விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

டேக் ஓ.கே!

டேக் ஓ.கே!


08-07-09
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!
 
கிஷோர், டெலிசினி
டேக் ஓ.கே!
டேக் ஓ.கே!

'ஆயிரத்தில் ஒருவன்' படம் வெளிவருவதற்கு முன்னரே, அதில் நடித்து இருக்கும் ஆண்ட்ரியா வாழ்த்து மழையில் நனைந்துகொண்டு இருக்கிறார். "படத்தில் நான் பாடியிருக்கும் மூணு பாடல்களுக்குத்தான் இத்தனை பாராட்டும். நடிக்கிறது என் ஹாபி மட்டும்தான். சின்ன வயசுலயே பியானோ வாசிக்கப் பழகியிருந்தேன். நான் பியானோவும் நல்லா வாசிக்கிறதா, கேட்டவங்க சொல்றாங்க. பியானோ கத்துத் தரும் ஸ்கூல் ஆரம் பிக்கணும். அதான் இப்போ என் லட்சியம்!'' என்கிறார் ஆண்ட்ரியா. ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு... இவ்வளவு.... இவ்வளவு திறமை ஆகாதுங்க!

டேக் ஓ.கே!

தெலுங்கில் ஹிட் அடித்த 'புஜ்ஜிகாடு' படத்தில் நடித்த சஞ்சனா, 'இடம் வலம்' மூலமாகத் தமிழுக்கு நல் வரவுகிறார். " 'முத்திரை' இயக்குநர் ஸ்ரீநாத் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். 'தமிழுக்கு வா! அனுஷ்கா மாதிரி நீயும் பெரிய ஹீரோயின் ஆகலாம்'னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அனுஷ்கா மாதிரி வரணும்னெல்லாம் லட்சியம் கிடையாது. தமிழ்ப் படத்தில் நடிக்கணும்னு எனக்கே ஆசை. அதான் வந் துட்டேன். பாவம் ஸ்ரீநாத்... நான் இங்கே வர அனுஷ்காதான் காரணம்னு அப்பாவியா நம்பிட்டு இருக்கார்!'' என்று கண்ண டிக்கிறார் சஞ்சனா. இன்னுமா சஞ்சனாவை இந்த ஊர் நம்புது!

டேக் ஓ.கே!

'விஜய் டி.வி. ரம்யாவுக்கு ரகசிய காதல் திருமணம்' என்பதுதான் சேனல் வட்டாரக் சிசுகிசு (சின்னத்திரை கிசுகிசு!) "ஒரு வாரமா செல்போன்ல கல்யாண விசாரிப்புகள்தான். போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணா வதந்தியை நாமளே விசிறி விட்ட மாதிரி ஆகிடும். அதான் பொறு மையா ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிட்டு இருக்கேன். டெலிசினி மூலமா சொல்லிக்கிறேன், 'நான் யாரையும் காத லிக்கலை. வீட்ல சொல்ற மாப்பிள்ளையைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்!' '' என்கிறார் ரம்ஸ். ஹய்யோ... ஹய்யோ!

டேக் ஓ.கே!

" 'பசங்க' படத்துல 'சோபிக்கண்ணு' சூப்பரா நடிச்சிருக்காங்க!'ன்னு படத்தோட டைரக்டர் பாண்டிராஜ்கிட்டே ரஜினி சார் பாராட்டி னாராம். ரொம்ப ஹாப்பி. தெலுங்குல 'ஹவுஸ் ஃபுல்', ஹிந்தியில் 'ஆம்ராஸ்', 'ஐ யம் காட்'னு ஒரு இங்கிலீஷ் குறும்படம்னு நடிச்சுட்டு இருக்கேன். கோலிவுட், டோலிவுட் அப்படியே ஹாலிவுட்னு சோபிக்கப் போறா இந்த வேகாக்கண்ணு!''- சின்ன உருவமும் பெரிய சிரிப்புமாக ஈர்க்கிறார் வேகா. கௌம்பிட்டாங்கய்யா... கௌம்பிட்டாங்க!

டேக் ஓ.கே!

Continuum fingerboard என்கிற நவீன கீ-போர்டுதான் இசையுலகில் இப்போ லேட்டஸ்ட். அதில் கறுப்பு-வெள்ளை கட்டைகள் இருக்காது. டச் ஸ்க்ரீன் மொபைல் போல அதிலிருக்கும் ஸ்க்ரீனை விரலால் தொட்டே இசையை உருவாக்கலாம். இதுவரை இந்த கீ-போர்டை 'ட்ரீம் தியேட்டர்' ஜோர்டன் ரூடஸ் போன்ற இசை ஆளுமை உள்ள ஏழு இசை வல்லுநர்கள் மட்டுமே வாசித்து இருக்கிறார்கள். 'டெல்லி 6' ஹிந்திப் படத்தில் ஒரு பாடலுக்கு அதன் மூலம் இசையமைத்துச் சோதித்துப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் 'எந்திரன்' படத்தின் இசைக்கு அதில் மெட்டுக்கள் அமைத்திருக்கிறார்! ஐ ஆம் ஸிங் இன் த ரெய்ன்... ஸொய்ய்ங் இன் த ரெய்ன்!

