Published:Updated:

சினிமா விமர்சனம்: முத்திரை

சினிமா விமர்சனம்: முத்திரை

பிரீமியம் ஸ்டோரி

01-07-09
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம்: முத்திரை
சினிமா விமர்சனம்: முத்திரை
 
சினிமா விமர்சனம்: முத்திரை
சினிமா விமர்சனம்: முத்திரை

குற்றவாளி முத்திரையைத் துடைக்க ஓடும் ஹைடெக் திருடர்களின் கதை!

டேனியல் பாலாஜி பக்கா புரொஃபஷனல் திருடன். நிதின் சத்யா லோக்கல் பிக்பாக்கெட். விதிவசத்தால் இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். அந்நேரம் சதிவசத்தால் முதல்வராகவிருக்கும் சரவணன் இறந்து போகிறார். அவர் கொலைக்கான ஆதாரம் அடங்கிய லேப்டாப் ஒன்று இந்தத் திருடர்களின் கைகளில் சிக்குகிறது. வில்லன், போலீஸ் சேஸிங் ரேஸிங்குக்கு நடுவே திருட்டுப் பயல்கள் தப்பினார்களா என்பது கிளைமாக்ஸ்!

சினிமா விமர்சனம்: முத்திரை

தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான 'கொலைக்கான ஆதாரம்' ஹீரோக்களிடம் சிக்கும் கதை. ஆதாரத்தை லேப்டாப்பில் ஒளித்துப் பயணித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத். லேப்டாப்பும் கையுமாக போலீசுக்குப் பயந்து சேத்தன் அலையும் காட்சிகள் கொஞ்சமாக லப்டப் எகிற வைக்கின்றன. ஆனால், தொடரும் காட்சிகளில் எந்தத் திருப்பமும் இல்லாததால் விருப்பம் இல்லாமலேயே கழிகின்றன தியேட்டர் பொழுதுகள்.

டேனியல் பாலாஜிக்கு வழக்கமான விறைப்பான முகம். அந்த விறைப்பும் முறைப்பும் காதல் காட்சிகளிலும் தொடர்வதால் அவருடைய முந்தைய சைக்கோ கேரக்டர்கள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை. நிதின் சத்யா சொற்ப இடங்களில் மட்டும் காமெடி கலாட்டா பண்ணுகிறார். மற்ற நேரமெல்லாம் கண்களை உருட்டிக் கொண்டிருப்பதோடு சரி! லட்சுமிராய், மஞ்சரி (அறிமுகம்) இருவரின் அதிரடி அஜெண்டா கவர்ச்சி மட்டுமே. பற்றாக்குறை ஆடைகளோடு பாதி நேரம் திரிகிறார்கள். இலவச ஜோடி திருமணத்தில் காசுக்காக டேனியல் கட்டிய தாலியை இடுப்பிலேயே கட்டிக் கொண்டு திரிகிறார் லட்சுமிராய். (தாலி சென்ட்டிமென்ட்!) மஞ்சரியோ பல படிகள் தவ்வித் தாண்டி 'சி.பி.ஐ. ஆபீஸர்' என்று நிதின் சொல்லும் பொய்யை நம்பி அவர் கொடுக்கும் 'முக்கிய' ஆதாரமான உடைந்த டாய்லெட் லீவரைக் கையில் வைத்துக் கொண்டே அலைகிறார். ஹீரோயின்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது!

வழக்கமான ரவுடி கேரக்டரில் இருந்து கமிஷனராக கிஷோரைப் பார்ப்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இறுதியில் அவரும் கமிஷன் கமிஷனராக முகம் காட்டுவது.... சேம் ப்ளட்!

அரசியல்வாதிக்கான உடையும் நடையும் பொன்வண்ணனுக்குக் கனகச்சிதம். லட்சுமிராயின் அப்பாவாக, கூட்டிக் கொடுக்கும் மாமாவாக ஹனீபா. சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை!

சினிமா விமர்சனம்: முத்திரை

தன் மகள் எங்கே இருக்கிறார், என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளாமலேயே அவளைக் கைகழுவும் மஞ்சரியின் அப்பா, சென்னைக்கு மிக அருகே மற்றவர்களுக்குத் தெரியாமல் ஆயுதங்களோடு திரியும் பழங்குடி மக்கள் (ஏதேனும் நைஜீரியா சினிமா பார்த்திருப்பார்களோ!) என படத்தில் பாதிக்கு மேல் விநோத கேரக்டர்கள்.

ஹீரோக்கள் கைக்கு லேப்டாப் இடைவேளையில்தான் வருகிறது. அதுவரை என்ன செய்வது என்று தெரியாமல் சும்மா சுத்தியடிக்கிறது திரைக்கதை. ஆனால், கிளைமாக்ஸில் அநியாயத்துக்குத் திருப்பங்களை உண்டாக்கித் திணறடிக்கிறார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசை என்று டைட்டில் கார்டு மட்டும் சொல்கிறது. ஒளிப்பதிவாளர் சலீமின் கேமரா சில இடங்களில் ஆச்சர்யப்படுத்துகிறது. மற்ற நேரங்களில் நாயகிகளின் ப்ளஸ்கள் மீதே லென்ஸ் பழியாகக் கிடக்கிறது.

திருட்டு முழியோடு அலையும் சேத்தன், அட்டு மேன்ஷனுக்குள் பளீரென விரியும் டேனியல் பாலாஜி அறை, முதல்வர் கொலை குறித்த சஸ்பென்ஸ் என்று சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் மட்டுமே பலம். ராக்கி சாவந்த், லட்சுமிராய், மஞ்சரி என அரைகுறை நாயகிகளால் படத்துக்கு அழுத்தமாக விழுவதென்னவோ கவர்ச்சி 'முத்திரை'தான்!

 
சினிமா விமர்சனம்: முத்திரை
- விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம்: முத்திரை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு