"ரொம்ப நல்ல வாய்ப்புகள். இசையமைப்பாளராக என் பாடல்களைக் கேட்டுட்டு நீங்கதான் சொல்லணும்.
நான் சந்தோஷப்பட்ட படம் 'லக்'. ஒரு புது ஹீரோயினுக்கு முதல் படத்தில் திறமையைக் காண் பிக்க அவ்வளவா சந்தர்ப்பங்கள் அமையாது. ஆனா, நான் லக்கி. இந்தப் படத்தில் என் திறமையை நிரூபிக்க அவ்வளவு ஸ்கோப் இருக்கு. இன்னைக்கு பெண்கள் மத்தியில் இம்ரான், லேட்டஸ்ட் இதயத் திருடன். அவர் என் நண்பர். முதல் படத்தில் நண்பனே ஜோடியாக நடிக்கக் கிடைத்தது சந்தோஷமா இருக்கு. ஆக்ஷன், த்ரில்லர்னு போகிற படம் 'லக்'. படத்தில் எனக்கு ஃபைட் இருக்கு. நிறைய பிராக்டீஸ் பண்ணி முன்பைவிட இப்போ ஈஸியா பல்டி அடிக்கிறேன். சஞ்சய்தத், மிதுன்ஜின்னு உடன் நடிச்சவங்க எல்லாம் அப்பா பேருக்காக எனக்கு முழு சப்போர்ட் பண்ணினாங்க. அப்பா எவ்வளவு மனிதர்களையும் மரியாதையையும் சம்பாதிச்சு வெச்சிருக்கார்னு உணர்கிறேன்!''
"கமல் பொண்ணு என்பதாலேயே நிறைய வாய்ப்பு கிடைக்கும். அப்பாவுக்கு இருந்த போராட்டம், வலி இதெல்லாம் உணர முடியுதா?''
"இசை, மாடலிங், சினிமான்னு எல்லாமே என்னோட முயற்சிகள்தான். அப்பா எப்பவும் 'உன் வாழ்க்கையை நீதான் முடிவு பண்ணணும்'னு சொல்வார். அதில் பிடிவாதமாவும் இருப்பார். அதிகபட்சமா அப்பாவிடம் இருந்து அபூர்வமா ஆலோசனைகள் கிடைக்கும். எங்களைச் சுயமான பெண்களாகவே வளர்த்தார். 'லக்' படத்தின் கதையை மட்டும் கேட்டார். மற்றவை எல்லாமே என் முடிவு. என் திறமைகளின் மூலமாகவே நான் வாய்ப்பு களைத் தேடிக்கொள்கிறேன். அப்பாவின் பெயரை நான் பயன்படுத்துவது இல்லை. ஒரு விஷயம்... அப்பாவை யாரும் பின்பற்ற முடியாது. ஏன்னா... அவரை யாரும் காப்பியடிக்கவே முடியாது!''
"தமிழில் யாரோடு நடிக்க ஆசை?''
"அப்பாவோடு நடிக்கத்தான் ஆசை. ஏதாவது ஒரு கேரக்டரில் அவரோடு நடிக்க வேண்டும். மற்றபடி, ஒவ்வொரு ஹீரோவுக்கும் தனித்தனியாக இமேஜ், திறமைகள் இருக்கும். தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவருமே ஸ்பெஷல் தான். 'இவர்தான் என் ஃபேவரைட்'ன்னு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இது நழுவுற பதில் இல்லை. எல்லாரோடும் நடிக்க எனக்கு விருப்பம் உண்டு!''
|