டேக் ஓ.கே!

தமிழில் மீண்டும் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'! இந்த வஞ்சிக்கோட்டையைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களில் ஒன்று ஹீரோயின் ரோமா. "ஹீரோ ஷக்திக்கு சாக்லேட் மாதிரி ஒரு ஹீரோயின் பிடிக்கணும்னு யோசிச்சப்ப, மலையாளத்தில் ஹிட் அடிச்ச 'சாக்லேட்' பட ஹீரோயின் ரோமாதான் ஞாபகத்துக்கு வந்தாங்க. கேரளாவில் காவ்யா மாதவன், கோபிகா விட்டுட்டுப் போன இடத்தை இப்போ ரோமாதான் சிரிக்கச் சிரிக்க நிரப்பிட்டு இருக்காங்க!'' என்கிறார் படத்தின் இயக்குநர் ஜீவா. சொல்லவே இல்ல!

" 'இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்!' படத்தில் செவ்விந்தியப் பெண் கேரக்டர் எனக்கு. உடம்பெல்லாம் சாயம் பூசிட்டு, தலையில் கோழி றெக்கை வெச்சுக்கிட்டு 'ஹூர்ரே ஹா'ன்னு கத்திட்டு... எனக்கே விநோதமா இருந்துச்சு. கன்னடத்தில் பி.வாசு சார் இயக்கும் 'சந்திரமுகி பார்ட்- 2' படத்தில் மூணு சகோதரிகளைச் சுத்தி நடக்கிற அமானுஷ்ய விஷயங்கள்தான் கதை. அந்த மூணு பேரில் நானும் ஒருத்தி. முரட்டுச் சிங்கத்தில் 'ஹூர்ரே ஹா'ன்னா 'சந்திரமுகி'யில் 'வீல்ல்ல்ல்!'' என்கிறார் சந்தியா. நல்லாக் கௌப்புறாய்ங்கய்யா பீதிய!

டேக் ஓ.கே!

'யாவரும் நலம்' நீத்து சந்திராவுக்கு 'கெட்ட புள்ள' இமேஜ் இருந்தாலும், சமீபத்தில் ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொண்டு இருக்கிறார். நல்லாப் படிக்கும் பசங்களுக்கு உதவுவதுதான் அது. ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் மதிப்பான மதிப்பெண்கள் எடுத்த ப்ரியங் பரிக் என்ற மாணவருக்கு கார் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார் நீத்து. "இனி, வருஷா வருஷம் ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டருக்கு கார் வாங்கித் தர முடிவு பண்ணியிருக்கேன்!'' என்று சத்தியம் செய்கிறார் நீத்து. இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு!

யார்கிட்டேயும் சொல்லாதீங்க!

கழகம் பக்கம் கரை ஒதுங்கிய அந்தக் கவர்ச்சி நடிகை கோர்ட் படியேறாமல் கணவரைப் பிரிந்து வாழ ஆரம்பித்திருக்கிறார். விடாமல் துரத்திய டிஸ்கஷன் வாய்ப்புகளுக்குக் கணவர் தடையாக இருந்ததால் இந்தப் பிரிவாம்!

ப்ளூமேட் ஷூட்டிங் என்றாலே நடுங்குகிறார் மூன்றெழுத்து ஓங்குதாங்கு. ப்ளூமேட் காட்சிகளை வைத்து எளிதாக மார்ஃபிங் பண்ணிவிடலாம் என்பதால், 'வேண்டாம் மச்சான்!' என்று கேமராமேன்களைக் கெஞ்சிக் கொஞ்சுகிறார்.

கம்பீர படமும் கவுத்தியதால் ஒரு வாரம் தன் அலுவலகத்தைப் பூட்டிவிட்டார் சத்ய நடிகர். முந்தைய படம் ஓடாதபோது சென்டிமென்ட் பார்த்து ஆபீஸ் பாய் ஆரம்பித்து அத்தனை பேரையும் மாற்றினார் ஹீரோ. 'முதல்ல அவரை மாத்திக்கச் சொல்லுங்க!' என்று கேலி பேசுகிறது கோலிவுட்!

லேட்நைட் பார்ட்டிகளில் கலந்துகொண்டு காரியம் சாதிப்பதில் காதல் நடிகர் பி.ஹெச்டி., வாங்கிவிடுவார் போல. ஜாலி ஹோலி கொண்டாட்டங்கள் முடிந்து அரை மயக்கத்தில்தான் வீடு திரும்புகிறாராம்!

தற்கொலை செய்துகொண்ட நண்பருக்கு எக்கச்சக்கமாக செட்டில் செய்ய வேண்டுமாம் காமெடி. அதை மறைக்கத்தான் உடன் இருந்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம்!

 
டேக் ஓ.கே!
-(ஷாட் பிரேக்)
டேக் ஓ.கே!