Published:Updated:

சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

Published:Updated:

 
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்
சினிமா விமர்சனம்
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்
பொக்கிஷம்
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

மொபைல், இ-மெயில், வெப் கேம், வாய்ஸ் சாட் இல்லாத காலத்தில் காதலி எழுதிய, காதலிக்கு எழுதிய கடிதங்களே 'பொக்கிஷம்'!

தன் தந்தை சேரன் பொக்கிஷமாகப் பாதுகாத்துவைத்திருந்த டைரியைப் புரட்டுகிறார் மகன் ஆரியன் ராஜேஷ். 1970-ல் கல்கத்தா துறைமுகத்தில் இன்ஜினீயராகப் பணிபுரியும் சேரன் முஸ்லிம் பெண்ணான பத்மபிரியாவுடன் கடிதங்கள் மூலமே காதல் வளர்க்கிறார். திருமணம் வரை காதல் கைகூடுகிறது. ஆனால், அதன் பிறகு சேரன் எழுதும் கடிதங்களுக்கு பத்மப்ரியாவிடம் இருந்து பதில் இல்லை. காரணம் அறிய நாகூருக்கு வந்தால், பத்மப்ரியாவின் குடும்பம் ஊரைக் காலி செய்து இருக்கிறது. அதன் பிறகும் 'என்றாவது ஒருநாள் படிப்பார்' என்கிற நம்பிக்கையில் பத்மப்ரியாவுக்குக் காதல் கடிதங்கள் எழுதிவைக்கிறார் சேரன். தந்தையின் முன்னாள் காதலி என்ன ஆனார் என்பதை அறியும் ஆர்வத்தோடு தேடும் ஆரியன் ராஜேஷ், மலேசியாவில் பத்மப்ரியாவைக் கண்டுபிடிக்கிறார். அவர் ஏன் அங்கே சென்றார்... சேரனுக்காக அவர் எதை விட்டுக்கொடுத்தார் என்ற அதிர்ச்சியோடு முடிகிறது படம்.

ஓர் அழைப்பிலேயே செல்போன் அட்டென்ட் செய்யாவிட்டால் கோபத்தில் கொந்தளிக்கும் இன்றைய காதலி, கடிதத்துக்குப் பதில் வருமா... வராதா என்றே தெரியாமல் மழை, வெயில் பாராமல் தபால் பெட்டி அருகே காத்திருக்கும் காதலன் எனக் கால மாற்றத்தை இயக்குநர் சேரன் கையாண்டு இருக்கும்விதம் அசத்தல்.

கதையின் நாயகனாக சேரன். அப்பாவை நினைத்துக் கவலையில் பதறுவதும், காதலுக்காக உருகுவதுமாக நடிப்பில் ஜொலிக்கிறார். எழுதிய கடிதம் சரியாகப் போய்ச் சேருகிறதா என்று போஸ்ட்மேனைப் பின்தொடர்ந்து கடிதங்கள் மூட்டையாகக் கட்டப்படும் வரை சேரன் காத்திருப்பதும், பதில் கடிதத்தை இருவரும் மறுபடி மறுபடி வாசிப்பதும் மழை நேரத் தேநீர் ரசனை. (ஆனால், அதுவே தொடர்ந்துகொண்டே இருப்பது ரொம்ப ஓவர்டோஸ்!) சேரனின் முதிர்ச்சியான முகம் சின்ன உறுத்தல்!

பர்தாவுக்குள் கொஞ்சமாகத் தெரியும் கண்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதிலும் பாசம், நட்பு, காதல், மிரட்சி, மகிழ்ச்சி என பத்மப்ரியாவை உணர்ச்சிகளைக் கொட்டவைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் சேரன். அவ்வப்போது வரும் அப்பா கேரக்டர் என்றாலும் நுணுக்கமான ரியாக்ஷன்களால் பிரமாதப்படுத்துகிறார் விஜயகுமார்.

சினிமா விமர்சனம் - பொக்கிஷம்

வைரபாலனின் ஆர்ட் டைரக்ஷனும் ராஜேஷ் யாதவின் கேமராவும் படத்தின் பெரும் பலம். சேரன், பத்மப்ரியா இருவருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு என்பதற்காக, கவியரங்கம் போல கவிதையாகவே கடிதம் எழுதுவது, பேசுவது, யோசிப்பது என முன்பாதி முழுக்க ஹேங் ஓவர்! பத்மப்ரியாவின் கடிதத்துக்காக சேரன் அலைபாயும் காட்சிகளில் படார் படாரெனக் குதிக்கும் பாடல்கள் ஃபீலிங்ஸ் ஃபீவரைக் குறைத்துக் கடுப்படிக்கிறது. முன்பாதி முழுக்க கடிதங்களை வாசித்துக் கொண்டே இருப்பது... ஆனாலும் டூமச்! பத்மப்ரியாவோடு பேசும் வரை வேறு எவரோடும் பேச மாட்டேன் என்ற சேரனின் மௌன விரதத்தை காலேஜ் வாட்ச்மேன் அடித்து உடைக்கும் இடத்தில் தெறித்த நகைச்சுவையை படம் முழுக்கவே தெளித்திருக்கலாம்!

ரயில் பயணத்தில் வாசித்து நேசிக்க நல்ல நாவல்தான். ஆனால், இழைத்து இழைத்துக் கோத்த டபுள் எக்ஸ்ட்ரா கவிதைத்தனம் 'பொக்கிஷத்தைக்' கொஞ்சம் அந்நியப்படுத்தி அதன் பளபளப்பைக் குறைக்கிறது!

 

 
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்
-விகடன் விமர்சனக் குழு
சினிமா விமர்சனம் - பொக்கிஷம்