத்துக்கே இடம் இல்லை. நாம் கேமராவுக்கு முன்னாடி போய் நின்னா போதும். நாமளே எதிர் பார்க்காத எக்ஸ்பிரஷன்ஸ் வாங்கி டுறார். என்னையும் த்ரிஷாவையும் ரொம்ப ஈஸி பண்ணிட்டார். படம் பார்த்தா எங்க கெமிஸ்ட்ரி பளிச்னு தெரியும். தேங்ஸ் டு கௌதம்!''
''இந்தப் படம் வந்தா இமேஜே மாறிடும்னு சொல்றீங்க... அப்படி என்ன படம்?''
''ஃப்ரெஷ்ஷான ஒரு காதல் கதை. நாம் பார்க்கிற, பரவசம் ஆகிற, அனுபவிக்கிற ஒரு காதலை கௌதம் அவரோட ஸ்டைலில் தந்து இருக்கார். படத்துல நான் சினிமா அசிஸ்டென்ட் டைரக்டரா வர்றேன். ஆனா, சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம்தான் வரும். ஃப்ரேம் பை ஃப்ரேம்த்ரிஷா வுக்கும் எனக்குமான லவ்தான். படத்துல நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொல்றாங்க. யோசிச்சுப் பார்த்தா அது மனசு, வேலை எல்லாம் ரொம்பத் தெளிவா இருக்கிறதால வந்த அழகு. எல்லாப் பொண்ணுங்களுக்கும் ரொம்பப் பிடிச்ச மாதிரி, ஒரு லவ்வர்னா இப்படித்தான் இருக்கணும்னு நினைக்கவைக்கி றவனா வர்றேன். அதனால்தான் சொல்றேன், என் மேலே குத்தப்பட்டு இருக்கிற 'கெட்டவன்' இமேஜை இந்தப் படம் க்ளீன்போல் டாக்கும்!''
''சந்தோஷம்! முதல்முறையா ஏ.ஆர்.ரஹ்மான் காம்பினேஷன்... எப்படி இருக்கு?''
|